குறிப்பு: * குறியிடப்பட்டவை
சரியான விடைகள் எனக்கொள்க.
தமிழ் வினாக்கள்
1.
கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் செயப்பாட்டு வினைத் தொடரைத் தெரிக.
ஏட்டில் எழுதாத
இசைப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன.
ஏட்டில் எழுதிவிடாத
இசைப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன.
*ஏட்டில் எழுதப்படாத
இசைப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன.
ஏட்டில்
எழுதிவைக்காத இசைப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன.
2. சரியான பிறவினைச்
சொல்லைத் தெரிக.
மாடுகளின் கழுத்திலே
பூவும் தழையும்
சூடுவர்
*சூட்டுவர்
சூடப்படும்
சூட்டப்படும்
3. சரியான தொடரைத்
தெரிக.
*நம் தலைக்கு மேலே
போர் மேகங்கள் சூழ்ந்துவிட்டன
நம் தலைக்கு மேலே
போர் மேகங்கள் சூழ்ந்துவிட்டது
நம் தலைக்கு மேலே
போர் மேகங்கள் சூழ்கிறது
நம் தலைக்கு மேலே
போர் மேகங்கள் சூழத் தொடங்கியது
4. மயங்கொலிப்
பிழையற்ற தொடரைத் தெரிக.
அதியமானின் படைக்
கருவிகள் எல்லாம் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் <கரைகளுடன்
நுனி ஒடிந்தும், கூர் மழுங்கியும் கொல்லனின் உலைக் <கலத்தில் கிடக்கின்றன.
அதியமானின் படைக்
கருவிகள் எல்லாம் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் >கறைகளுடன்
நுனி ஒடிந்தும், கூர் மழுங்கியும் கொல்லனின் உலைக் <கலத்தில் கிடக்கின்றன.
அதியமானின் படைக்
கருவிகள் எல்லாம் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் <கரைகளுடன்
நுனி ஒடிந்தும், கூர் மழுங்கியும் கொல்லனின் உலைக் >களத்தில் கிடக்கின்றன.
*அதியமானின் படைக்
கருவிகள் எல்லாம் பகைவர் உடலைத் துளைத்த குருதிக் >கறைகளுடன்
நுனி ஒடிந்தும், கூர் மழுங்கியும் கொல்லனின் உலைக் >களத்தில் கிடக்கின்றன.
5. வட்டாரம் என்ற
சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல் எது?
Dilect
*locality
Circle
Rural
6. சொல்லுக சொல்லில்
பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலாச்
சொல்
குறளில் பயின்றுள்ள
அணியைத் தெரிக.
சொல்பின்வரு நிலையணி
தீவக அணி
*சொற்பொருள் பின்வரு
நிலையணி
வேற்றுமையணி
7. வணிகர்
என்பதற்கான சரியான ஆங்கிலச் சொல் எது?
Salesman
*merchant
Shop keeper
Consumer
8. பொருத்துக.
அ. மாடுகள் 1. கொட்டிள்
ஆ.
படைக்கருவிகள் 2. குவியல்
இ. கற்கள் 3. தொழுவம்
ஈ. தானியங்கள் 4. களஞ்சியம்
3 2 4 1
*3 1 2 4
3 4 2 1
2 3 4 1
8. சரியான அகர
வரிசையைத் தெரிக.
தெரிவை, அரிவை, பேதை, மங்கை, பெதும்பை, மடந்தை, குறுமகள்
குறுமகள், பெதும்பை, அரிவை, மங்கை,
மடந்தை, பேதை, தெரிவை,
அரிவை, குறுமகள், தெரிவை, பெதும்பை,
பேதை, மடந்தை, மங்கை
*அரிவை, குறுமகள், தெரிவை, பெதும்பை,
பேதை, மங்கை, மடந்தை
9. வேறுபட்ட தொடரைத்
தெரிக.
நாளை அமைச்சர் மதுரை
வருகிறார்
செல்லமாய் வாலாட்டி
நன்றி கூறுகிறான் மணி.
*கூரை வேயவும்,
கூடை முடையவும் கற்றுக்கொண்டேன்.
உணவு உண்டு, பால் குடித்தேன்.
10. மிகச் சரியான
தொடரைத் தெரிக.
ஓர் அழகு கவிதை
எழுதப் பிடிக்கும் எனக்கு பறவை பற்றி
ஓர் அழகு பறவை எழுத
பற்றி எனக்குப் பிடிக்கும் கவிதை.
*ஓர் அழகு பறவை
பற்றி எனக்குக் கவிதை எழுதப் பிடிக்கும்.
ஓர் கவிதை பற்றி
பறவை எழுத எனக்கு அழகு பிடிக்கும்.
11. யோகம் என்ற
சொல்லின் பொருள்
நோன்பு
வரம்
இலக்கு
*தவம்
12. ‘ஒப்புரவு’
சரியான எதிர்ச்சொல் தெரிக.
ஒழுக்கமின்மை
*சமத்துவமின்மை
கண்ணியம் பேணாமை
கண்ணோட்டமின்மை
13. சந்திப்
பிழையற்ற தொடரைத் தெரிக.
*காணும் பொங்கலில்
குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர்.
காணும் பொங்கலில்
குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்கு சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர்.
காணும்ப் பொங்கலில்
குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதை கழிப்பர்.
காணும் பொங்கலில்
குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்கு சென்று மகிழ்வுடன் பொழுதை கழிப்பர்.
14. வேறுபட்ட
சொல்லைத் தெரிக.
ஆக்கம்
*பணம்
செல்வம்
பொருள்
15. ஆழக்
கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்
சமர் என்ற
சொல்லுக்குப் பொருத்தமான இணை எது?
பரவை-ஆழி
பழனம்-கழனி
செறுநர்-பகைவர்
*போர்-யுத்தம்
16. பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
வணிகத்தைத் தரைவழி
வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம். தரைவழியாகப் பொருள்களைக்
கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை
போன்ற விலங்குகளும் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன. வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை
ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள். இக்குழுவை
வணிகச்சாத்து என்பர். கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை அனுப்புவதும்
வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும். கப்பல்கள் வந்து நின்றுபோகும் இடங்கள்
துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும்
குறிக்கப்பட்டன.
தமிழ்நாட்டின்
தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு
நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம்
வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி
செய்யப்பட்டன.
வண்டிகளில்
பொருட்களை ஏற்றி வெளியூர் செல்லும் வணிகக் குழுவுக்கு என்ன பெயர்?
வியாபாரிகள் குழு
வைசியர் குழு
*வணிகச் சாத்து
உமணர் குழு
17. வணிகத்தைத்
தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம்.
தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகளும் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன. வணிகர்கள்
வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள்.
இக்குழுவை வணிகச்சாத்து என்பர். கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை
அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும். கப்பல்கள் வந்து நின்றுபோகும்
இடங்கள் துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும்
குறிக்கப்பட்டன.
தமிழ்நாட்டின்
தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு
நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம்
வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி
செய்யப்பட்டன.
பூம்புகார் ஒரு
பட்டினம்
*துறைமுகம்
பாக்கம்
கடல் நகரம்
18. வணிகத்தைத்
தரைவழி வணிகம், நீர்வழி வணிகம் எனப் பிரிக்கலாம்.
தரைவழியாகப் பொருள்களைக் கொண்டு செல்ல எருது, கழுதை, குதிரை போன்ற விலங்குகளும் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன. வணிகர்கள்
வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்குச் செல்லும் போது குழுவாகவே செல்வார்கள்.
இக்குழுவை வணிகச்சாத்து என்பர். கடல்வழியாகக் கப்பல்கள் மூலம் பொருள்களை
அனுப்புவதும் வரவழைப்பதும் நீர்வழி வணிகம் ஆகும். கப்பல்கள் வந்து நின்றுபோகும்
இடங்கள் துறைமுகங்கள் ஆகும். துறைமுக நகரங்கள் பட்டினம் என்றும் பாக்கம் என்றும்
குறிக்கப்பட்டன.
தமிழ்நாட்டின்
தலைசிறந்த துறைமுகமாகப் பூம்புகார் விளங்கியது. அவ்வூர்த் துறைமுகத்தில் பல்வேறு
நாட்டுக் கப்பல்கள் தத்தம் நாட்டுக் கொடிகளோடு வந்து நின்றன. அவற்றின் மூலம் வெளிநாட்டுப்
பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. தமிழ்நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதி
செய்யப்பட்டன.
பத்திக்குப்
பொருத்தமான தலைப்பிடுக.
வணிகத்தின் வகைகள்
*இருவழி வணிகம்
நீர்வழி வணிகம்
செழித்த வணிகம்
19.பின்வரும்
கூற்றுகளை கவனிக்க:
1. மனிதர்களின் உயர்வு
அவர்களின் உள்ள ஊக்கத்தின் அளவினைப் பொறுத்தது.
2. மனிதர்களின்
உயர்வு அவர்களின் செல்வத்தின் அளவினைப் பொறுத்தது.
மேலுள்ள கூற்றுகளில்
சரியானது எது?
*(A) 1 மட்டும் சரி
(B) 2 மட்டும் சரி
(C) 1 மற்றும் 2 இரண்டும் சரி
(D) 1 மற்றும் 2 இரண்டும் தவறு
20.கூற்று மற்றும்
காரணம்
(A): ஊக்கம்
இல்லாதவர்க்கு பொருள் உடைமை இருந்தாலும் அது நிலையானதல்ல.
(R): ஊக்கமுடையவர்க்கு
உள்ளமே நிலையான உடைமையாகும்.
*(A) A மற்றும் R
இரண்டும் சரி; R என்பது A-க்கு சரியான விளக்கம்
(B) A மற்றும் R
இரண்டும் சரி; R என்பது A-க்கு விளக்கம் அல்ல
(C) A மட்டும் சரி;
R தவறு
(D) A தவறு;
R சரி
21.பொருத்துக
பட்டியல் – I
| பட்டியல் – II
A. மலரின் நீளம் |
1. நீரின் அளவு
B. மனிதர் உயர்வு |
2. ஊக்கத்தின் அளவு
C. உயர்வு எண்ணுதல் |
3. விடக்கூடாது
D. சிதைவிலும் உறுதி
| 4. தளராமை
A. a4b2c1d3
B. a4b2c3d1
C.a4b3c2d1
*D. a1b2c3d4
22.பின்வரும்
இணைகளில் தவறானது எது?
(A) ஊக்கம்
இல்லாதவர் – வள்ளியம் இல்லை
(B) யானை – புலியை
அஞ்சும்
*(C) புலி – பலவீனம்
(D) ஊக்கம் – வலிமை
23. அவ்வையார்
இயற்றிய நீதி நூல்களில், 'வாக்குண்டாம்' என்ற பெயரால் அழைக்கப்படும் சிறப்புப் பெயர் கொண்ட நூல் எது?
அ) ஆத்திச்சூடி
ஆ) கொன்றை வேந்தன்
இ) நல்வழி
* ஈ) மூதுரை
24. சங்க கால
அவ்வையாரையும், 'மூதுரை' இயற்றிய
பிற்கால அவ்வையாரையும் வேறுபடுத்திக் காட்டும் முதன்மையான காரணி எது?
அ) அவர்கள் பாடிய
கடவுள்
*ஆ) அவர்கள் வாழ்ந்த காலம்
மற்றும் இலக்கிய நடை
இ) அவர்கள் பிறந்த
ஊர்
ஈ) அவர்கள்
பயன்படுத்திய தமிழ் எழுத்துமுறை
25.பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரனார் 'மக்கள் கவிஞர்' என
அழைக்கப்படக் காரணமாக இப்பாடலில் வெளிப்படும் முதன்மையான பண்பு எது?
அ) கடினமான
சொற்களைப் பயன்படுத்துதல்
* ஆ) எளிய தமிழில்
சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைக் கூறுதல்
இ) சங்க காலத்
தமிழைப் பின்பற்றுதல்
ஈ) இயற்கையைப்
பற்றிப் பாடுதல்
26."ஏட்டில்
படித்ததோடு இருந்து விடாதே - நீ ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே" -
இதில் கவிஞர் எதனை வலியுறுத்துகிறார்?
அ) தேர்வில் அதிக
மதிப்பெண் பெறுதல்
ஆ) படித்ததைப்
புத்தகத்திலேயே வைத்திருத்தல்
* இ) கல்வியைப்
பயனுள்ள செயல்களாக மாற்றுதல்
ஈ) பல புத்தகங்களைச்
சேகரித்தல்
27.பெருவாயின்
முள்ளியார் குறிப்பிடும் "எட்டு வித்துகள்" (ஒழுக்கத்தின் விதைகள்)
எதனைக் குறிக்கின்றன?
அ) எட்டு வகை
நவதானியங்கள்
* ஆ) எட்டு வகையான
அறச்செயல்கள்
இ) எட்டு வகையான
போர் முறைகள்
ஈ) எட்டு வகையான
இயற்கை வழிபாடுகள்
28."திராவிட
நாட்டின் வானம்பாடி" என்று முடியரசனைப் பாராட்டியவர் யார்?
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
* இ) பேரறிஞர் அண்ணா
ஈ) நாமக்கல் கவிஞர்
29. மாசற எதிர்ச்சொல் தருக.
அ)மகிழ்ச்சி இல்லாமல்.
ஆ) குற்றம் இல்லாமல்
*இ) குற்றத்துடன்
ஈ) உண்மையாக
30. சீர்தூக்கின் பொருள் தருக.
அ) மாமா வீட்டு சீர்.
*ஆ) ஒப்பிட்டு ஆராய்தல்
இ) முரண்பட்டு ஆராய்தல்.
ஈ) எடை அளவு
31. பதினைந்து பிரித்து எழுதுக.
*அ) பத்து+ஐந்து
ஆ) பதிற்று+ஐந்து
இ) பதின்+ஐந்து.
ஈ) பதின்+அத்து+ஐந்து
32. அரசுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
அ)அரச+உடைமை .
ஆ) அரசு+இன்+உடைமை
இ) அரச்+உடைமை.
*ஈ) அரசு+உடைமை
33. கீழ்க்காணும் சொற்களில் பொருந்தாததை தேர்ந்தெடு.
அ) கண்டம்
*ஆ) அன்னம்
இ) தஞ்சம்
ஈ) தென்றல்
34. சரியான கூற்றை காண்க.
1) ஐ என்ற எழுத்துக்கு இ என்பது இன எழுத்து ஆகும்.
1) ஔ
என்ற எழுத்துக்கு ஓ என்பது இன எழுத்து ஆகும்.
*அ) கூற்று 1சரி 2தவறு
ஆ) கூற்று 1தவறு 2சரி
இ) கூற்று 1,2 சரி.
ஈ) கூற்று 1, 2 தவறு
35. எட்டு+நாழி சேர்த்து எழுதுக.
அ) எட்டு நாழி
ஆ) எட்டுணாழி
*இ) எண்ணாழி
ஈ) எட்டே நாழி
36.
1) ண -
நாவின் நுனி மேல் வாய் அண்ணத்தின் முன்பகுதி
2) ன -
நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடி
2) ந. -
நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப்பகுதி
அ) 2 3 1
ஆ) 1 2
3
இ) 3 2
1
*ஈ) 3 1 2
37. தவறான கூற்றைத் தேர்ந்தெடு
1) அண்மை
சுட்டுக்குறிய எழுத்து அ ஆகும்
2) சேய்மை
சுட்டுக்குரிய எழுத்து இ ஆகும்.
3) உது, உவன் போன்ற சொற்கள் தற்காலத்தில் பயன்பாட்டில் இல்லை.
அ) 1,2 சரி 3 தவறு
*ஆ) 1,2 தவறு 3 சரி
இ) 1,2,3 சரி
இ) 1,2,3 தவறு
38. பின்வருவனவற்றுள்
மாறுபட்டுள்ளதை கண்டறிக.
அ) எங்கு
ஆ) யாருக்கு
*இ) பேசலாமா.
ஈ) ஏன்
39. பொருத்தமான
இணைப்புச் சொல்லைத் தெரிக.
உண்மை உறங்கலாம்.
மறிப்பதில்லை.
ஆனால்
எனவே
இருந்தும்
என்றாலும்
40. harvest என்பதன் சரியான தமிழாக்கம் தெரிக.
விதைத்தல்
அறுத்தல்
*அறுவடை
கதிரடித்தல்
பொதுப்பாட வினாக்கள்:
1 திட்டக்குழு
தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1 இது ஒரு அரசாங்க
தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
2 இதன் தலைவராகப்
பிரதமர் பதவி வழி (Ex-officio) செயல்படுவார்.
3 மாநில
முதலமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
*A) 1 மற்றும்
2 மட்டும்
B) 2 மற்றும்
3 மட்டும்
C) 1 மற்றும்
3 மட்டும்
D) அனைத்தும் சரி
2. பின்வரும் குப்த்த அரசர்களில் முதன்முதலாக யாருடைய உருவம் நாணயங்களில்
இடம்பெற்றுள்ளது?
A] சமுத்திரகுப்தர்
B] முதலாம் சந்திரகுப்தர்
C] இரண்டாம் சந்திரகுப்தர்,
*D] ஸ்ரீ குப்தர்
,
3. பொருந்தாதவற்றைத் தேர்ந்தெடுக்க.
1. வேள்விக்குடி பட்டயம்,
2.தளவாய்புரம் செப்பேடு,
3. லெய்டன் பட்டயம்
4.சின்னமனூர் சாசனம்,
அ. 1, 2
ஆ. 3, 4
இ. 2 மட்டும்
*ஈ. 3 மட்டும்
4. பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு
*A.
பெருவெடிப்பு
B.
இயற்கை நிகழ்வு
C.
அணுவெடிப்பு
D.
எதுவும் இல்லை
5. கூற்று பிரசஸ்தி என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு புகழுரை என்பது பொருள்
காரணம் ஹரி, சேனரை பற்றிய புகழுரைகள் அலகாபாத் தூண்
கல்வெட்டில் காணப்படுகிறது
A] கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றை காரணம் விளக்குகிறது
*B] கூற்று சரி காரணம் தவறு
C] கூற்று தவறு காரணம் சரி
D] கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி கூற்றை காரணம் விளக்கவில்லை
6. கொற்கையின் அரசர் என்று
போற்றப்படுபவர் யார்?
அ. வரகுணன்
ஆ. நன்மாறன்
இ. முதுகுடுமி பெருவழுதி
*ஈ. நெடுஞ்செழியன்
7.
இரு வான் பொருள்களுக்கு இடையே உள்ள தொலைவை அளக்க உதவும் அளவு
*A.
ஒளியாண்டு
B.
பெருவெடிப்பு
C.
சுழல்தல்
D.
பால்வெளி
8
பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி அடுக்குக:
1
மக்கள் திட்டம்
2
பம்பாய் திட்டம்
3
விஸ்வேஸ்வரய்யா திட்டம்
4
சர்வோதயா திட்டம்
*A) 3 - 2 - 1 - 4
B) 2 - 3 - 4 - 1
C) 3 - 1 - 2 - 4
D) 4 - 2 - 1 - 3
9. தனது பெயர்ப் பொறித்த நாணயம்
வெளியிட்ட சேர மண்ணர் யார்?
அ. உதயன் சேரலாதன்
ஆ. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
இ. சேரன்செங்குட்டுவன்
*ஈ. சேரல்இரும்பொறை
10. சமுத்திரகுப்தரின் படையெடுப்புகள் குறித்த கூற்றுகளை ஆராய்க:
1. சமுத்திரகுப்தர் வட இந்தியாவில் 9 அரசுகளைக்
கைப்பற்றினார்.
2. தென்னிந்தியாவில் பல்லவ மன்னன் விஷ்ணுகோபனைத் தோற்கடித்தார்.
3. தென்னிந்தியாவைச் சேர்ந்த 12 அரசர்களைத் தனது நேரடி
ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார்.
4. அஸ்ஸாம், நேபாளம் மற்றும் பஞ்சாப் அரசர்கள் இவரது
மேலாதிக்கத்தை ஏற்றனர்.
A) 1, 2 மட்டும் சரி
* B) 1, 2,
4 மட்டும் சரி
C) 1, 3 மட்டும் சரி
D) அனைத்தும் சரி
11.
மகர ரேகையில் சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழும் நாள்
A. March 21
B. June 21
C.
செப்டம்பர் 23
*D.
டிசம்பர் 22
12
கூற்று (A): திட்டக்குழு ஒரு அரசியலமைப்புச்
சட்டம் சாராத அமைப்பாகும்
காரணம்
(R): இது நாடாளுமன்றத்தின் சட்டத்தினால் உருவாக்கப்படாமல், மத்திய அமைச்சரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
*A)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கு
சரியான விளக்கம்.
B)
(A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கு
சரியான விளக்கமல்ல.
C)
(A) சரி, ஆனால் (R) தவறு.
D)
(A) தவறு, ஆனால் (R) சரி.
13. பல வைதீக சடங்குகளை செய்த
நினைவாக நாணயங்களை வெளியிட்டவர் யார்?
அ. வரகுணன்
ஆ. நன்மாறன்
*இ. முதுகுடுமி
பெருவழுதி
ஈ. நெடுஞ்செழியன்
14. தவறான கூற்றைத் தேர்க
A] பாஹியான் குறிப்புகள் குப்தர் கால மக்களின் சமூக, பொருளாதார
நிலைகளை விளக்குகின்றன.
B] குப்தர் காலத்தில் தண்டனைகள் கடுமையாக வழங்கப்படவில்லை.
*C] மகத நாட்டு மக்கள் வறுமையின் காரணமாக மகிழ்ச்சியின்றி வாழ்ந்தனர்.
D] பாஹியான் வருகையின் போது கபிலவஸ்து ஒரு அடர்ந்த காடாக மாறியிருந்தது.
15.
மனிதன் தான் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்
A.
செவ்வாய்
*B.
சந்திரன்
C.
புதன்
D.
வெள்ளி
16
திட்டக்குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர்களில் 'இந்தியக் குடியரசுத் தலைவராக' உயர்ந்தவர் யார்?
A)
வி.வி. கிரி
*B)
பிரணாப் முகர்ஜி
C)
ஆர். வெங்கட்ராமன்
D)
சங்கர் தயாள் சர்மா
17.எந்த ஊருக்கு அருகே உள்ள வெண்ணி என்ற சிறிய
கிராமத்தில் சேரர், பாண்டியர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக
இருந்த பதினொரு வேளிர் தலைவர்களின் கூட்டுப் படையை கரிகாலன் தோற்கடித்தார்.
அ. உரையூர்
ஆ. பூம்புகார்
*இ. தஞ்சாவூர்
ஈ. கங்கைக் கொண்ட சோழபூரம்
18.
எந்த கோளால் தண்ணீரில் மிதக்க இயலும்?
A.
வியாழன்
*B.
சனி
C.
யுரேனஸ்
D.
நெப்டியூன்
19. கூற்று (A): பாலாதித்யர் மிகிரகுலருக்குக் கப்பம்
கட்டுவதை நிறுத்தினார்.
காரணம் (R): மிகிரகுலர் பௌத்த மதத்தைப் பகைமையோடு பார்த்ததால் பாலாதித்யர் மனவேதனை
அடைந்தார்.
*A] கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான
விளக்கமாகும்.
B] கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான
விளக்கமல்ல.
C] கூற்று (A) சரி, ஆனால் காரணம்
(R) தவறு.
D] கூற்று (A) தவறு, ஆனால் காரணம்
(R) சரி.
20 1938-ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
தலைமையில் அமைக்கப்பட்ட தேசிய திட்டக்குழுவின் தலைவர் யார்?
A) வல்லபாய் படேல்
*B) ஜவஹர்லால் நேரு
C) லால் பகதூர் சாஸ்திரி
D) எஸ்.என். அகர்வால்
21. ஆய் அண்டிரன் என்னும் குறுநில
மன்னன் தன்னை நாடி
வந்தவர்களுக்கு வாரி வழங்கிய
யானைகளின் எண்ணிக்கை " வால்மீன்
பல பூப்பின் ஆனாது மன்னே" என்று கூறியவர்யார்?
*அ. ? முடமோசியார்
ஆ. கபிலர்
இ. ஔவையார்
ஈ. மோசிகீரனார்
22. கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
A) தெய்வீக உரிமைக் கோட்பாடு – அரசர் கடவுளின்
பிரதிநிதி.
B) மந்திரி குழு – இளவரசர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்.
*C) பதில் சொல்லக் கடமைப்பட்டவர் – பொதுமக்கள் மற்றும்
குடிமக்கள்.
D) மகாதண்டநாயகர் – உயர் பதவியில் அமர்த்தப்பட்ட
அதிகாரி.
23
பொருத்துக;
பட்டியல்
I (திட்டம்) - பட்டியல் II (முக்கிய நோக்கம்/தொடர்பு)
(a)
விஸ்வேஸ்வரய்யா திட்டம் - 1. வேளாண்மை மற்றும்
கிராமப்புறப் பொருளாதாரம்
(b)
பம்பாய் திட்டம் - 2 நுகர்வு பொருட்களை விட
கனரக தொழில்களுக்கு முக்கியத்துவம்.
(c)
காந்திய திட்டம் - 3. தொழில்மயமாக்கல் மூலம்
தேசிய வருமானத்தை இரட்டிப்பாக்குதல்
(d)
மக்கள் திட்டம் - 4. மக்களின் அடிப்படைத்
தேவைகளை அரசு பூர்த்தி செய்தல்
*A) (a)-3, (b)-2, (c)-1, (d)-4
B) (a)-3, (b)-1, (c)-2, (d)-4
C) (a)-1, (b)-2, (c)-3, (d)-4
D) (a)-2, (b)-4, (c)-1, (d)-3
24. பொருத்துக
1. பாரி - பொதிகை
மலை
2. காரி - தகடூர்
3. ஆய் அந்திரன் - பழனி மலை
4. பேகன் - பரம்பு
மலை
5. அதியமான் - திருக்கோயிலூர்
அ. 4 5 1 2
3
ஆ. 4 3 1 2
5
*இ. 4 5 1 3 2
ஈ. 4 5 3 1
2
25. கூற்று (A): குப்த அரசர்கள் அரசியல், ராணுவம் மற்றும் நீதித்துறையில் அளப்பரிய அதிகாரத்தைக் கொண்டிருந்தனர்.
காரணம் (R): அவர்கள் மற்றவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை எனும்
கோட்பாட்டைக் கடைப்பிடித்தனர்.
*A) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி; காரணம் (R), கூற்றிற்கான
(A) சரியான விளக்கமாகும்.
B) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி; ஆனால் காரணம் (R), கூற்றிற்கான (A) சரியான விளக்கமல்ல.
C) கூற்று (A) சரி; ஆனால் காரணம்
(R) தவறு.
D) கூற்று (A) தவறு; ஆனால் காரணம்
(R) சரி.
26
திட்டக்குழுவின் கட்டமைப்பு குறித்த பின்வரும் கூற்றுகளில் எது/எவை சரியானவை?
I.
திட்டக்குழுவின் தலைவர் எப்போதும் இந்தியப் பிரதமராக இருப்பார்.
II.
திட்டக்குழுவில் நிதி அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்
எப்போதும் பகுதிநேர உறுப்பினர்களாக இருப்பார்கள்.
III.
திட்டக்குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அரசியலமைப்பில்
வரையறுக்கப்பட்டுள்ளது.
A)
I மட்டும் சரி
*B)
I மற்றும் II மட்டும் சரி
C)
I மற்றும் III மட்டும் சரி
D)
அனைத்தும் சரி
27. “பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவர் புகழ்வர் செந்நாப்
புலவர்”
என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள
நூல் எது?
*அ. புறநாநூறு
ஆ. அகநாநூறு
இ. குறுந்தொகை
ஈ. ஐங்குறுநூறு
28. கூற்று (A): குப்தர் காலத்து உயர் பதவிகளில் இருந்த
அதிகாரிகள் 'தண்டநாயகர்' மற்றும்
'மகாதண்டநாயகர்' என்று அழைக்கப்பட்டனர்.
காரணம் (R): அரசருக்கு நிர்வாகத்தில் உதவ இளவரசர்கள் மற்றும் உயர் அதிகாரிகளைக் கொண்ட
மந்திரி குழு ஒன்று இருந்தது.
Aஅ) கூற்று (A) மற்றும் காரணம்
(R) இரண்டும் சரி; காரணம் (R), கூற்றிற்கான (A) சரியான விளக்கமாகும்.
*B) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி; ஆனால் காரணம் (R), கூற்றிற்கான (A) சரியான விளக்கமல்ல.
C) கூற்று (A) சரி; ஆனால் காரணம்
(R) தவறு.
D) கூற்று (A) தவறு; ஆனால் காரணம்
(R) சரி.
29
திட்டக்குழு கலைக்கப்பட்டது தொடர்பான சரியான கூற்றைத் தேர்வு செய்க:
I.
திட்டக்குழு 2014, ஆகஸ்ட் 13 அன்று கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
II.
இதற்குப் பதிலாக 'நிதி ஆயோக்' (NITI
Aayog) என்ற புதிய அமைப்பு 2015, ஜனவரி
1 அன்று உருவாக்கப்பட்டது.
III.
திட்டக்குழுவின் கடைசி துணைத் தலைவர் மன்மோகன் சிங் ஆவார்.
*A)
I மற்றும் II மட்டும்
B)
II மற்றும் III மட்டும்
C)
I மற்றும் III மட்டும்
D)
அனைத்தும் சரி
30. பொறுத்துக
1. இரண்டாவது பத்து - பெறுஞ்சேரல் இரும்பொரை
2. ஐந்தாவது பத்து - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
3. எட்டாவது பத்து - இளஞ்சேரல் இரும்பொரை
4. ஒன்பதாவது பத்து - சேரன் செங்குட்டுவன்
அ. 2 4 3 1
*ஆ. 2 4 1 3
இ. 2 1 3 4
ஈ. 4 2 1 3
31. குப்தர்கள் வெளியிட்ட பொற்காசுகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A) வராகன்
B) பணம்
*C) தினாரா
D) காசு
32
அமைப்புகள் மற்றும் அவற்றின் பணிகளைப் பொருத்துக:
பட்டியல்
1 - பட்டியல் 2
(a)
திட்டக்குழு - 1. திட்டங்களுக்கு இறுதி
ஒப்புதல் அளித்தல்
(b)
தேசிய வளர்ச்சிக் குழு (NDC) - 2. திட்டங்களை
உருவாக்குதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல்
(c)
நிதி ஆயோக் - 3 மாநிலங்களுக்கு இடையேயான
மோதல்களை தீர்த்தல்
(d)
மாநிலத் திட்டக் குழு - 4. கூட்டுறவு
கூட்டாட்சியை வலுப்படுத்துதல்
A) (a)-1, (b)-2, (c)-4, (d)-3
*B) (a)-2, (b)-1, (c)-4, (d)-3
C) (a)-2, (b)-3, (c)-1, (d)-4
D) (a)-4, (b)-1, (c)-2, (d)-3
33. ஒரு புறம் யானையும் மற்றொரு
புறம் மீனும் பொறித்த நாணயம் வெளியிட்ட அரசு எது?
அ. சேரர்
ஆ. சோழர்
*இ. பாண்டியர்
ஈ. களப்பிரர்
34. கீழ்க்கண்டவற்றைச் சரியாகப் பொருத்தி விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
வரிசை I (ஆசிரியர்) வரிசை II (நூல்)
1. பாணிணி i) மகாபாஷ்யம்
2. பதஞ்சலி ii) மேகதூதம்
3. சந்திரோகோமியா iii) அஷ்டதியாயி
4. காளிதாசர் iv) சந்திர வியாகரணம்
*A) 1-iii,
2-i, 3-iv, 4-ii
B) 1-ii, 2-iv,
3-i, 4-iii
C) 1-i,
2-iii, 3-ii, 4-iv
D) 1-iv,
2-ii, 3-iii, 4-i
35
1934-ல் 'இந்தியாவிற்கான திட்டமிட்ட
பொருளாதாரம்' (Planned Economy for India) என்ற புத்தகத்தை
எழுதியவர் யார்?
A)
ஜவஹர்லால் நேரு
*B)
எம். விஸ்வேஸ்வரய்யா
C)
மகாத்மா காந்தி
D)
எம்.என். ராய்
36. உலகில் நடைபெறும் பல குற்றச்
செயல்களுக்கு பசிப்பிணியை காரணம், அதை போக்குவதன் மூலம்
குற்ற செயல்களை தடுக்க முடியும் என்பது எந்த நூலின் மையப் பொருளாகும் ?
அ. திருக்குறள்
*ஆ. மணிமேகலை
இ. நாலடியார்
ஈ. குண்டலகேசி
37. சரியானக் கூற்றுகளைத்
தேர்ந்தெடுக்க.
1. வேந்தர்கள் ஒவ்வொருவரும்,
ஒவ்வொரு மரத்தைத் தம் வெற்றியைச் சிறப்பிக்கும் மரமாகப் போற்றி
வந்துள்ளனர்.
2. அம்மரம் இரவு பகலாக விரரால்
காவல் காக்கப்படுவதால், அதற்குக் 'கடிமரம்"
எனப் பெயர்.
3. அம்மரத்தை வெட்டுப்படாமல்
பாதுகாப்பது மானமுடைய வேந்தர்க்கு மறப்பண்பாகும். வேங்கை,
புன்னை, வேம்பு முதலிய மரங்களைக் காவல்
மரங்களெனப் போற்றி வந்துள்ளனர்.
4. வேந்தன் ஒருவன், பகை மன்னனை வெற்றிகொண்டதற்கு அடையாளமாக, அவன்
நாட்டுக் காவல் மரத்தை வெட்டி வீழ்த்துவது மரபு.
*அ. 1, 2, 3, 4
ஆ. 1, 2, 4
இ. 1, 2, 3
ஈ. அனைத்தும் தவறு
38
திட்டமிடல் முன்மொழிவுகள் மற்றும் அவற்றின்ணண பின்னணி - பொருத்துக
பட்டியல்
1 - பட்டியல் 2
(a)
திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை (1944) - 1. ஸ்ரீமன் நாராயண் அகர்வால்
(b)
இந்தியப் பொருளாதாரத் திட்டமிடல் ஆணையம் (1938) - 2. சர் அர்தேஷிர் தலால்
(c)
கிராமப்புற முன்னேற்றத்திற்கான வார்டு திட்டம் - 3. சுபாஷ் சந்திர போஸ்
(d)
இந்திய தொழிலாளர் கூட்டமைப்பு - 4. எம் என்
ராய்
*A) (a)-2, (b)-3, (c)-1, (d)-4
B) (a)-3, (b)-2, (c)-4, (d)-1
C) (a)-2, (b)-1, (c)-3, (d)-4
D) (a)-4, (b)-3, (c)-1, (d)-2
39) கீழ்கண்ட கூற்றுகளில் சரியான கூற்றை ஆராய்க?
கூற்று - 1; இந்தியா, வடக்கே காஷ்மீரிலுள்ள இந்திராகோல் முதல் தெற்கே கன்னியாகுமரி
வரை 3214 கி.மீ நீளம் கொண்டுள்ளது,
கூற்று - 2; இந்திய மேற்கே குஜாரத்திலுள்ளரான் ஆப் கட்ச் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை
2933 கி.மீ நீளம் கொண்டுள்ளது.
கூற்று - 3; இந்தியா 23°30 வட அட்சமான கடகரேகை இந்தியாவின் மையமாக அமைந்து தென்பகுதி
வெப்ப மண்டலமாகவும், வடபகுதி மித வெப்பமண்டலமாகவும், இரு பெரும் பகுதிகளாக பிரிக்கிறது.
40. 1. பாலி மொழியில் இயற்றப்பட்ட
இலங்கை பௌத்த சரித்திரமான எந்த நூல் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவிலிருந்து
வந்த வணிகர்கள் மற்றும் குதிரை வியாபாரிகளைப் பற்றி குறிப்பிடுகிறது.
அ. தீப வம்சம்
ஆ. தூப வம்சம்
*இ. மகாவம்சம்
ஈ. எதுவுமில்லை
41
தேசிய வளர்ச்சிக் குழு (National Development Council - NDC)
மற்றும் திட்டக்குழு இடையேயான உறவு குறித்து பின்வரும் கூற்றுகளில்
எது சரியானது?
1.
திட்டக்குழு திட்டங்களைத் தயாரிக்கும்; தேசிய
வளர்ச்சிக் குழு அத்திட்டங்களைப் பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும்.
2.
திட்டக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் தேசிய வளர்ச்சிக் குழுவில்
உறுப்பினர்களாக இருப்பார்கள்.
3.
தேசிய வளர்ச்சிக் குழுவின் தலைவராகத் திட்டக்குழுவின் துணைத் தலைவர்
செயல்படுவார்.
*A)
1 மற்றும் 2 மட்டும்
B)
1 மட்டும் சரி
C)
2 மற்றும் 3 மட்டும்
D)
அனைத்தும் சரி
42) கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றை தேர்வு
செய்க
கூற்று 1; அந்தமான்நிகோபர் தீவுகள் புவி உள் இயக்க விசைகள் மற்றும் எரிமலைகளால் உருவானதாகும்.
கூற்று 2; இந்தியாவின் ஒரே செயல்படும் எரிமலை லட்சத்தீவுக் கூட்டத்தில் உள்ள பாரன் தீவாகும்.
கூற்று 3; அரபிக்கடலில் உள்ள இலட்சத்தீவுகள் முருகைப்பாறைகளால் உருவானவை.
43 திட்டக்குழுவின் அதிகார வரம்பு
குறித்து விமர்சித்த 'முதல் நிர்வாகச் சீர்திருத்தக் குழு'
(1st Administrative Reforms Commission) எதை வலியுறுத்தியது?
A) திட்டக்குழுவை ஒரு தன்னாட்சி
அமைப்பாக மாற்ற வேண்டும்.
*B) திட்டக்குழுவின் உறுப்பினர்களாக
அமைச்சர்கள் இருக்கக்கூடாது.
C) திட்டக்குழுவை முழுமையாகக்
கலைக்க வேண்டும்.
D) மாநில முதல்வர்களே
திட்டக்குழுவின் தலைவர்களாக வேண்டும்.
44. சரியானக் கூற்றுகளைத்
தேர்ந்தெடுக்க.
1. வியன்னா பாப்பிரஸ், கி.பி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க ஆவணம் முசிரியின் பழைய நாட்களின்
வர்த்தகத்தைக் குறிப்பிடுகிறது.
2. இது வணிகர்களிடையே எழுதப்பட்ட
ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது மற்றும் கப்பலின் பெயரைக் குறிப்பிடுகிறது, ஹெர்மாபொலன், மேலும் இந்தியாவிலிருந்து ரோமானியப்
பேரரசுக்கு அனுப்பப்பட்ட மிளகு மற்றும் தந்தம் போன்ற ஏற்றுமதிப் பொருட்களைப்
பட்டியலிடுகிறது.
அ. இரண்டும் சரி
ஆ. இரண்டும் தவறு
இ. 1 சரி 2 தவறு
*ஈ. 1 தவறு
2 சரி
45) உலகின் கூரை என______அழைக்கப்படுகிறது?
46 திட்டக்குழுவிற்கும் மாநில
அரசுகளுக்கும் இடையிலான உறவு குறித்து தவறான கூற்றைத் தேர்வு செய்க:
*A) திட்டக்குழு ஒரு சட்டரீதியான
அமைப்பு (Statutory Body) என்பதால் அதன் முடிவுகள் மாநில
அரசுகளைக் கட்டுப்படுத்தும்.
B) மாநிலத் திட்டக் குழுக்களின்
(State Planning Boards) தலைவராக அந்தந்த மாநில முதலமைச்சர்கள்
செயல்படுவார்கள்.
C) திட்டக்குழுவின் தொழில்நுட்பக்
குழுக்கள் மாநிலங்களின் திட்டப் பணிகளை மதிப்பாய்வு செய்யும் அதிகாரம்
கொண்டிருந்தன.
D) மாநிலங்களின் நிதித் தேவைகளைப்
பூர்த்தி செய்ய 'மத்திய உதவி' (Central Assistance) என்ற முறையைத் திட்டக்குழு கையாண்டது.
47. சரியானக் கூற்றுகளைத்
தேர்ந்தெடுக்க.
1. இரும்பு உற்பத்தி ஒரு முக்கியமான
கைவினைத் தொழிலாக இருந்தது. பாரம்பரிய உலைகளில் இரும்பு
உருக்குதல் மேற்கொள்ளப்பட்டது
2. உதாரணமாக பொருந்தலில் இரும்பு
உருக்கியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
அ. இரண்டும் சரி
ஆ. இரண்டும் தவறு
*இ. 1 சரி
2 தவறு
ஈ. 1 தவறு 2 சரி
விளக்கம்: கொடுமணல்
48 திட்டக்குழுவின்
நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது/எவை தவறானவை?
1 திட்டக்குழுவின்
கீழ் இயங்கும் 'நிகழ்ச்சி மதிப்பீட்டு அமைப்பு'
(Programme Evaluation Organisation - PEO) என்பது திட்டங்களின்
தாக்கத்தை ஆய்வு செய்யும் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.
2 திட்டக்குழுவின்
'செயலாளர்' (Secretary), இந்தியப் பொருளாதாரப்
பணியைச் (Indian Economic Service) சேர்ந்த மூத்த அதிகாரியாக
மட்டுமே இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
3 திட்டக்குழுவானது
மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நிதிப் பகிர்வை மேற்கொள்ளும் 'நிதி ஆணையத்தின்' (Finance Commission) பணிகளில்
எந்தவிதத் தலையீடும் செய்ததில்லை.
A) 1 மற்றும்
2 மட்டும்
*B) 2 மற்றும்
3 மட்டும்
C) 1 மற்றும்
3 மட்டும்
D) அனைத்தும் தவறானவை
49) சிகரங்களை அவற்றின் உயரங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்துக?
50) கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியான கூற்று எது என ஆராய்க?
கூற்று - 1; இந்தியா 8° 4' வட அட்சம் முதல் 37° 25° வட அட்சம் வரையிலும் 68°7' கிழக்கு தீர்க்கம் முதல்
97°2' கிழக்கு தீர்க்கம் வரையிலும் பரவியுள்ளது.
கூற்று - 2; அட்ச தீர்க்க பரவல்படி இந்தியா முழுமையும் தென்கிழக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளது.
51. முகவுரையே இந்திய அரசியல் அமைப்பின் ஆன்மா
என்று கூறியவர்
ராஜேந்திர பிரசாத்
*அம்பேத்கர்
காந்தி
நேரு
52. இந்திய அரசியல் அமைப்பின் அறிமுகம் என்று
அழைக்கப்படுகிற முகவுரையானது சட்டமியற்றுவதில் எதற்கு வழிகாட்டுகிறது?
சட்டமன்றம்
நீதிமன்றம்
*நாடாளுமன்றம்
அமைச்சரவைக்குழு
53. முகவுரையின் கருத்து எந்த நாட்டு அரசியல்
அமைப்பிலிருந்து பெறப்பட்டது?
ரஷ்யா
இங்கிலாந்து
பிரான்ஸ்
*அமெரிக்கா
54. ஜவகர்லால் நேரு அவர்களின் குறிக்கோள்
தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தேதி மற்றும் ஆண்டு எது?
1948 பிப்பரவரி 22
*1947 ஜனவரி 22
1946 அக்டோபர் 11
1947 ஜூலை 23
55. பின் வருவனவற்றை வரிசைப்படுத்துக .
A. இறையாண்மை மக்களாட்சி சமய சார்பின்மை சமதர்மம் குடியரசு
B. இறையாண்மை சமய சார்பின்மை மக்களாட்சி குடியரசு சமதர்மம் .
*C. இறையாண்மை சமதர்மம் சமய சார்பின்மை மக்களாட்சி குடியரசு .
D. இறையாண்மை சமய சார்பின்மை குடியரசு சமதர்மம் மக்களாட்சி .
56. பின்வருவனவற்றைப் பொருத்துக .
A.முகப்புரையைஇந்திய அரசியலமைப்பின்
அடையாள அட்டை என க்கூறியவர் 1. முனிசி.
B. முகப்புரையை இந்திய அரசியலமைப்பின்
ஜாதகம் எனக் கூறியவர் 2. நானா பல்கி வாலா
C. முகப்புரையை இந்திய அரசியலமைப்பின்
திறவுகோல் எனக் கூறியவர் 3. ஹெர்னஸ் பர்னர்
D. முகப்புரையை இந்திய
அரசியலமைப்பின் ஆன்மா எனக் கூறியவர் 4. தாகூர் தாஸ் sபார்க்கவா
A. 1 4 3 2.
B. 4 3 2 1.
C. 1 2 3 4.
*d. 2 1 3 4.
57. பின்வருவனவற்றுள்
எவை சரியானவை அல்ல ?
*A.குடியரசு
B. சமதர்மம்
C. சமய சார்பின்மை
D. ஒருமைப்பாடு .
58. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து
சரியானவற்றைத் தெரிக
இந்திய அரசியல் அமைப்பானது
1. அது
சிந்தனை, கருத்து, நம்பிக்கை, பற்று மற்றும் வழிபாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது.
2. இது சமூக, பொருளாதார
மற்றும் அரசியல் நீதியை வழங்குகிறது.
3. இது தகுதி மற்றும் வாய்ப்புகளில் சமத்துவத்தை
நோக்கமாகக் கொண்டுள்ளது.
4. இது
தனிநபரின் கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமையையும்
ஒருமைப்பாட்டையும் உறுதி செய்கிறது.
கூற்று 1 மற்றும் 2 சரி
கூற்று 1 2 3 சரி
கூற்று 2 மற்றும் 4 சரி.
*கூற்று 1 2 3 4 சரி
59. சம்விதான் திவஸ் கொண்டாடப்படும் எது?
*நவம்பர் 26
ஜனவரி 26 டிசம்பர் 26
ஆகஸ்ட் 16
60. பொருத்துக.
அ. சோசலிசம்
1. 1976
ஆ. இறையான்மை
2. மக்கள் நலன்
இ. மதச்சார்பின்மை 3. பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தல்
ஈ. ஜனநாயகம்
4. ஒரு நாடு சுதந்திரமாக முடிவெடுத்தல்
*2 4 1 3
2 3 4 1
4 3 2 1
3 2 4 1
கணித வினாக்கள்:
1. (3a
+ 5b) / (5a – 3b)
= 5/1 எனில் a : b –ன் விகிதம் என்ன?
(A) 2 : 1
* (B) 10 : 11
(C) 7 : 4
(D) 5 : 3
2. 4a
= 5b மற்றும் 3b = 7c
எனில் b : a : c –ன் விகிதம் என்ன?
(A) 35 : 28 : 12
* (B) 28 : 35 : 12
(C) 12 : 28 : 35
(D) 35 : 28 : 15
3. a/3 = b/5 = c/6 எனில் a+b
: b+c : c+a –ன் விகிதம் காண்க.
* (A) 8 : 11 : 9
(B) 3 : 5 : 6
(C) 9 : 11 : 8
(D) 8 : 11 : 10
4. a+b
: b+c : c+a = 7 : 8 : 9 மற்றும் a+b+c = 24
எனில் c-ன் மதிப்பு என்ன?
(A) 6
(B) 8
* (C) 10
(D) 12
5. இரண்டு
எண்கள் 7 : 11 என்ற விகிதத்தில் உள்ளன. ஒவ்வொரு எண்ணுடனும் 7-ஐக் கூட்டினால்
விகிதம் 2 : 3 என ஆகிறது. அவற்றில் சிறிய எண் எது?
(A) 35
* (B) 49
(C) 77
(D) 56
6. A
மற்றும் B –ன் வருமான விகிதம் 5 : 4 மற்றும்
அவர்களின் செலவின விகிதம் 3 : 2. மாத இறுதியில் A மற்றும் B
ஒவ்வொருவரும் ரூ.1,600/- சேமித்தால் A-ன்
வருமானம் என்ன?
(A) ரூ.6,000/-
(B) ரூ.8,000/-
* (C) ரூ.4,000/-
(D) ரூ.5,000/-
7. A
: B = ½ : 1/3, B : C = ¼ : 1/5 மற்றும் C
:D = 1/3 : ½ எனில் A : D –ன் விகிதம் என்ன?
(A) 4 : 9
* (B) 5 : 4
(C) 1 : 1
(D) 10 : 9
8. இரண்டு
எண்களின் வர்க்கங்களின் கூட்டுத் தொகைக்கும் அவற்றின் பெருக்கற்பலனுக்கும் உள்ள
விகிதம் 13 : 6 எனில் அந்த எண்களின் விகிதத்தைக் கண்டறியவும்.
* (A) 2 : 3 (அ) 3 : 2
(B) 1 : 6 (அ) 6 : 1
* (C) 1 : 3 (அ) 3 : 1
(D) 2 : 5 (அ) 5 : 2
9. ரூ.1,230/-
A, B மற்றும் C-க்கு இடையில் A மற்றும் B-யின் பங்கு 4 : 3 மற்றும் B மற்றும் C-யின் பங்கு = 5 : 2 எனப்
பிரிக்கப்படுகிறது. B-க்கு எவ்வளவு கிடைக்கிறது>
(A) ரூ.480/-
* (B) ரூ.450/-
(C) ரூ.600/-
(D) ரூ.512/-
10. ஒரு
தொகையானது A, B மற்றும் C-க்கு இடையில்
A-க்கு B-ஐ போல் இருமடங்கும் B-க்கு C-ஐ போல் மும்மடங்கும் கிடைக்கும்படி
பிரிக்கப்படுகிறது. மொத்தத் தொகை ரூ.1,200/- எனில் C-ன்
பங்கு என்ன?
(A) ரூ.100/-
* (B) ரூ.120/-
(C) ரூ.200/-
(D) ரூ.360/-
11. A
மற்றும் B ஒரு கூட்டாண்மையைத்
தொடங்குகிறார்கள். A ¼ நேரத்திற்கு 1/3 மூலதனத்தை முதலீடு
செய்கிறார். B 1/3 நேரத்திற்கு ½ மூலதனத்தை
முதலீடு செய்கிறார். Cமீதமுள்ள மூலதனத்தை முழு நேரத்திற்கும்
முதலீடு செய்கிறார். ரூ.3,640/- இலாபத்தை அவர்கள் எவ்வாறு பிரிக்க வேண்டும்?
* (A) 728, 1,456, 1,456
(B) 910, 910, 1,820
(C) 520, 1,040, 2,080
(D) 728, 910, 2,002
12. ரூ.1,300/-ஐ
A, B மற்றும் C-க்கு இடையில் ½
: 1/3 : ¼ என்ற விகிதத்தில் பிரிக்கவும். C-ன் பங்கு என்ன?
* (A) ரூ.300/-
(B) ரூ.400/-
(C) ரூ.600/-
(D) ரூ.250/-
13. ஒரு
கோட்டையில் 150 வீரர்களுக்கு 45 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் இருந்தன. 10
நாட்களுக்குப் பிறகு 25 வீரர்கள் கோட்டையை விட்டு வெளியேறினர். மீதமுள்ள உணவு
மீதமுள்ள வீரர்களுக்கு எத்தனை நாட்களுக்கு உதவும்?
(A) 40 நாட்கள்
* (B) 42 நாட்கள்
(C) 45 நாட்கள்
(D) 35 நாட்கள்
14. அட்டைகளின்
மொத்த எடை 50 கிராம் எனில் அதே அளவுடைய 2 ½ கிலோகிராம்
எடையில் எத்தனை அட்டைகள் கிடைக்கும்?
(A) 500 அட்டைகள்
(B) 700 அட்டைகள்
* (C) 750 அட்டைகள்
(D) 1750 அட்டைகள்
15. 6
மீட்டர் நீளமுள்ள ஒரு கம்பத்தின் நிழலின் நீளம் 15 மீட்டர் எனில் 25 மீட்டர் நிழல்
கொண்ட கம்பத்தின் நீளம் என்ன?
* (A) 10 மீட்டர்
(B) 160 மீட்டர்
(C) 120 மீட்டர்
(D) 100 மீட்டர்
16. 7,
16, 43 மற்றும் 79 ஆகிய ஒவ்வொரு எண்ணுடனும்
எந்த எண்ணைக் கூட்டினால் அவை விகித சமத்தில் அமையும்?
(A) 2
(B) 3
* (C) 5
(D) 7
17. 4,
16, 7-ன் 4-ஆவது விகிதத்தைக் கண்டுபிடி.
(A) 22
(B) 24
(C) 26
* (D) 28
18. X
: Y = 3 : 4 எனில் (X2Y + XY2) / (X3 + Y3) –ன் மதிப்பு
என்ன?
* (A) 12/13
(B) 1/7
(C) 84/343
(D) 12/64
19. ஒரு
கலனில் A மற்றும் B ஆகிய இரண்டு
திரவங்களின் கலவை 7 : 5 என்ற விகிதத்தில் உள்ளது. 9 விட்டர் கலவையை அகற்றிவிட்டு
கலனை B திரவத்தால் நிரப்பும் பொழுது A மற்றும்
B விகிதம் 7 : 9 ஆகிறது. ஆரம்பத்தில் கலனில் எத்தனை லிட்டர்
திரவம் A இருந்தது?
* (A) 21 லிட்டர்
(B) 15 லிட்டர்
(C) 28 லிட்டர்
(D) 35 லிட்டர்
20. 40
லிட்டர் பால் மற்றும் நீர் கலவையில் 10% நீர் உள்ளது. புதிய கலவையில் நீரின் அளவை
20% ஆக்க எவ்வளவு நீரை சேர்க்க வேண்டும்?
(A) 4 லிட்டர்
* (B) 5 லிட்டர்
(C) 6 லிட்டர்
(D) 8 லிட்டர்
21. A-ன் 80% ஆனது B-ன் 5/4-க்கு சமம் எனில் A : B யாது?
* (A) 25 : 16
(B) 16 : 25
(C) 8 : 16
(D) 8 : 25
22. சராசரி
விகிதம் காண்க. 0.08 மற்றும் 0.32 .
(A) 16
(B) 1.6
* (C) 0.16
(D) 0.016
23. ஒரு
இரயில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை மணிக்கு 48 கிலோமீட்டர் வேகத்தில் 50 நிமிடங்களில்
கடக்கிறது. பயண நேரத்தை 40 நிமிடங்களாகக் குறைக்க இரயில் என்ன வேகத்தில் செல்ல
வேண்டும்?
(A) 50 கி.மீ/மணி
(B) 55 கி.மீ/மணி
* (C) 60 கி.மீ/மணி
(D) 65 கி.மீ/மணி
24. ஒரு
உணவு விடுதியின் 3-ஆம் தளத்தில் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 120
ஆட்கள் 8 முறை மின்தூக்கியில் விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றனர். மின்தூக்கி
12 முறை விழா நடைபெறும் இடத்திற்குச் சென்றால் எத்தனை ஆட்கள் அங்கு சென்றிருப்பார்கள்.
(A) 300
(B) 230
* (C) 180
(D) 220
25. 12
ஆண்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 10 நாட்களில்
முடிக்கிறார்கள். அதே வேலையை 16 நாட்களில் முடிக்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் வேலை
செய்யும் எத்தனை ஆண்கள் தேவை?
* (A) 10 ஆண்கள்
(B) 12 ஆண்கள்
(C) 8 ஆண்கள்
(D) 15 ஆண்கள்