Tuesday, August 11, 2026

ஆன்சலிவன் பயிற்சி மையத்தின் வாராந்திர மாதிரித்தேர்வு (9) பொதுப்பாட வினாவிடைகள்

குறிப்பு: *குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.


1 கூற்று (A): 101-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம், 2016-ன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஒரே நேரத்தில் மறைமுக வரிகளை விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டது.

 

காரணம் (R): அரசியலமைப்பு சரத்து 246A (Article 246A), சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சட்டங்களை இயற்ற பாராளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் (Concurrent power) அதிகாரத்தை வழங்குகிறது.

 

*(A) (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-வின் சரியான விளக்கமாகும்.

 

(B) (A) மற்றும் (R) இரண்டும் சரி; ஆனால் (R) என்பது (A)-வின் சரியான விளக்கமல்ல.

 

(C) (A) சரி; ஆனால் (R) தவறு.

 

(D) (A) தவறு; ஆனால் (R) சரி.

 

2. 'சத்தியசோதக் சமாஜ்' என்னும் அமைப்பை நிறுவியவர் யார்?

() ஸ்ரீ நாராயண குரு 

*() ஜோதிபா பூலே 

() அய்யன்காளி 

() அன்னி பெசன்ட் 

 

 

3. இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?

A) 1972

*B) 1986

C) 1995

D) 1953

 

 

4 ​ஆளுநரின் குடியரசுத் தலைவர் ஆட்சிப் பரிந்துரை (Art. 356) மற்றும் மாநில சட்டமன்றத்தைக் கலைத்தல் தொடர்பான பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

 

1. ​எஸ்.ஆர். பொம்மை வழக்கு (1994): மாநில அரசிற்குச் சட்டமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதா என்பதை ஆளுநர் தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது; அது சட்டமன்றத்தின் தளத்திலேயே (Floor Test) நிரூபிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

 

2. ​நபாம் ரேபியா வழக்கு (2016): ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள விருப்புரிமை அதிகாரம் வரம்பற்றது அல்ல; விதி 163-ன் கீழ் ஆளுநர் தனது அனைத்து அதிகாரங்களையும் தானாகவே பயன்படுத்த முடியாது, அது அமைச்சரவையின் ஆலோசனைக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

 

3. ​ஷம்ஷெர் சிங் வழக்கு (1974): ஆளுநர் என்பது குடியரசுத் தலைவரைப் போலவே அரசியலமைப்பு ரீதியான பெயரளவுத் தலைவரே தவிர, அமைச்சரவையின் ஆலோசனையின்றித் தன்னிச்சையாக இணையான அரசாங்கத்தை நடத்த முடியாது எனத் தீர்ப்பளித்தது.

 

மேற்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?

 

​(A) 1 மற்றும் 2 மட்டும்

 

(B) 2 மற்றும் 3 மட்டும்

 

(C) 1 மற்றும் 3 மட்டும்

 

*(D) 1, 2 மற்றும் 3 (அனைத்தும்)

 

5. இந்திய தகவல் தொடர்புத் துறை குறித்த கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க:

1.    இந்திய அஞ்சல் துறை 1837 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

2.    விரைவு அஞ்சல் சேவை 1972 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

3.    அகில இந்திய வானொலி 1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1957 முதல் 'ஆகாசவாணி' எனப் பெயரிடப்பட்டது.

A) 1 மற்றும் 2 மட்டும் சரி

B) 2 மற்றும் 3 மட்டும் சரி

*C) 1 மற்றும் 3 மட்டும் சரி

D) 1, 2 மற்றும் 3 அனைத்தும் சரி

 

6. ஜோதிபா பூலே குறித்த பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

() 1852 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்

() இவர் எழுதிய நூல் 'குலாம்கிரி' (அடிமைத்தனம்) ஆகும்

*() குழந்தைகள் திருமணத்தை ஆதரித்து, விதவை மறுமணத்தை எதிர்த்தார்

() பெற்றோர் இல்லா குழந்தைகளுக்கு விடுதிகளையும் விதவைகளுக்குக் காப்பகங்களையும் உருவாக்கினார்

 

 

7, திருக்குறளில் எந்த சொல் ஒருமுறை கூட பயன்படுத்தப்படவில்லை.?

*A தமிழ்.

B கடவுள்.

C அறம்.

D மக்கள்.

 

 

8 GST கவுன்சில் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

 

(A) சரத்து 279A-ன் படி குடியரசுத் தலைவரால் GST கவுன்சில் அமைக்கப்படுகிறது.

 

(B) ஜி.எஸ்.டி கவுன்சிலின் தலைவராக மத்திய நிதி அமைச்சர் செயல்படுவார்.

 

*(C) கவுன்சில் கூட்டத்தின் குறைந்தபட்ச உறுப்பினர்கள் எண்ணிக்கை (Quorum) மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு (1/3) ஆகும்.

 

(D) கவுன்சிலின் தீர்மானங்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களின் நான்கில் மூன்று பங்கு (3/4) பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

 

9 கூற்று (A): ஒரு மாநிலத்தில் முதலமைச்சர் ராஜினாமா செய்தாலோ அல்லது பதவியில் இருக்கும்போது மரணமடைந்தாலோ, மாநில அமைச்சரவை தானாகவே கலைந்துவிடும் (Dissolved).

 

காரணம் (R): முதலமைச்சர் அமைச்சரவையின் "தூண்" (Keystone of the Cabinet Arch) போன்றவர்; அமைச்சரவையை உருவாக்குவதும், இயக்குவதும், முடிவுக்குக் கொண்டுவருவதும் முதலமைச்சரின் தலைமையே ஆகும்.

 

​*(A) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

 

(B) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் (R) கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

 

(C) கூற்று (A) சரி, ஆனால் காரணம் (R) தவறு.

 

(D) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

10. பொருத்துக;

 இந்தியாவின் முக்கிய துறைமுகங்களையும் அவை அமைந்துள்ள மாநிலங்களையும் சரியாகப் பொருத்துக:

a) மர்மகோவா - 1. ஒடிசா

b) பாரதீப் - 2. மகாராஷ்டிரா

c) நவ சேவா - 3. குஜராத்

d) காண்ட்லா - 4. கோவா

*A) 4, 1, 2, 3

B) 2, 4, 1, 3

C) 4, 3, 2, 1

D) 1, 4, 3, 2

 

11. 'நியூ இந்தியா' (New India) மற்றும் 'காமன்வீல்' (Commonweal) ஆகிய செய்தித் தாள்களை நடத்தியவர் யார்?

() மேடம் H. P. பிளாவட்ஸ்கி 

() கர்னல் H. S. ஆல்ட்காட் 

*() அன்னி பெசன்ட் 

() சாவித்திரிபாய் பூலே 

 

12 பொருத்துக

 

பட்டியல் I (குழுக்கள்/அமைப்புகள்) - பட்டியல் II (பங்கு/பரிந்துரை)

 

(a) விஜய் கேல்கர் குழு - 1. GST கூட்டமைப்புக் குழுவின் முதல் தலைவர்

 

(b) அசிம் தாஸ்குப்தா - 2. 13-வது நிதிக்குழுவின் கீழ் GST மாதிரியைப் பரிந்துரைத்தது

 

(c) அரவிந்த் சுப்பிரமணியன் குழு - 3. வருவாய் நடுநிலை விகிதத்தை (Revenue Neutral Rate) பரிந்துரைத்தது

 

(d) N.K. சிங் குழு - 4. FRBM மறுஆய்வுக் குழு

 

*(A) a-2, b-1, c-3, d-4

 

(B) a-1, b-2, c-3, d-4

 

(C) a-2, b-3, c-1, d-4

 

(D) a-4, b-1, c-2, d-3

 

13 ​மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது (Art. 200) மற்றும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது (Art. 201) தொடர்பான கூற்றுகளில் எது/எவை தவறானவை?

 

1. ​ஆளுநர் ஒரு மசோதாவை மறுபரிசீலனைக்குத் திருப்பி அனுப்பும்போது, அதற்கான காலக்கெடு அரசியலமைப்பில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

 

2. ​ஆளுநர் ஒரு சாதாரண மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஒதுக்கி வைக்கும் போது (Reserved for President's Consideration), குடியரசுத் தலைவர் அம்மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது ஒப்புதலை நிறுத்தி வைக்கலாம்.

 

3. ​குடியரசுத் தலைவர் ஒரு மாநில மசோதாவைத் திருப்பி அனுப்பச் சொன்னால், மாநில சட்டமன்றம் அதனை 6 மாதங்களுக்குள் மறுபரிசீலனை செய்து மீண்டும் நிறைவேற்ற வேண்டும். சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினாலும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பது கட்டாயமில்லை.

 

​(A) 1 மட்டும் தவறு

 

(B) 2 மற்றும் 3 மட்டும் தவறு

 

(C) 1 மற்றும் 3 மட்டும் தவறு

 

*(D) எதுவுமில்லை (அனைத்து கூற்றுகளும் சரியானவை)

 

14, ஆகாறு அலவிட்டிராயினும் கேடில்லை போகாரு அகலா கடை இக்குறள் எதனை குறிப்பிடுகிறது.?

A அதிகமாக சம்பாதிக்க வேண்டும்.

*B வருமாணம் சிறியதாக இருந்தாலும் செலவினை கட்டுபடுத்த வேண்டும்.

C தாணம் செய்ய வேண்டும்.

D கடன்பட கூடாது.

 

15. பிரம்மஞான சபை பற்றிய பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

1. மேடம் H. P. பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H. S. ஆல்ட்காட் ஆகியோரால் 1875 இல் அமெரிக்காவில் நிறுவப்பட்டது.

2. 1886 இல் இச்சபையின் தலைமையகம் இலங்கைக்கு மாற்றப்பட்டது.

3. இந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில் இச்சபை முக்கியப் பங்காற்றியது.

 

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

() 1 மட்டும் சரி 

*() 1 மற்றும் 3 சரி 

() 2 மற்றும் 3 சரி 

() அனைத்தும் சரி 

 

16 பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

 

1. மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தின் மீது விதிக்கப்படும் IGST மத்திய அரசால் வசூலிக்கப்பட்டு மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

 

2. IGST-லிருந்து மாநிலங்களுக்குப் பிரிக்கப்படும் பங்கு இந்தியத் தொகுப்பு நிதியில் (Consolidated Fund of India) சேராது.

 

3. அரசியலமைப்பு சரத்து 269A மாநிலங்களுக்கு இடையேயான விற்பனை மீதான IGST விதிப்பு பற்றிக் கூறுகிறது.

 

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

 

(A) 1 மற்றும் 2 மட்டும்

 

(B) 2 மற்றும் 3 மட்டும்

 

(C) 1 மற்றும் 3 மட்டும்

 

*(D) 1, 2 மற்றும் 3

 

17. இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலையான NH-44 எந்த இரு நகரங்களை இணைக்கிறது?

A) வாரணாசி மற்றும் கன்னியாகுமரி

*B) ஸ்ரீநகர் மற்றும் கன்னியாகுமரி

C) போர்பந்தர் மற்றும் சில்சார்

D) டெல்லி மற்றும் கொல்கத்தா

 

 

18, ஒரு நாட்டின் செல்வம் எதனால் அழியும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.?

A போரிடுவதால்.

B அதிக வரி விதிப்பதால்.

C இயற்கை சீற்றத்தால்.

*D முறை தவறி அல்லது தீய வழியில் செல்வம் சேர்த்தால்.

 

19 ​கூற்று (A): முதலமைச்சர் மாநில நிர்வாகத்தின் உண்மையான தலைவர் (De facto executive) ஆவார்.

 

காரணம் (R): மாநில அமைச்சரவையின் தலைவராக முதலமைச்சர் செயல்படுவதோடு, அமைச்சர்களை நியமிக்கவும் நீக்கவும் ஆளுநருக்குப் பரிந்துரைக்கும் அதிகாரம் படைத்தவர்.

 

​*(A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, (R) என்பது (A)-வின் சரியான விளக்கம்.

 

(B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-வின் சரியான விளக்கமல்ல.

 

(C) (A) சரி, ஆனால் (R) தவறு.

 

(D) (A) தவறு, ஆனால் (R) சரி.

 

20. சுவாமி விவேகானந்தர் குறித்த கூற்றுகளில் தவறானதைத் தேர்ந்தெடுக்க:

() நடைமுறை வேதாந்தமான "மனிதகுலத்திற்குத் தொண்டு செய்தல்" என்ற கோட்பாட்டைப் பரிந்துரைத்தார்

() 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் பங்கேற்றார்

*() மரபுசார்ந்த தத்துவ நிலைப்பாடுகளில் முழு மனநிறைவு பெற்று அதை மட்டுமே பின்பற்றினார்

() ஒடுக்கப்பட்ட மக்களும் இந்து சமயச் சடங்குகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்

 

 

21 பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி வரிசைப்படுத்துக:

 

1. முதன்முதலில் ஜி.எஸ்.டி அமல்படுத்திய நாடு (பிரான்ஸ்)

 

2. இந்தியாவில் ஜி.எஸ்.டி-க்கான 122-வது அரசியலமைப்பு திருத்த மசோதா அறிமுகம்

 

3. GST கவுன்சில் அமைப்பதற்கான சரத்து 279A அமலுக்கு வருதல்

 

4. இந்தியாவில் ஜி.எஸ்.டி சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படல்

 

*(A) 1 - 2 - 3 - 4

 

(B) 1 - 3 - 2 - 4

 

(C) 2 - 1 - 3 - 4

 

(D) 1 - 2 - 4 - 3

 

22 அரசியலமைப்பு விதி 361-ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்படும் சிறப்பு உரிமைகள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

 

​(A) ஆளுநர் தனது அதிகாரங்கள் மற்றும் கடமைகளைச் செய்வதற்காக எந்தவொரு நீதிமன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டியதியதில்லை.

 

(B) ஆளுநரின் பதவிக் காலத்தில் அவர் மீது எந்தவொரு குற்றவியல் வழக்கையும் (Criminal Proceedings) எந்த நீதிமன்றத்திலும் தொடர முடியாது.

 

(C) ஆளுநரின் பதவிக் காலத்தில் அவரைக் கைது செய்யவோ அல்லது சிறையிலடைக்கவோ எந்த நீதிமன்றமும் ஆணை பிறப்பிக்க முடியாது.

 

*(D) ஆளுநரின் தனிப்பட்ட செயல்களுக்காக அவர் மீது சிவில் வழக்குகளை (Civil Proceedings) எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி உடனடித் தொடரலாம்.

 

23, பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார்.?

A மழை ..

B நெசவு.

*C விவசாயம்.

D உற்ப்பத்தி.

24. கூற்று: 19-ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் சமூகத் தீமைகளைக் கட்டுப்படுத்த உதவினர்

 காரணம்: ஆங்கிலக் கல்வி பயின்ற நடுத்தர வர்க்கம் மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கத்தைப் பெற்றது

 

 ) கூற்று சரி, காரணம் தவறு 

 ) கூற்று தவறு, காரணம் சரி 

 *) கூற்று, காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது 

 ) கூற்று, காரணம் இரண்டும் தவறு 

 

 

25 GST கவுன்சிலில் வாக்களிக்கும் அதிகாரப் பகிர்வு (Voting Power) குறித்துச் சரியான கூற்று எது?

 

(A) மத்திய அரசின் வாக்கு மதிப்பீடு மொத்த வாக்குகளில் 1/2 பங்காகும்.

 

*(B) அனைத்து மாநில அரசுகளின் மொத்த வாக்கு மதிப்பீடு 2/3 பங்காகும்.

 

(C) மத்திய அரசின் வாக்கு மதிப்பீடு 1/4 பங்காகும்.

 

(D) மாநில அரசுகளுக்கு வாக்குரிமை கிடையாது, பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.

 

26 பின்வருபவர்களில் யாரை மாநில ஆளுநர் நியமனம் செய்ய மாட்டார்?

 

1. ​மாநில தலைமை வழக்கறிஞர் (Advocate General of the State)

 

2. ​மாநில தேர்தல் ஆணையர் (State Election Commissioner)

 

3. ​மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் (TNPSC Chairman & Members)

 

4. ​மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் (High Court Judges)

 

​(A) 1 மற்றும் 2

 

(B) 3 மற்றும் 4

 

*(C) 4 மட்டும்

 

(D) 3 மட்டும்

 

27. பிரம்ம சமாஜம் பற்றிய கூற்றுகளை ஆராய்க: 1. ராஜா ராம்மோகன் ராய் மேலைநாட்டு அறிவியலை ஆதரித்தார். 2. தேவேந்திரநாத் மிதமான சீர்திருத்தவாதி. 3. 1829-ல் சதி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

) 1, 2 சரி

) 2, 3 சரி

*) அனைத்தும் சரி

) அனைத்தும் தவறு

 

28, வறுமை குறித்து வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார்.?

A வருமை இறைவனால் தரப்பட்டது.

B வருமை பொருமை தரும்.

C வருமை இருந்தால்தான் அறிவு வளரும்.

*D வருமை ஒரு கொடிய நோய் (பாவம்).

 

29 அரசியலமைப்பு சரத்து 366(12A)-ன் படி, "சரக்கு மற்றும் சேவை வரி" என்பதன் வரையறையிலிருந்து முழுமையாக விலக்களிக்கப்பட்ட பொருள் எது?

 

(A) கச்சா எண்ணெய் (Crude Oil)

 

(B) பெட்ரோல் மற்றும் டீசல்

 

*(C) மனித நுகர்வுக்கான மதுபானம் (Alcohol for human consumption)

 

(D) விமான எரிபொருள் (ATF)

 

30 ​ஒரு மாநிலத்தில் தேர்தலுக்குப் பின் ஆட்சியமைப்பதில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் (Hung Assembly), ஆளுநர் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் பின்பற்ற வேண்டிய முன்னுரிமை வரிசையைச் சரியாக வரிசைப்படுத்துக:

 

1. தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்.

 

2. சட்டப்பேரவையில் தனிப்பெரும்பான்மை பெற்ற ஒற்றைக் கட்சியின் தலைவர்.

 

3. ​தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட கூட்டணிக் கட்சியின் தலைவர்.

 

4. ​பிற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற சுயேச்சை அல்லது பிற தலைவர்கள்.

 

​*(A) 2-3-1-4

 

(B) 3-2-1-4

 

(C) 2-1-3-4

 

(D) 1-2-3-4

31. 3. கூற்று: ராம்மோகன் ராய் உருவ வழிபாட்டை எதிர்த்தார். காரணம்: உபநிடதங்கள் ஒருகடவுள் வழிபாட்டை போதிப்பதாகக் கூறினார்.

*) கூற்று, காரணம் இரண்டும் சரி; காரணம் கூற்றை விளக்குகிறது.

) கூற்று சரி, காரணம் தவறு.

) கூற்று தவறு, காரணம் சரி.

) கூற்று, காரணம் இரண்டும் தவறு

 

32,ஒரு நாட்டின் அரசன் பெற்றிருக்க வேண்டிய நான்கு முக்கிய பன்புகளாக வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார்.?

A படை ,குடி ,கூள் ,அமைச்சு.

*B அஞ்சாமை ,ஈகை ,அறிவு ,ஊக்கம்.

C தூது ,படை ,அரன்,நட்பு.

D கல்வி ,கேள்வி ,அடக்கம் ,அறிவு.

33. இந்திய ரயில்வே அமைப்பு குறித்த கீழ்க்காணும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:

1.    இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் 1853 இல் மும்பைக்கும் தானேவுக்கும் இடையே இயக்கப்பட்டது.

2.    தென் மத்திய ரயில்வேயின் தலைமையிடம் சென்னையில் அமைந்துள்ளது.

3.    கொங்கண் ரயில்வே திட்டம் மகாராஷ்டிராவின் ரோகாவிலிருந்து கர்நாடகாவின் மங்களூரு வரை அமைக்கப்பட்டுள்ளது.

A) 1, 2 மட்டும் சரி

*B) 1, 3 மட்டும் சரி

C) 2, 3 மட்டும் சரி

D) 1, 2, 3 அனைத்தும் சரி

 

34 E-Way Bill தொடர்பான பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

 

1. மாநிலத்திற்குள்ளும் அல்லது மாநிலங்களுக்கு இடையேயும் ₹50,000-க்கு மேல் மதிப்பிலான சரக்குகளைக் கொண்டு செல்ல -வே பில் கட்டாயமாகும்.

 

2. இது ஜிஎஸ்டி போர்ட்டல் மூலம் மின்னணு முறையில் உருவாக்கப்படும் ஒரு ஆவணமாகும்.

 

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

 

(A) 1 மட்டும்

 

(B) 2 மட்டும்

 

*(C) 1 மற்றும் 2 இரண்டும்

 

(D) இரண்டும் இல்லை

 

35 முதலமைச்சர் பின்வரும் எந்த அமைப்புகளின் தலைவராக அல்லது உறுப்பினராகச் செயல்படுகிறார்?

 

1. ​மாநிலத் திட்டக் குழுவின் தலைவர் (State Planning Board)

 

2. ​மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் (SDMA)

 

3. ​மண்டலக் குழுவின் (Zonal Council) சுழற்சி முறைத் துணைத் தலைவர் (Vice-Chairman)

 

4. ​மாநிலக் கொள்கை வளர்ச்சிக்குழுவின் தலைவர்

 

​(A) 1 மற்றும் 2 மட்டும்

 

(B) 1, 2 மற்றும் 4 மட்டும்

 

(C) 2, 3 மற்றும் 4 மட்டும்

 

*(D) 1, 2, 3 மற்றும் 4 (அனைத்தும்)

 

36. 4. கூற்று 1: 1828-ல் கொல்கத்தாவில் உருவச்சிலைகள் இல்லாத கோயிலை ராஜா ராம்மோகன் ராய் நிறுவினார். கூற்று 2: தேவேந்திரநாத் தாகூர் 'இந்திய பிரம்ம சமாஜம்' தொடங்கினார். கூற்று 3: கேசவ் சந்திர சென் மகளின் திருமணத்தால் 'சாதாரண சமாஜ்' உருவானது. கூற்று 4: பிரம்ம சமாஜம் கீழ்த்தட்டு மக்களை ஈர்த்தது.

) 1, 2, 3 சரி

*) 1, 3 மட்டும் சரி

) 2, 3, 4 சரி

) அனைத்தும் சரி.

 

37, திருக்குறளின் படி ஒரு நாட்டின் ஆறு அங்கங்கள் எவை.?

A வெதங்கள் ,புராணங்கள் ,சட்டங்கள் ,நீதீ ,தண்டனை ,வரி.

B மண்ணன், மக்கள், நிலம், நீர், காற்று, ஆகாயம்.

*C படை, குடி, கூழ், அமைச்சு,அரன், நட்பு.

D அறம், பொருள், இன்பம், வீடு, புகழ், கல்வி.

 

38 GST அமல்படுத்தப்பட்டதன் மூலம் மத்திய மற்றும் மாநில அளவில் நீக்கப்பட்ட/இணைக்கப்பட்ட வரிகளில் எவை சரியானவை?

 

1. சேவை வரி (Service Tax)

 

2. மத்திய கலால் வரி (Central Excise Duty)

 

3. மாநில மதிப்புக்கூட்டு வரி (State VAT)

 

4. சுங்க வரி (Basic Customs Duty)

 

(A) 1, 2 மற்றும் 4 மட்டும்

 

*(B) 1, 2 மற்றும் 3 மட்டும்

 

(C) 2, 3 மற்றும் 4 மட்டும்

 

(D) அனைத்தும் (1, 2, 3, 4)

 

39 ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரங்களை ஒப்பிடும் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

 

1. ​மரண தண்டனையைக் குடியரசுத் தலைவரால் மட்டுமே முழுமையாக மன்னிக்க (Pardon) முடியும்; ஆளுநரால் மரண தண்டனையை முழுமையாக மன்னிக்க முடியாது (ஆனால் தண்டனையைக் குறைக்கவோ/ஒத்திவைக்கவோ முடியும்).

 

2. ​ராணுவ நீதிமன்றம் (Court Martial) விதிக்கும் தண்டனைகளை ஆளுநரால் மன்னிக்க முடியும்.

 

​*(A) 1 மட்டும் சரி

 

(B) 2 மட்டும் சரி

 

(C) 1 மற்றும் 2 இரண்டும் சரி

 

(D) இரண்டும் தவறு

 

40, ஒரு தூதுவருக்கு இருக்க வேண்டிய  மூன்று தகுதிகளாக வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார்.?

*A அறிவு உருவம் கல்வி.

B வீரம் செல்வம் குலம் .

C நட்பு பகை நடுவுநிலமை.

D வேகம் விவேகம் வெற்றி.

41. 5. பொருத்துக: 1.பிரார்த்தனை சமாஜம்-A)1884 2.விதவை மறுமணச் சங்கம்-B)1870 3.புனே சர்வாஜனிக் சபா-C)1861 4.தக்காணக் கழகம்-D)1867. *)1-D,2-C,3-B,4-A

)1-A,2-B,3-C,4-D

)1-B,2-A,3-D,4-C

)1-C,2-D,3-A,4-B

 

42 GST-ன் பண்புகள் மற்றும் விளைவுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

 

1. இது வரிகள் மீதான வரியை (Cascading Effect of Tax) நீக்குகிறது.

 

2. 'உள்ளீட்டு வரி வரவு' (Input Tax Credit - ITC) என்பது விநியோகச் சங்கிலியில் செலுத்தப்பட்ட முந்தைய வரியைத் திரும்பப் பெறும் வசதியாகும்.

 

3. GST அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவில் நேரடி வரிகளின் பங்கு கணிசமாகக் குறைந்துள்ளது.

 

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

 

*A) 1 மற்றும் 2 மட்டும்

 

B) 2 மற்றும் 3 மட்டும்

 

C) 1 மற்றும் 3 மட்டும்

 

D) 1, 2 மற்றும் 3

 

43. ஒளி ஒரு ஊடகத்தில் இருந்து மற்றொரு ஊடகத்திற்கு செல்லும் போது எந்த படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது?

A. 0 டிகிரி

B. 45 டிகிரி

*C. 90 டிகிரி

 

44 ஆளுநர் பதவி தொடர்பான மத்திய-மாநில உறவுகள் குழுக்களின் பரிந்துரைகள் பற்றிய பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

 

1. ​சர்க்காரியா ஆணையம்: ஆளுநராக நியமிக்கப்படுபவர் மாநிலத்திற்கு வெளியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் மற்றும் தீவிர அரசியலில் ஈடுபடாதவராக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

 

2. ​பூஞ்சி ஆணையம்: ஆளுநரை நியமிக்கும் போது சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சரைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும், ஆளுநரைப் பதவிநீக்கம் செய்யப் நாடாளுமன்றப் பதவிநீக்க நடைமுறை (Impeachment) போன்ற முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியது.

 

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

 

​(A) 1 மட்டும்

 

(B) 2 மட்டும்

 

*(C) 1 மற்றும் 2 இரண்டும்

 

(D) எதுவுமில்லை

 

45. டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாக பயன்படுவது யாது?

*A. குழியாடி

B. குவியாடி

C. சமதள ஆடி

 

46, வள்ளுவர் ஒற்றர்களை எதனுடன் ஒப்பிடுகிறார்.?

A அரசனின் கால்கள்.

B அரசனின் நிழல்.

C அரசனின் கைகள்.

*D அரசனின் கண்கள்.

 

47 கூற்று (A): GST என்பது ஒரு 'முனைப் புள்ளி வரி' (Destination-based tax) மற்றும் நுகர்வு சார்ந்த வரியாகும்.

 

காரணம் (R): GST வரியானது பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் வசூலிக்கப்படாமல், நுகரப்படும் மாநிலத்திற்கே சென்று சேர்கிறது.

 

*A) (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-வின் சரியான விளக்கமாகும்.

 

B) (A) மற்றும் (R) இரண்டும் சரி; ஆனால் (R) என்பது (A)-வின் சரியான விளக்கமல்ல.

 

C) (A) சரி, ஆனால் (R) தவறு.

 

D) (A) தவறு, ஆனால் (R) சரி.

 

48. பெரிதான மாய பிம்பங்களை உருவாக்குவது

*A. குழியாடி

B. குவியாடி

C. சமதள ஆடி

 

49, பிறருக்கு உதவி செய்யும் செல்வந்தரை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்.?

A ஆழமான கடல்.

B சிறிய குளம்.

*C ஊரூணி.

D பாலைவணம்.

 

50 மாநிலச் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு வரும்போது, அவர் செய்யக்கூடிய பின்வரும் நடவடிக்கைகளில் சரியானவை எவை?

 

1. மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கலாம்.

 

2. ​ஒப்புதலை நிறுத்தி வைக்கலாம் (Withhold assent).

 

3. ​பண மசோதாவைத் தவிர பிற மசோதாக்களை மறுபரிசீலனை செய்ய சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பலாம்.

 

4. ​குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக மசோதாவை ஒதுக்கி வைக்கலாம்.

 

​(A) 1, 2 மற்றும் 3 மட்டும்

 

(B) 1, 3 மற்றும் 4 மட்டும்

 

(C) 2, 3 மற்றும் 4 மட்டும்

 

*(D) 1, 2, 3 மற்றும் 4 (அனைத்தும்)

 

 

 

51 GST சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சரியான வரிசையைத் தேர்ந்தெடுக்கவும்:

 

1. IGST சட்டம்

 

2. CGST சட்டம்

 

3. UTGST சட்டம்

 

4. GST (மாநிலங்களுக்கான இழப்பீடு) சட்டம்

 

A) 2 - 1 - 3 - 4

 

B) 1 - 2 - 3 - 4

 

C) 2 - 3 - 1 - 4

 

*D) இவை அனைத்தும் ஒரே நேரத்தில் ஏப்ரல் 2017-ல் நிறைவேற்றப்பட்டன.

 

52. ஒளியின் திசைவேகம் ______இல் பெருமமாக உள்ளது.

*A. வெற்றிடத்தில்

B. கண்ணாடியில்

C. வைரத்தில்

 

53, சமுகத்தில் ஈகை என்பது எதனை குறிக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார்.?

A புகலுக்காக கொடுப்பது.

B கடனாக கொடுப்பது.

*C இல்லாதவர்களுக்கஉ கொடுப்பது.

D உறவினர்களுக்கு கொடுப்பது.

 

54 முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை பற்றிய பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

 

1. முதலமைச்சரின் பரிந்துரையின் பேரிலேயே ஆளுநர் பிற அமைச்சர்களை நியமிக்கிறார்.

 

2. ​91-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் (2003)-ன் படி, முதலமைச்சர் உட்பட மாநில அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் 15%-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 

3. ​ஒரு மாநிலத்தில் முதலமைச்சர் உட்பட குறைந்தபட்ச அமைச்சர்களின் எண்ணிக்கை 12 பேருக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

 

4. அமைச்சரவை தனிப்பட்ட முறையில் மாநில சட்டமன்றத்திற்குப் பொறுப்புடையது.

 

​(A) 1 மற்றும் 2 மட்டும் சரி

 

*(B) 1, 2 மற்றும் 3 மட்டும் சரி

 

(C) 2, 3 மற்றும் 4 மட்டும் சரி

 

(D) அனைத்தும் சரி

 

 

 

 

55 பொருத்துக

 

பட்டியல் I (GST வகைகள்) - பட்டியல் II (செயல்படும் முறை)

 

a) CGST - 1. யூனியன் பிரதேசங்களுக்குள் நடைபெறும் விற்பனை

 

b) SGST - 2. மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் விற்பனை

 

c) IGST - 3. மாநிலத்திற்குள்ளான விற்பனையில் மத்திய அரசுப் பங்கு

 

d) UTGST - 4. மாநிலத்திற்குள்ளான விற்பனையில் மாநில அரசுப் பங்கு

 

*A) a-3, b-4, c-2, d-1

 

B) a-4, b-3, c-2, d-1

 

C) a-3, b-2, c-4, d-1

 

D) a-1, b-2, c-3, d-4

 

56. முப்பத்தகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாடும்போது அது

A. எதிரொளிக்கும்

*B. விலகல் அடையும்

C. விலகல் அடையாது

 

57, சமுகத்தில் புறங்கூறுதல் பற்றி வள்ளுவர் எதனை குறிப்பிடுகிறார்.?

A மெதுவாக பெசவேண்டும்.

B மற்றர்களின் குறைகளை மட்டும் பேசவேண்டும்

*C நேரில் கசப்பாக பேசினாலும் வின்னால் பேசகூடாது.

D சிரித்துகொண்டெ பேசவேண்டும்.

 

58 பொருத்துக

 

பட்டியல் I (அரசியலமைப்பு விதிகள்) - பட்டியல் II (விஷயம்/அதிகாரம்)

 

a) விதி 156 - 1. ஆளுநரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம்

 

b) விதி 161 - 2. ஆளுநரின் பதவிக் காலம்

 

c) விதி 164 - 3. முதலமைச்சரின் கடமைகள்

 

d) விதி 167 - 4. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நியமனம்

 

*(A) a-2, b-1, c-4, d-3

 

(B) a-1, b-2, c-3, d-4

 

(C) a-2, b-4, c-1, d-3

 

(D) a-4, b-1, c-2, d-3

 

 

59 விநியோகச் சங்கிலியில் (Supply Chain) GST கணக்கிடப்படும் வரிசையைச் சரியாக அடுக்கவும்:

 

1. நுகர்வோருக்குப் பொருள் விற்பனை செய்யப்படுதல்.

 

2. உற்பத்திப் பொருளின் மீது உள்ளீட்டு வரி வரவு (ITC) கோருதல்.

 

3. 3.மூலப்பொருட்களை வாங்கும் போது ஜிஎஸ்டி செலுத்துதல்.

 

4. மதிப்புக் கூட்டப்பட்ட தொகைக்கு மட்டும் நிகர வரியை அரசுக்குச் செலுத்துதல்.

 

*A) 3 - 2 - 4 - 1

 

B) 1 - 3 - 2 - 4

 

C) 3 - 1 - 2 - 4

 

D) 2 - 3 - 4 - 1

 

60, உன்மையான நட்ப்பிற்க்கு வள்ளுவர் கூறும் உவமை எது.?

A நீர் போன்றது.

*B உடுக்கை இழந்தவன் கை.

C மலர் பொன்றது.

D நிழல் பொன்றது.

 

61 ​மாநில ஆளுநரின் அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம் (Art. 213) தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

 

​(A) சட்டமன்றம் கூட்டத்தொடரில் இல்லாதபோது மட்டுமே ஆளுநரால் அவசரச்சட்டம் பிறப்பிக்க முடியும்.

 

(B) ஆளுநரின் அவசரச்சட்டம், மாநில சட்டமன்றம் மீண்டும் கூடிய தேதியிலிருந்து 6 வாரங்களுக்குள் முடிவுக்கு வரும்.

 

*(C) குடியரசுத் தலைவரின் முன்அனுமதி தேவையில்லாமல் எந்தவொரு பொருளிலும் ஆளுநரால் தன்னிச்சையாக அவசரச்சட்டம் பிறப்பிக்க முடியும்.

 

(D) ஆளுநர் விரும்பினால் எந்நேரத்திலும் அவசரச்சட்டத்தைத் திரும்பப் பெறலாம்.

 

62 GST-ன் கீழ் உள்ள ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (IGST) தொடர்பான கூற்றுகளை ஆராய்க:

 

1. மாநிலங்களுக்கு இடையேயான (Inter-state) வணிகம் மற்றும் இறக்குமதிக்கு IGST விதிக்கப்படுகிறது.

 

2. IGST-ஐ மத்திய அரசு வசூலித்து, நுகர்வு மாநிலத்திற்குப் பகிர்ந்தளிக்கிறது.

 

3. இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு 269A IGST பற்றி விளக்குகிறது.

 

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

 

A) 1 மற்றும் 2 மட்டும்

 

B) 2 மற்றும் 3 மட்டும்

 

C) 1 மற்றும் 3 மட்டும்

 

*D) அனைத்தும் சரி

 

63, யாருடன் நட்பு கொள்வது துன்பத்தை தரும் என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.?

A அறிவுடையார்.

*B பேதமை உடையார்.

Cவரியவர்.

D பன்பில்லான்.

 

 

64 கூற்று (A): ஆளுநர் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராக இருந்தாலும், அமைச்சரவையின் ஆலோசனையின்றித் தன்னிச்சையாகச் செயல்படும் சில அரசியலமைப்புச் சார்ந்த தன்னாட்சி அதிகாரங்களைப் (Constitutional Discretion) பெற்றுள்ளார்.

 

காரணம் (R): இந்திய அரசியலமைப்பின் 163(1) விதியின் படி, ஆளுநருக்குத் தன்னாட்சி அதிகாரம் உள்ளதா இல்லையா என்ற கேள்வி எழும்போது ஆளுநரின் முடிவே இறுதியானது.

 

*(A) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

 

(B) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் (R) கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

 

(C) கூற்று (A) சரி, ஆனால் காரணம் (R) தவறு.

 

(D) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

 

 

 

65 கூற்று (A): பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மனித நுகர்வுக்கான மதுபானம் ஆகிய இரண்டும் தற்போதைய GST வரம்பிற்குள் உடனடியாக சேர்க்கப்பட்டுள்ளன.

 

காரணம் (R): GST கவுன்சிலின் 3/4 பங்கு பெரும்பான்மை முடிவின் மூலம் மட்டுமே இவற்றை GST வரம்பிற்குள் கொண்டுவர முடியும்.

 

A) (A) மற்றும் (R) இரண்டும் சரி.

 

B) (A) மற்றும் (R) இரண்டும் தவறு.

 

*C) (A) தவறு, ஆனால் (R) சரி.

 

D) (A) சரி, ஆனால் (R) தவறு.

 

66, திருக்குறளிள் பயன் படுத்தப்படாத உயிர் எழுத்து எது?.

A, நாஐ.

B, .

*C, .

D, .

 

67 பொருத்துக

 

பட்டியல் I (பழைய வரிகள்) - பட்டியல் II (வரி வகை)

 

a) சேவை வரி (Service Tax) - 1. மாநில மறைமுக வரி

 

b) மதிப்பு கூட்டு வரி (VAT) -2. மத்திய மறைமுக வரி

 

c) நுழைவு வரி (Entry Tax) - 3. மத்திய மறைமுக வரி

 

d) மத்திய கலால் வரி (Central Excise) - 4. மாநில மறைமுக வரி

 

*A) a-2, b-1, c-4, d-3

 

B) a-1, b-2, c-3, d-4

 

C) a-3, b-4, c-1, d-2

 

D) a-2, b-4, c-1, d-3

 

68, திருக்குறள் எந்த எழுத்தில் தொடங்குகிறது?.

A, .

*B, .

C, .

D, .

 

69 GST மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (GSTAT - GST Appellate Tribunal) பற்றிய பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

 

1. GST தொடர்பான தகராறுகளை விரைவாகத் தீர்க்க மத்திய அரசு ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை அமைக்க சட்டப் பிரிவு 109 வழிவகை செய்கிறது.

 

2. இதன் முதன்மை அமர்வு (Principal Bench) புதுடெல்லியில் அமைந்துள்ளது.

 

3. இந்தத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து எந்த நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியாது.

 

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

 

*A) 1 மற்றும் 2 மட்டும்

 

B) 2 மற்றும் 3 மட்டும்

 

C) 1 மற்றும் 3 மட்டும்

 

D) 1, 2 மற்றும் 3

 

70, பொறுட்பாலில் உள்ள அங்கவியல் எனும் பகுதியில் உள்ள மொத்த அதிகாரங்களின் என்னிக்கை எத்தனை?.

A, 38.

B, 25.

*C, 32.

D, 35.

 

 

71 GST-ல் உள்ள முக்கிய அடுக்குகள் (Tax Slabs) மற்றும் அவற்றுக்கான உதாராணங்களைப் பொருத்துக:

 

பட்டியல் I (வரி அடுக்கு) - பட்டியல் II (பொருட்கள் / சேவைகள்)

 

a) 0% (வரி விலக்கு) - 1. சொகுசு கார்கள் மற்றும் புகையிலைப் பொருட்கள்

 

b) 5% - 2. பாக்கெட் செய்யப்படாத அத்தியாவசிய உணவுப் பொருட்கள்

 

c) 18% - 3. சர்க்கரை, தேயிலை, பாக்கெட் செய்யப்பட்ட பால் பொருட்கள்

 

d) 28% - 4. மூலதனப் பொருட்கள் மற்றும் தொழிற்துறைச் சேவைகள்

 

*A) a-2, b-3, c-4, d-1

 

B) a-3, b-2, c-1, d-4

 

C) a-2, b-4, c-3, d-1

 

D) a-1, b-3, c-4, d-2

 

72, திறுக்குறளிள் பயன்படுத்தப்பட்ட மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை யாது?.

A, 14755.

B, 13300.

*C, 42194.

D, 12000.

 

 

73 கூற்று (A): GST அமலாக்கத்திற்குப் பின் இந்தியாவில் "ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி" (One Nation, One Market, One Tax) என்ற இலக்கு சாத்தியமாகியுள்ளது.

 

காரணம் (R): மாநில எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள் (Check posts) நீக்கப்பட்டு, பொருட்களின் தடையில்லாப் போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

*A) (A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A)-வின் சரியான விளக்கமாகும்.

 

B) (A) மற்றும் (R) இரண்டும் சரி; ஆனால் (R) என்பது (A)-வின் சரியான விளக்கமல்ல.

 

C) (A) சரி, ஆனால் (R) தவறு.

 

D) (A) தவறு, ஆனால் (R) சரி.

 

 

74, திறுவள்ளுவரை உலக புலவர் என்று போற்றியவர் யார்?

A, மறைமலையடிகள்.

*B, ஜி,யூ, போப்.

C, வீரமாமுனிவர்.

D, எல்லிஷ்.

75, இயற்றலும் ,ஈட்டலும் ,காத்தலும் ,காத்த வகுத்தலும் வல்லதரசு என்ற குறளில் வகுத்தல் என்பதன் பொருள் என்ன.?

A வரி வசுலித்தல்.

B கணக்கு பார்த்தல்.

*C செல்வத்தை பிரித்து செலவிடுதல்.

D செல்வத்தை பதுக்கி வைத்தல்.