Saturday, July 25, 2026

ஆன்சலிவன் பயிற்சி மையம் வழங்கும் வாராந்திர மாதிரித் தேர்வு (7) வினாவிடைகள்

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1. "பரந்து" –எதிர்ச்சொல் தருக

   ) விரிந்து

) *சுருங்கி  

) பெருகி 

) உயர்ந்து

 

2. "வீ" - பொருள் தருக.

    ) வீடு

) விருப்பம்

) *பறவை

) வீரம்

 

3. "இயல்பு" - பொருள் தருக.

    ) *இயற்கைத் தன்மை 

) செயற்கை

) பழக்கம்

) கல்வி

 

4. "மாட்சி" - பொருள் தருக.

    ) *பெருமை

) மாடு

) மாளிகை

) மாதம்

 

5. பொருந்தா இணையைத் தேர்ந்தெடுக்க.

மாரி-மழை

முகில்-மேகம்

*கழனி-சேறு

நகை-சிரிப்பு

 

6. பொருந்தாச் சொல்லைத் தெரிக.

) ஆறு 

) குளம்

) ஏரி

) *மலை

 

7. சரியான அகரவரிசை எது?

ஒழுக்கம், ஈகை, கருணை, பண்பு, சமத்துவம், மேன்மை, தூய்மை, அன்பு

அன்பு, ஒழுக்கம், ஈகை, பண்பு, தூய்மை, மேன்மை, சமத்துவம், கருணை

*அன்பு, ஈகை, ஒழுக்கம், கருணை, சமத்துவம், தூய்மை, பண்பு, மேன்மை

அன்பு, கருணை, ஒழுக்கம், ஈகை, பண்பு சமத்துவம், தூய்மை, மேன்மை

 

8. பொருந்தாததைத் தெரிக.

எள், ஞாயிற்உ, பகலவன், பரிதி

திங்கள், மதி, நிலவு, சந்திரன்

குஞ்சரம், களிறு, பிடி, வேழம்

*முத்து, தரளம், நித்திளம், பணிளம்

 

9. "என்னாச்சு" – சரியான எழுத்து வழக்கு தேர்க

    ) *என்ன ஆயிற்று 

) என்ன செய்தது

) என்ன நடந்தது

) என்ன வந்தது

 

10. "எங்கிட்ட" – சரியான தூய தமிழ்த் தொடரைத் தெரிக.

    ) *என்னிடம்

) என்னிடத்து

) என்னிடத்தில்

) என்னோடு

 

11. திருச்சிராப்பள்ளி என்பதன் மரூஉ தெரிக.

ட்ரிச்சி

திரிச்சி

*திருச்சி

திருச்சாப்பள்ளி

 

12. “lorry” [சரியான மொழிபெயர்ப்பைத் தெரிக.

*சரக்குந்து

மூடுந்து

மகிழுந்து

 பேருந்து

 

13. விடுபட்ட இணைப்புச் சொல்லைத் தெரிக.

"படித்தான்வேலைக்கு போனான்"

    ) *பிறகு

) ஆல்

) மற்றும்

) அல்லது

 

14. பொருத்துக.

. ஓடினாள்  1. பெரு

. சிறந்தவன்  2. சால

. பொருத்தம்  3. மிக

. விருப்பம்  . நன்றாக

3 4 2 1

*4 3 2 1

2 3 4 1

1 2 4 3

 

15. "மழை பெய்தது _ ஆற்றில் வெள்ளம் வந்தது” 

    ) *அதனால் 

) எனவே

) ஆகையால்

) ஏனெனில்

 

16. ‘பூக்களைப் பறிக்காதீர்கள்

எவ்வகை வாக்கியம்?

வியப்பு

செய்தி

வினா

*கட்டளை

 

17. தொழிற்பெயர் தொடரைத் தெரிக.

சரிந்தன புத்தகங்கள்

சரிந்தவை புத்தகங்கள்

*சரிந்த புத்தகங்கள்

சரிந்தது புத்தகங்கள்

 

18. சரியான ஒலிமரபைத் தெரிக. ‘குதிரை’ 

    ) *கனைத்தது 

) கத்தியது

) கூவியது

) முழங்கியது

 

19. பொருத்துக.

. எறும்பு  1. கூட்டம்

. ஆடு   2. கொத்து

. யானை  3. சாரை

. அவரை  4. மந்தை

*3 4 1 2

4 3 2 1

3 1 2 4

2 3 4 1

 

20. குழந்தாய் பசிக்கிறதா என்று கேட்டேன்.

சரியான நிறுத்தற்குறி வரிசை எது?

மேற்கோல் குறிகளுக்கிடையே  வினாக்குறி மற்றும் வியப்புக்குறி. வெளியே முற்றுப்புள்ளி.

மேற்கொல்கள் தேவையில்லை, வியப்புக்குறி மற்றும் வினாக்குறி அடுத்து முற்றுப்புள்ளி.

*மேற்கோல்களுக்கிடையே வியப்புக்குறி மற்றும் வினாக்குறி. வெளியே முற்றுப்புள்ளி.

மூன்றுமே சரி

 

21. ஒருவனுக்கு எதைவிட பாதுகாப்பான பாதுகாப்பு வேறு இல்லை என வள்ளுவர் கூறுகிறார்?.

 பொருள் சேர்த்து வைத்தல்.

படைபலம் பெருக்குதல்.

அறன் அமைத்தல்.

*சாண்றோர் நட்பு.

 

22. பொருந்தாத இனையை கண்டுபிடிக்கவும்?.

கேன்மைநட்பு.

இடிக்கும் துணை: குற்றத்தை கண்டித்து இடிக்கும் துணை.

இகழ்: மாறுபாடு பகை.

*தமர்நம்மை சாராதவர்.

 

23. சூழ்வார் கண்ணாக ஒழுகழாம் எனும் இக்குறளில் வள்ளுவர் எதணை மண்ணனின் கண்ணாக உருவக  படுத்துகிறார்?.

ஒற்றர்கள்.

*சிறந்த அறிவுடையோர்களை.

தணது கண்களை.

தனது நாட்டு மக்களை.

 

24. இடிப்பாரை இல்லாத ஏமரா மண்ணன் கெடுப்பார் இலானும் கெடும்இக்குறளில் ஏமரா என்பதன் பொருள் ?.

ஏமாற்றம் அடையாத.

குற்றமற்ற.

*காவல் இல்லாத.

ஏமாற்றுகின்ற.

 

 

 

25. தலை, மூக்கு, கழுத்து, மார்பு வரிசைக்குப் பொருத்தமான வரிசை எது?

ஆய்தம், உயிர், வல்லினம், மெல்லினம்

*ஆய்தம், மெல்லினம், உயிர், வல்லினம்

வல்லினம், உயிர், ஆய்தம், மெல்லினம்

மெல்லினம், உயிர், ஆய்தம், வல்லினம்

 

26. மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் எழுத்து எது?

ம்

ப்

*வ்

 

27. மயங்கொலி எழுத்துகள் எத்தனை?

6

*8

7

9

 

28. பிழையான சொல்லைத் தெரிக.

*<கன்டம்

<நன்ற்உ

>வண்டி

<முன்றில்

 

29. –Dash தின்னாது –Dash விட்ட ஆடு. ஆனாலும் நூல் –Dash-ல் உயிர்தப்பியது.

விடுபட்ட இடங்களின் சரியான வரிசையைக் கொண்டு நிரப்பவும்.

<இளை, >இலை, இழை

இழை, <இலை, >இளை

*<இலை, >இளை, இழை

இழை, >இளை, <இலை

 

30. ஆகாய மனசுக்காரன், அதிர்வேட்டுப் பேச்சுக்காரன்.

பொருத்தமான மயங்கொலிகள் எவை?

>வாணம், <வானம்,

>வாணம், >வாணம்

<வானம் <வானம்

*<வானம் >வாணம்

 

31. [பிழையற்ற தொடர் எது?

>பறவை தாண்டும் <பரவைக்கு >இறை தருவான் <இரைவன்.

*<பரவை தாண்டும் >பறவைக்கு <இரை தருவான் >இறைவன்.

<பரவை தாண்டும் >பறவைக்கு >இறை தருவான் <இரைவன்.

மூன்றுமே பிழையானவை.

 

32. அங்காத்தலால் பிறக்கும் எழுத்துகள் எவை?

,

,

,

*,

 

33. இடையின எழுத்துகள் பிறக்கும் இடம் எது?

*கழுத்து

மார்பு

தலை

மூக்கு

 

34. காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று எது?

தெரிநிலை

ஏவல்

*குறிப்பு

வியங்கோல்

 

35. கவிஞர் தமிழ் ஒளி எந்தக் கவிமரபைச் சேர்ந்தவர்?

கம்பன்

பாரதிதாசன்

*பாரதி

வள்ளுவர்

 

36. இயற்கை வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தந்ததவர்கள் பண்டைய தமிழர்கள் என்பதை இயம்பும் நூல் எது?

நாளடியார்

*சிலப்பதிகாரம்

களித்தொகை

வெற்றி வேற்கை

 

37. வேறுபட்ட ஒன்றைத் தெரிக.

கண்ணன் பாட்டு

குயில்ப்பாட்டு

*சந்திரிகையின் கதை

பாப்பா பாட்டு

 

38. ‘நிலைபெற்ற சிலைஎன்ற நூலின் ஆசிரியர் யார்

வெ. ராமலிங்கம்

ஆலங்குடி சோமு

பாரதிதாசன்

*தமிழ் ஒளி

 

39. கீழ்க்கண்டனவற்றுள் சிலப்பதிகாரத்துக்குப் பொருந்தாத கூற்று எது?

முத்தமிழ்க் காப்பியம்

*நீதி இலக்கியம்

உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்

குடிமக்கள் காப்பியம்

 

40. கவிஞர் தமிழ் ஒளி யாருடைய மாணவர்?

பாரதியார்

*பாரதிதாசன்

ராமலிங்கனார்

கண்ணதாசன்

 

1 கூற்று (A): குடியரசுத் தலைவர் தனது அதிகாரங்களைச் செயல்படுத்துவதில் அமைச்சரவையின் அறிவுரையின்படி மட்டுமே செயல்பட வேண்டும். அமைச்சரவையின் அறிவுரையை அவர் மறுபரிசீலனை செய்யும்படி ஒருமுறை திருப்பி அனுப்பலாம்.

 

காரணம் (R): 44-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம், 1978 குடியரசுத் தலைவருக்கு அமைச்சரவையின் அறிவுரையை ஒருமுறை மறுபரிசீலனைக்கு அனுப்பும் அதிகாரத்தை வழங்கியது, ஆனால் மறுபரிசீலனைக்குப் பின் அனுப்பப்படும் அறிவுரைக்கு அவர் கட்டுப்பட்டவர் ஆவார்.

 

*() (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-க்கான சரியான விளக்கமாகும்.

 

() (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-க்கான சரியான விளக்கம் அல்ல.

 

() (A) சரி, ஆனால் (R) தவறு.

 

() (A) தவறு, ஆனால் (R) சரி.

 

2. பல்லவர் கால வரலாற்றுச் செய்திகளில் பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை? 

I. தொடக்ககால பல்லவ அரசர்கள் சாதவாகனர்களின் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர். 

II. பிற்காலப் பல்லவர்கள் தங்களது அரசாட்சியை கி.பி. 5 மற்றும் 6-ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் முழுவதும் விரிவடையச் செய்தனர். 

III. சிம்மவிஷ்ணு சோழர்கள் மற்றும் பாண்டியர்களை வெற்றி கொண்டார். 

) I மற்றும் II மட்டும் சரி 

*) I மற்றும் III மட்டும் சரி 

) II மற்றும் III மட்டும் சரி 

) அனைத்தும் சரி 

 

3 மாநிலங்களின் கடன் வாங்கும் வரம்புகள் (Borrowing Powers) குறித்து பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

 

1. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 292 மத்திய அரசின் கடன் வாங்கும் அதிகாரத்தைப் பற்றியும், பிரிவு 293 மாநில அரசின் கடன் வாங்கும் அதிகாரத்தைப் பற்றியும் கூறுகிறது.

 

2. ஒரு மாநில அரசு, மத்திய அரசிடம் பெற்ற கடன் நிலுவையில் இருக்கும்போது, மத்திய அரசின் அனுமதியின்றி புதிய கடன்களை உள்நாட்டில் வாங்க முடியாது.

 

(A) 1 மட்டும் சரி

 

(B) 2 மட்டும் சரி

 

*(C) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் சரி

 

(D) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் தவறு

 

4. "கடல் நீர் ஆவியாகி மேகமாகும் பின்னர் மேகம் குளிர்ந்து மழையாக பொழியும்."இக்கூற்றுத் தொடர்பான  பழந்தமிழ் இலக்கியங்களுள் பொருந்தாதவற்றைத் தேர்ந்தெடுக்க.

1. குறிஞ்சிப்பாட்டு

2. முல்லைப்பாட்டு

3. பரிபாடல்

4. பட்டினப்பாலை

5. கார் நாற்பது

*. 1, 4

. 2, 4

. 3, 4

. எதுவுமில்லை

 

5. கி.பி. 7-ஆம் நூற்றாண்டின் தொடக்க கால இந்திய அரசியல் சூழல் குறித்த பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

1. வடக்கே ஹர்ஷரின் சமகாலத்தில், தெற்கே பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு வலிமையோடு ஆட்சி புரிந்தனர்.

2. பல்லவர்களின் ஆட்சிப் பரப்பு சோழ, பாண்டிய நாடுகளின் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்தது.

3. இக்காலகட்டத்தில் மௌரியர்களைப் போன்ற வலுவான மத்தியத்துவப் பேரரசு அதிகாரம் இந்தியாவில் நிலவியது.

 

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

) 1 மட்டும்

*) 1, 2 மட்டும்

) 2, 3 மட்டும்

) 1, 2, 3 அனைத்தும்

 

6 குடியரசுத் தலைவரின் தேர்தல் மற்றும் வாக்காளர் குழு (Electoral College) குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்வு செய்க:

 

1. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள்.

 

2. மாநிலச் சட்டமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் டெல்லி, புதுச்சேரி, ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

 

3. நாடாளுமன்றத்தில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்ட மேலவை (Legislative Council) உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முடியாது.

 

() 1 மற்றும் 2 மட்டும் சரி

 

*() 2 மற்றும் 3 மட்டும் சரி

 

() 1 மற்றும் 3 மட்டும் சரி

 

() 1, 2 மற்றும் 3 அனைத்தும் சரி

 

7. கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகியவற்றை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:

கூற்று (A): இடைக்கால இந்தியாவின் தொடக்கத்தில் வாதாபி சாளுக்கியர்கள் தக்காணப் பகுதியிலிருந்து ராஷ்டிரகூடர்களால் புறந்தள்ளப்பட்டனர்.

காரணம் (R): பேரரசு சக்திகள் மறைந்து, பிராந்திய அதிகார மையங்களின் தோற்றமே இடைக்கால இந்தியாவின் முக்கிய பண்பம்சமாக இருந்தது.

 

) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

*) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

) கூற்று (A) சரி, ஆனால் காரணம் (R) தவறு.

) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

 

8 பொருத்துக?

 

பட்டியல் I (அரசியலமைப்புச் சட்டப்பிரிவு) - பட்டியல் II (விளக்கம்)

 

(a) பிரிவு 275 - 1. நிதி அவசர நிலை

 

(b) பிரிவு 282 - 2. சட்டப்பூர்வ மானியங்கள் (Statutory Grants)

 

(c) பிரிவு 360 - 3. சரக்கு மற்றும் சேவை வரி மன்றம் (GST Council)

 

(d) பிரிவு 279A - 4. விருப்ப அதிகார மானியங்கள் (Discretionary Grants)

 

*(A) a-2, b-4, c-1, d-3

 

(B) a-4, b-2, c-3, d-1

 

(C) a-2, b-1, c-4, d-3

 

(D) a-3, b-4, c-1, d-2

 

9. சரியானக் கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க.

1. சங்கப் பாடல்களின் எண்ணிக்கை - 2381.

2. அகத் திணை சார்ந்தப் பாடல்கள் - 519.

3. புறத் திணை சார்ந்தப் பாடல்கள் - 1862.

4. சங்கப் பாடல்களின் மொத்த அடிகள் எண்ணிக்கை - 26350.

. 1, 2, 3 & 4

. 2 & 3

*. 1 & 4

. 1, 2 & 3

 

10. பின்வருவனவற்றைச் சரியாகப் பொருத்தி விடையைத் தேர்வு செய்க:

பட்டியல் I - பட்டியல் II

(a) ஹர்ஷர் - 1. வாதாபி (பாதாமி)

(b) பல்லவர் - 2. ஆற்றுச் சமவெளிப் பகுதிகள்

(c) சாளுக்கியர் - 3. வட இந்தியா

(d) சோழர், பாண்டியர் - 4. காஞ்சிபுரம்

 

குறியீடுகள்:

(a) (b) (c) (d)

*) 3, 4, 1, 2

) 4, 3, 2, 1

) 3, 1, 4, 2

) 2, 4, 1, 3

 

11 அரசியலமைப்பு விதி 72-ன் கீழ் குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரங்களைச் சரியான விளக்கங்களுடன் பொருத்துக:

 

பட்டியல் - Iபட்டியல் II

 

A. மன்னிப்பு (Pardon) - 1. தண்டனையின் தன்மையை மாற்றாமல் கால அளவைக் குறைப்பது

 

B. மாற்றுதல் (Commutation) - 2. குற்றவாளியின் தண்டனையை முற்றிலும் நீக்குவது

 

C. குறைத்தல் (Remission) - 3. தற்காலிகமாகத் தண்டனையை நிறுத்தி வைப்பது

 

D. நிறுத்திவைத்தல் (Reprieve) - 4. தண்டனையின் தீவிரத்தன்மையைக் குறைத்து லேசான தண்டனையாக மாற்றுவது

 

*() A-2, B-4, C-1, D-3

 

() A-2, B-1, C-4, D-3

 

() A-4, B-2, C-1, D-3

 

() A-1, B-4, C-2, D-3

 

12 கூற்று (A): நிதி ஆணையம் (Finance Commission) என்பது ஒரு சட்டரீதியான அமைப்பு (Statutory Body) ஆகும், இது மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வை ஒழுங்குபடுத்துகிறது.

 

காரணம் (R): இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 280-வது பிரிவு குடியரசுத் தலைவரால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதி ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

 

(A) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) என்பது கூற்றுக்கான (A) சரியான விளக்கமாகும்.

 

(B) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் (R) என்பது கூற்றுக்கான (A) சரியான விளக்கமல்ல.

 

(C) கூற்று (A) சரி, ஆனால் காரணம் (R) தவறு.

 

*(D) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

 

13. முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற இசைக்கலைஞர் யார்?

) பரதமுனி

) நாரதர்

*) ருத்ராச்சாரியர்

) வெங்கடமகி

 

14. நற்றிணையில் 9 அடி முதல் 12 அடி வரை என்னும் அடி வரையரைக்கு விதி விலக்காக 13 அடி கொண்டப் பாடல் இயற்றியப் புலவர் யார்?

. கபிலர்

*. போதனார்

. நல்லந்துவனார்

. மருதனார்

 

15 துணைக் குடியரசுத் தலைவர் பதவி மற்றும் தேர்தல் முறை குறித்த தவறான கூற்றைக் கண்டறிக:

 

() துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கின்றனர்.

 

() இத்தேர்தலில் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை.

 

() துணைக் குடியரசுத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் மாநிலங்களவையில் (Rajya Sabha) மட்டுமே முதன்முதலில் கொண்டு வரப்பட முடியும்.

 

*() துணைக் குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்புப் பெரும்பான்மை (Special Majority) மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

 

 

16. குறுந்தொகை முதன்முதலில் அச்சிட்ட ஆண்டு எது?

. 1912

. 1913

. 1914

*. 1915

 

17. பொருத்துக:

பட்டியல் I (அறிஞர்கள்) - பட்டியல் II (நூல்கள்)

A) வாத்ஸ்யாயர் - 1) தசகுமார சரிதம்

B) தண்டி - 2) பாரதவெண்பா

C) பாரவி - 3) நியாய பாஷ்யா

D) பெருந்தேவனார் - 4) கிராதார்ஜுனியம்

 

குறியீடுகள்:

*) A-3, B-1, C-4, D-2

) A-3, B-4, C-1, D-2

) A-2, B-1, C-4, D-3

) A-1, B-3, C-2, D-4

 

18) கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

1.       இரும்புத் தாதுக்களில் 'மேக்னடைட்' மிகச் சிறந்த தரம் வாய்ந்ததாகும்; இதில் சுமார் 72% இரும்பின் அளவு காணப்படுகிறது.

2.       ஒரு டன் எஃகு உற்பத்தி செய்வதற்கு சுமார் 10 கிலோ மாங்கனீசு தேவைப்படுகிறது.

3.       மாங்கனீசு கனிமமானது பெரும்பாலும் வெளுப்புத்தூள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் வண்ணப்பூச்சுகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும் சரி

B) கூற்று 2 மற்றும் 3 மட்டும் சரி

C) கூற்று 1 மற்றும் 3 மட்டும் சரி

*D) கூற்றுகள் 1, 2, 3 அனைத்தும் சரி

 

 

19 மத்திய-மாநில நிதி உறவுகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

 

1. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 268-ன் கீழ் வரும் வரிகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டு, மாநில அரசுகளால் வசூலிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

 

2. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 269-ன் கீழ் வரும் வரிகள் மத்திய அரசால் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு, முழுமையாக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

 

3. முத்திரை வரிகள் (Stamp duties) சட்டப்பிரிவு 269-ன் கீழ் வருகின்றன.

 

(A) 1 மட்டும் சரி

 

*(B) 1 மற்றும் 2 சரி

 

(C) 2 மற்றும் 3 சரி

 

(D) அனைத்தும் சரி

 

20 கூற்று (A): இந்தியாவின் பிரதமர் மக்களவையில் பெரும்பான்மை பலத்தை இழக்கும்போது, அவர் கட்டாயம் பதவி விலக வேண்டும் அல்லது குடியரசுத் தலைவர் அவரைப் பதவியிலிருந்து நீக்கலாம்.

 

காரணம் (R): விதி 75(3)-ன் படி, அமைச்சரவை கூட்டாக மக்களவைக்கு (Lok Sabha) பொறுப்பானது ஆகும்.

 

*() (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-க்கான சரியான விளக்கமாகும்.

 

() (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-க்கான சரியான விளக்கம் அல்ல.

 

() (A) சரி, ஆனால் (R) தவறு.

 

() (A) தவறு, ஆனால் (R) சரி.

 

21) பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க. சரியான கூற்றை தேர்வு செய்ய

1.       பாக்சைட் தாதுவானது அலுமினியத்தின் ஆக்சைடு ஆகும். இது பெரும்பாலும் தீபகற்ப இந்தியாவின் லேட்டரைட் மண் காணப்படும் பகுதிகளில் வெட்டியெடுக்கப்படுகிறது.

2.       தாமிரம் மின்சாரத்தை எளிதில் கடத்தும் தன்மை கொண்டதால், மின்கம்பிகள் மற்றும் மின்சாதன உற்பத்தியில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது.

3.       தாமிர உற்பத்தியில் இந்தியா முழுமையான தற்சார்பு அடைந்துள்ளதுடன், உலக நாடுகளுக்கும் அதனை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது.

*A) கூற்று 1 மற்றும் 2 மட்டும் சரி

B) கூற்று 2 மற்றும் 3 மட்டும் சரி

C) கூற்று 1 மற்றும் 3 மட்டும் சரி

D) கூற்றுகள் 1, 2, 3 அனைத்தும் சரி

 

 

 

22 மத்திய-மாநில நிதி உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட பின்வரும் குழுக்களை அவை அமைக்கப்பட்ட ஆண்டின் அடிப்படையில் பழமையானதிலிருந்து புதியது வரை வரிசைப்படுத்துக:

 

1. சர்க்காரியா ஆணையம் (Sarkaria Commission)

 

2. ராஜமன்னார் குழு (Rajamannar Committee)

 

3. பூஞ்சி ஆணையம் (Punchhi Commission)

 

(A) 1 — 2 — 3

 

*(B) 2 — 1 — 3

 

(C) 3 — 2 — 1

 

(D) 2 — 3 — 1

 

23. பொருத்துக.

1. பாலை - கபிலர்

2. குறிஞ்சி - சோழன் நல்லுருத்திரன்

3. மருதம் - இளநாகனார்

4. முல்லை - நல்லந்துவனார்

5. நெய்தல் - பெறுங்கடுங்கோ

*. 5 1 3 2 4

. 5 2 3 1 4

. 5 3 2 1 4

. 5 4 3 2 1

 

24 கூற்று (A): மத்திய அரசு விதிக்கும் கூடுதல் கட்டணங்கள் (Surcharges) மற்றும் செஸ் (Cess) வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை.

 

காரணம் (R): அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 271-ன் படி, குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மத்திய அரசு விதிக்கும் கூடுதல் கட்டணங்கள் மற்றும் செஸ் வரிகள் முழுமையாக மத்திய அரசின் ஒருங்கிணைந்த நிதிக்கே (Consolidated Fund of India) செல்லும்.

 

*(A) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) என்பது கூற்றுக்கான (A) சரியான விளக்கமாகும்.

 

(B) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் (R) என்பது கூற்றுக்கான (A) சரியான விளக்கமல்ல.

 

(C) கூற்று (A) சரி, ஆனால் காரணம் (R) தவறு.

 

(D) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

 

25 பொருத்துக

(A) ரூர்கேலா 1) இங்கிலாந்து

(B) பிலாய் 2) இந்திய அரசு

(C) துர்காபூர் 3. ஜெர்மனி

(D) விசாகப்பட்டினம் இரும்பு ஆலை 4) ரஷ்யா

*(a)   3      4      1      2

(b)   4      3      2      1

(c)   3      1      4      2

(d)   1      4      3      2

 

26 இந்தியப் பிரதமர்களை அவர்கள் பதவி வகித்த காலத்தின் அடிப்படையில் ஏறுவரிசையில் (முதலில் பதவி வகித்தவர் முதல் கடைசியாக பதவி வகித்தவர் வரை) வரிசைப்படுத்துக:

 

1. சந்திரசேகர்

 

2. வி. பி. சிங்

 

3. பி. வி. நரசிம்ம ராவ்

 

4. . கே. குஜரால்

 

() 1 - 2 - 3 - 4

 

*() 2 - 1 - 3 - 4

 

() 2 - 3 - 1 - 4

 

() 3 - 2 - 1 - 4

 

27. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்க.

. குறிஞ்சிப்பாட்டு

. முல்லைப்பாட்டு

. பட்டினப்பாலை

*. மதுரைக்காஞ்சி

 

28 15-வது நிதி ஆணையம் மாநிலங்களுக்கு இடையே வருவாயைப் பகிர்ந்தளிணக்க (Horizontal Devolution) பயன்படுத்திய காரணிகளையும் அவற்றின் சதவீத எடைகளையும் (Weightage) பொருத்திச் சரியான கூற்றைத் தேர்வு செய்க:

 

1. வருமான இடைவெளி (Income Distance) - 45%

 

2. பரப்பளவு (Area) - 15%

 

3. மக்கள் தொகையியல் செயல்பாடு (Demographic Performance) - 12.5%

 

4. காடு மற்றும் சூழலியல் (Forest and Ecology) - 10%

 

(A) 1, 2 மற்றும் 3 சரி

 

(B) 2, 3 மற்றும் 4 சரி

 

(C) 1, 3 மற்றும் 4 சரி

 

*(D) அனைத்தும் சரி

 

29) இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் 1897 ஆம் ஆண்டு எங்கு நிறுவப்பட்டது?

*A) டார்ஜிலிங்

B) சிவசமுத்திரம்

C) ஹிராக்குட்

D) மேட்டூர்

 

30 அரசியலமைப்பு விதி 74 மற்றும் 75 ஆகியவற்றின் கீழ் மத்திய அமைச்சரவையின் கட்டமைப்பு குறித்த பின்வரும் கூற்றுகளில் எது/எவை தவறானது?

 

1. பிரதமரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே குடியரசுத் தலைவர் அமைச்சர்களை நியமிக்கிறார்.

 

2. அமைச்சரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை (பிரதமர் உட்பட) மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 விழுக்காட்டிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இது 91-வது சட்டத்திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது.

 

3. ஒரு நபர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இல்லாதபட்சத்தில், அவர் அமைச்சராகப் பொறுப்பேற்க முடியாது.

 

() 1 மற்றும் 2 மட்டும்

 

() 2 மற்றும் 3 மட்டும்

 

*() 3 மட்டும்

 

() 1, 2 மற்றும் 3 அனைத்தும்

 

31. பொருத்துக.

1. சிறுபானாற்றுப்படை - தொண்டைமான் இளந்திரையன்

2. பெறும்பானாற்றுப்படை - நல்லியக்கோடன்

3. நெடுநல்வாடை - நன்னன்

4. மலைப்படுகடாம் - நெடுஞ்செழியன்

. 1 2 3 4

. 1 2 4 3

*. 2 1 4 3

. 2 1 3 4

 

32) கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவில் தொழிலகங்கள் முதன்முதலில் தொடங்கப்பட்ட இடங்கள் அடிப்படையில் தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்

A) பருத்தி நெசவாலை - ஃபோர்ட் கிளாஸ்டர் (1818)

B) சணல் ஆலை - ரிஷ்ரா (1855)

C) காகிதத் தொழிற்சாலை - செராம்பூர் (1812)

*D) இரும்பு எஃகு ஆலை - ஜாம்ஷெட்பூர் (1907)

 

 

33 பொருத்துக?

 

பட்டியல் I (நிதி ஆணையக் கொள்கைகள்) - பட்டியல் II (விளக்கம் / நோக்கம்)

 

(a) செங்குத்து பகிர்வு (Vertical Devolution) - 1. மாநிலங்களுக்கு இடையே நிதியை சமச்சீராகப் பிரித்தல்

 

(b) கிடைமட்ட பகிர்வு (Horizontal Devolution) - 2. மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே மொத்த வரியைப் பிரித்தல்

 

(c) வரிக் கோட்பாடு (Tax Trajectory) - 3. மாநிலங்களின் நிதி மேலாண்மைத் திறனை மதிப்பிடுதல்

 

(d) நிதி ஒழுக்கம் (Fiscal Discipline) - 4. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கடனின் விகிதத்தைக் கட்டுப்படுத்துதல்

 

(A) a-1, b-2, c-4, d-3

 

*(B) a-2, b-1, c-4, d-3

 

(C) a-2, b-1, c-3, d-4

 

(D) a-1, b-2, c-3, d-4

 

34. பொருந்தாததைத் தேர்ந்தெடுக்க.

. சிருவழுதுணை

*. பெறுவழுதுணை

. சிறுமல்லி

. பெறுமல்லி

 

35 மத்திய நிர்வாகம் சார்ந்த முக்கிய அரசியலமைப்பு விதிகளைச் சரியாகப் பொருத்துக:

 

பட்டியல் I (விதி) - பட்டியல் II (விளக்கம்)

 

A. விதி 53 - 1. குடியரசுத் தலைவரின் பதவிப் பிரமாணம்

 

B. விதி 60 - 2. மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

 

C. விதி 61 - 3. பிரதமரின் கடமைகள் (குடியரசுத் தலைவருக்குத் தகவல் தெரிவிப்பது)

 

D. விதி 78 - 4. குடியரசுத் தலைவரின் மீதான குற்றச்சாட்டு (Impeachment) நடைமுறை

 

*() A-2, B-1, C-4, D-3

 

() A-1, B-2, C-4, D-3

 

() A-2, B-4, C-1, D-3

 

() A-3, B-1, C-4, D-2

 

36 மத்திய-மாநில நிதி உறவுகள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?

 

(A) அரசுகளுக்கிடையேயான கவுன்சில் (Inter-State Council - பிரிவு 263) மத்திய-மாநில நிதிச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாகச் செயல்பட முடியும்.

 

(B) நிதி ஆணையத்தின் தலைவர் பொது நிர்வாகத்தில் (Public Affairs) அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும்.

 

*(C) இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (CAG) மத்திய அரசின் கணக்குகளை மட்டுமே தணிக்கை செய்வார், மாநில அரசுகளின் கணக்குகளைத் தணிக்கை செய்ய மாட்டார்.

 

(D) 80-வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் (2000), 'மாற்று வருவாய்ப் பகிர்வுத் திட்டத்தை' (Alternative Scheme of Devolution) அறிமுகப்படுத்தியது.

 

37. அறவுறக்கோவை என அழைக்கப்படும் நூல் எது?

. ஆசாரக்கோவை

. பழமொழி நாநூரு

*. முதுமொழிக்காஞ்சி

. எதுவுமில்லை

 

 

38 குடியரசுத் தலைவரின் அவசரச்சட்டம் (Ordinance) பிறப்பிக்கும் அதிகாரம் (விதி 123) பற்றிய பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

 

1. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அல்லது ஏதேனும் ஒரு அவை கூட்டத்தொடரில் இல்லாதபோது மட்டுமே குடியரசுத் தலைவர் அவசரச்சட்டத்தைப் பிறப்பிக்க முடியும்.

 

2. நாடாளுமன்றம் மீண்டும் கூடும் தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அவசரச்சட்டம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

 

3. குடியரசுத் தலைவர் அவசரச்சட்டத்தின் மூலம் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள முடியும்.

 

*() 1 மற்றும் 2 மட்டும் சரி

 

() 2 மற்றும் 3 மட்டும் சரி

 

() 1 மற்றும் 3 மட்டும் சரி

 

() 1, 2 மற்றும் 3 அனைத்தும் சரி

 

39. "மனைக்கு விளக்கு மடவார்; மடவார் தனக்கு தகைசால் புதல்வர்" எனும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

. நாலடியார்

*. நான்மணிக்கடிகை

. ஆசாரக்கோவை

. மூதுரை

 

40 மத்திய-மாநில நிதிப் பகிர்வில் 'காட்கில்-முகர்ஜி சூத்திரம்' (Gadgil-Mukherjee Formula) குறித்து பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

 

1. இச்சூத்திரம் தேசிய வளர்ச்சிக் குழுவால் (NDC) அங்கீகரிக்கப்பட்டு, மாநிலங்களுக்கான திட்ட உதவிகளை (Plan Assistance) ஒதுக்கீடு செய்யப் பயன்படுத்தப்பட்டது.

 

2. இந்த சூத்திரத்தில் மாநிலங்களின் மக்கள் தொகை மற்றும் தனிநபர் வருமானம் (Per Capita Income) ஆகியவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, வரி முயற்சிக்கு (Tax Effort) இடமளிக்கப்படவில்லை.

 

*(A) 1 மட்டும் சரி

 

(B) 2 மட்டும் சரி

 

(C) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் சரி

 

(D) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் தவறு

 

41. சரியானக் கூற்றுகளைத் தேர்ந்தெடுக்க.

1. பெருங்காப்பியத்தில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் இடம் பெற வேண்டும்.

2. காப்பியத்தின் பெரும்பிரிவுகள் - காண்டம், இலம்பகம், பருவம்

3. காப்பியத்தின் உட்பிரிவுகள் - சருக்கம், காதை, படலம்

*. 1, 2 & 3

. 2 & 3

. 1 & 2

. 1 & 3

 

 

42 துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவராகச் செயல்படும் காலம் குறித்த சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:

 

1. குடியரசுத் தலைவர் பதவி காலியாகும்போது, துணைக் குடியரசுத் தலைவர் அதிகபட்சமாக 6 மாத காலத்திற்கு மட்டுமே குடியரசுத் தலைவராகச் செயல்பட முடியும்.

 

2. இக்காலகட்டத்தில் அவர் மாநிலங்களவையின் தலைவராகத் தனது கடமைகளைத் தொடர்ந்து செய்வார்.

 

3. இக்காலகட்டத்தில் குடியரசுத் தலைவருக்குரிய அனைத்து ஊதியங்கள் மற்றும் சலுகைகளை அவர் பெறுவார்.

 

() 1 மற்றும் 2 மட்டும்

 

() 2 மற்றும் 3 மட்டும்

 

*() 1 மற்றும் 3 மட்டும்

 

() 1, 2 மற்றும் 3 அனைத்தும்

 

43. "தேனிலே ஊறிய செந்தமிழின் சுவை தோறும் சிலப்பதிகாரம்" எனக் கூறியவர் யார்?

. பாரதிதாசன்

. பாரதியார்

* கவிமணி

. சீத்தலை சாத்தனார்

 

44. மின்தடையின் SI அலகு ?

A. மோ

B. ஜூல்

*C. ஓம்

D. ஓம் மீட்டர்

 

45 மத்திய அமைச்சரவை மற்றும் பிரதமரின் நிலையைப் பொறுத்தவரை பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

 

*() பிரதமரின் மரணம் அல்லது ராஜினாமா தானாகவே அமைச்சரவையைக் கலைத்துவிடும்.

 

() குடியரசுத் தலைவர் தனிப்பட்ட விருப்புரிமையின் பேரில் எந்த ஒரு அமைச்சரையும் பிரதமரின் ஆலோசனையின்றிப் பதவியிலிருந்து நீக்கலாம்.

 

() அமைச்சரவையின் முடிவுகள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகே குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

 

() பிரதமரின் ஆலோசனையின்றி அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துவதற்கு குடியரசுத் தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு.

 

46. பெருங்காப்பியத்திற்கு இணையாகக் கருதப்படும் இலக்கியம் எது?

. நீலக்கேசி

*. சூளாமணி

. யசோதர காவியம்

. எதுவுமில்லை

 

47. கிலோவாட் மணி என்பது எதனுடைய அலகு?

A. மின் கடத்து திறன்

B. மின் தடை எண்

*C. மின் ஆற்றல்

D. மின் திறன்

 

 

48 குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்யும் (Impeachment) நடைமுறை தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனித்து சரியான குறியீட்டைத் தேர்ந்தெடுக்கவும்:

 

1. அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டுமே குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்ய முடியும்.

 

2. இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவர நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஒரு அவையின் மொத்த உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 1/4 பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, 14 நாட்களுக்கு முன்னரே அறிவிப்பு வழங்க வேண்டும்.

 

3. தீர்மானம் இரு அவைகளிலும் தனித்தனியாக மொத்த உறுப்பினர்களில் 2/3 பங்கு சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

 

() 1 மற்றும் 2 மட்டும் சரி

 

() 2 மற்றும் 3 மட்டும் சரி

 

() 1 மற்றும் 3 மட்டும் சரி

 

*() 1, 2 மற்றும் 3 அனைத்தும் சரி

 

49. "கம்ப ராமாயணமும் திருக்குறளும் தமிழுக்குக் கதி" என்று கூறியவர் யார்?

*. செல்வ கேசவராயர்

. . நமச்சிவாயர்

. பாரதியார்

. பாரதிதாசன்

 

50பொருத்துக:

 

 1. மின்னோட்டம் - வோல்ட்

 2. மின்னழுத்த வேறுபாடு - ஓம் மீட்டர்

 3. மின் தடை எண் - வாட்

 4. மின் திறன் - ஜூல்

 5. மின்னாற்றல் - ஆம்பியர்

     A. 45231

     B. 32514

     C. 12345

     *D. 51234

 

51. க்ரிஸ்துவக் கலைக் கலஞ்சியம் என அழைக்கப்படும் நூல் எது?

. ரட்சண்ய யாத்ரீகம்

*. தேம்பாவனி

. விவிலியம்

. எதுவுமில்லை

 

52. பல்லவர் கால பக்தி இயக்கம் குறித்த பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

1. பக்தி இயக்கம் சமஸ்கிருத மொழியை விட தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து வளர்ந்தது.

2. சமயக் கூட்டங்களில் பெண்கள் பங்கேற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தது.

3. இக்காலகட்டத்தில் அப்பரும் மாணிக்கவாசகரும் வைணவ அடியார்களாகவும், நம்மாழ்வாரும் ஆண்டாளும் சைவ அடியார்களாகவும் விளங்கினர்.

 

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?

*) 1 மட்டும் 

) 1, 2 மட்டும் 

) 1, 3 மட்டும் 

. எதுவுமில்லை

 

53 துணைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவையின் பதவிவழித் தலைவராக (Ex-officio Chairman) செயல்படுவது குறித்து பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?

 

*() அவர் நாடாளுமன்றத்தின் எந்த ஒரு அவையிலும் உறுப்பினராக இருக்கக்கூடாது.

 

() மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படும்போது, சாதாரணச் சூழ்நிலையிலும் அவர் வாக்களிக்கலாம்.

 

() அவரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் மாநிலங்களவையில் விவாதத்தில் இருக்கும்போது அவர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கலாம்.

 

() அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவரைப் போல, இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரும் குடியரசுத் தலைவர் பதவி காலியாகும்போது மீதமுள்ள முழுப் பதவிக்காலத்திற்கும் குடியரசுத் தலைவராக நீடிப்பார்.

 

54. கூற்று (A): பல்லவர் காலத்தில் தமிழகத்தில் செல்வாக்கு பெற்றிருந்த பௌத்த மற்றும் சமண சமயங்கள் படிப்படியாக வீழ்ச்சியடைந்தன. 

காரணம் (R): பல்லவ அரசர்களின் ஆதரவோடு ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்தி மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய வடிவிலான சைவம் மற்றும் வைணவத்தைப் போதித்து, தமிழ் பக்தி வழிபாட்டை முன்னெடுத்தனர்.

 

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு:

) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) என்பது கூற்று (A)-விற்கான சரியான விளக்கமாகும். 

*) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் (R) என்பது கூற்று (A)-விற்கான சரியான விளக்கமல்ல. 

) கூற்று (A) சரி, ஆனால் காரணம் (R) தவறு. 

) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி. 

 

55. பின்வருவனவற்றில் எது சரியான கூற்று?

A. மின்னூட்டம் பாயும் வீதம் மின்திறன்

*B. மின்னூட்டம் பாயும் வீதம்

மின்னோட்டம்

C. மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

D. மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

 

 

56 குடியரசுத் தலைவரின் வீட்டோ (Veto) அதிகாரங்களை அவற்றின் தன்மையுடன் பொருத்துக:

 

பட்டியல் I (வீட்டோ வகை) - பட்டியல் II (செயல்முறை)

 

A. முழுமையான வீட்டோ (Absolute Veto) - 1. மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலவரம்பின்றி நிறுத்தி வைப்பது

 

B. தற்காலிக வீட்டோ (Suspensive Veto) - 2. சாதாரணப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் மீண்டும் நிறைவேற்றினால் நிராகரிக்கப்படும் வீட்டோ

 

C. பாக்கெட் வீட்டோ (Pocket Veto) - 3. மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க முற்றிலும் மறுப்பது (தனியார் மசோதாக்கள் போன்றவற்றுக்கு)

 

*() A-3, B-2, C-1

 

() A-1, B-2, C-3

 

() A-3, B-1, C-2

 

() A-2, B-3, C-1

 

57. கூற்று (A): சீன மற்றும் ரோமாபுரி வணிகர்கள் காஞ்சிபுரத்தை நன்கு அறிந்திருந்தனர். 

காரணம் (R): தென்கிழக்கு கடற்கரைப் பகுதியில் காஞ்சிபுரம் ஒரு முக்கிய வணிக மையமாகவும், வளம் கொழித்த வேளாண் பகுதியாகவும் திகழ்ந்தது. 

*) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கக்கான சரியான விளக்கம். 

) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கமல்ல. 

) (A) சரி, ஆனால் (R) தவறு. 

) (A) தவறு, ஆனால் (R) சரி. 

 

58 மின்னோட்டத்தின் அலகு என்ன?

A. வாட்

B. ஓம் மீட்டர்

*C. ஆம்பியர்

D. ஜூல்

 

 

59 கூற்று (A): அமைச்சரவையில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் கூட்டான பொறுப்பு (Collective Responsibility) என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன.

 

காரணம் (R): ஒரு குறிப்பிட்ட அமைச்சகத்தின் கொள்கை முடிவை மக்களவை நிராகரித்தால், ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்.

 

*() (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-க்கான சரியான விளக்கமாகும்.

 

() (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-க்கான சரியான விளக்கம் அல்ல.

 

() (A) சரி, ஆனால் (R) தவறு.

 

() (A) தவறு, ஆனால் (R) சரி.

 

60. பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு: 

  1. சிம்மவிஷ்ணு - ) ராஜசிம்மன் 

2. முதலாம் மகேந்திரவர்மன் - ) கடைசி பல்லவ மன்னர் 

3. இரண்டாம் நரசிம்மவர்மன் - ) களப்பிரர்களை அழித்தவர் 

4. அபராஜிதன் - ) சிம்மவிஷ்ணுவின் மகன் 

*) 1-, 2-, 3-, 4- 

) 1-, 2-, 3-, 4- 

) 1-, 2-, 3-, 4- 

) 1-, 2-, 3-, 4-