குறிப்பு: *குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
தமிழ்ப்பாட வினாக்கள்
1. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடுக்க:
இளமை – பால்
அறிவு – தோள்
அசதி – தேன்
*புலவர் – கவிதை
2. பிரித்து எழுதுக: ‘இன்பத்தமிழ்’
*இன்பம்+தமிழ்
இன்பத்து+தமிழ்
இன்பத்+தமிழ்
இன்ப+தமிழ்
3. சொல்லுக்கான சரியான பொருளைத் தேர்க: ‘நிருமித்த’
தொடங்கிய
சரி செய்த
*உருவாக்கிய
ஒன்றுகூடிய
4. பொருந்தாதசொல்லைத் தேர்ந்தெடுக்க:
பெண்கல்வி
*சகிப்புத் தன்மை
பொதுவுடைமை
பகுத்தறிவு
5. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும்
சொல்?
நிலயென்று
*நிலவென்று
நிலாவென்று
நிலவுவென்று
6. ‘ஆழிப் பெருக்கிக்கும் காலத்திக்கும் பற்றும்
அழியாமலே நிலை நின்றதுவாம்!’
அடிகளில் பயின்றுள்ள இயைபுகளைக் கண்டறிக.
சீர் எதுகை, சீர் மோனை
*அடிமோனை, அடி எதுகை
அடி எதுகை, அடி மோனை
சீர் இயைபு, அடி எதுகை
7. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடுக்க.
தமிழ்நிலம்
தென்மொழி
*கனிச்சாறு
தமிழ்ச் சிட்டு
8. ‘காற்று, பாதை, நோவு’
சொற்களை சரியான வரிசையில் அமைக்கவும்.
வழி, வலி, வளி
வலி, வழி, வளி
*வளி, வழி, வலி
வளி, வலி, வழி
9. ‘பிறந்தவள்’ இலக்கண குறிப்பு தருக.
தொழிற்பெயர்
வினைமுற்று
*வினையாலணையும்
பெயர்
குறிப்புப் பெயர்
10. பின்வரும் கூற்றுக்கான காரணத்தைக் கண்டறிக.
“தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி.”
தொன்மை
இனிமைசீர்மை
*எளிமை
11. ‘தமிழ்நாடு’ என்ற சொல் இடம்பெற்றுள்ள சிலப்பதிகாரத்தின் காண்டம்
எது?
புகார் காண்டம்
*வஞ்சிக் காண்டம்
மூன்று காண்டங்கள்
மதுரைக் காண்டம்
12. வேறுபட்ட சொல்லைக் கண்டறிக.
*பறவை
திருமகள்
விலங்கு
வண்டு
13. சரியான இணைகளைப் பொருத்துக.
அ. கமுகு - 1. மடல்
ஆ. சப்பாத்திக்கள்ளி - 2.
தோகை
இ. நாணல் - 3. கூந்தல்
ஈ. வரகு - 4. புல்
உ. அருகு - 5. தாள்
*3 1 2 5 4
3 1 4 2 5
4 3 5 1 2
2 5 3 4 1
14. கோடிட்ட இடத்தை சரியான சொல்கொண்டு நிரப்புக.
“மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அது - அடிப்படையில் வடிவமைக்கப்பட
வேண்டும்.”
நிரல்
அறிவியல்
*எண்கள்
கணிதம்
15. ‘இடப்புறம்’ என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும்
சொல்?
இடன் + புறம்
*இடது + புறம்
இட + புறம்
இடப் + புறம்
16. பொருந்தாத இணையைக் கண்டறிக.
மீன் – முதலை
அன்பு – உயிர்
கோடை – மருந்து
*உழவர் - வேளாண்மை
17. “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்”
என்று பாடியவர்.
கண்ணதாசன்
*பாரதியார்
பாரதிதாசன்
வாணிதாசன்
18. ‘ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி’ பாடலுக்கான பொருள் யாது?
திரவத்துக்கு வடிவமில்லை
திரவம் பாயும் தன்மை உடையது
*திரவப் பொருட்களை எவ்வளவு அழுத்தினாலும் அதன் அளவைச் சுருக்க
முடியாது
திரவப் பொருட்கள் இடம் அடைக்கு்ம்
19. பொருத்துக:
அ. சிறுபுல்நீர் - 1. அறுவை மருத்துவம்
ஆ. வெள்ளூசி -
உலகம்
இ. கமஞ்சூழ் எழிலி - கலிலியோ
ஈ. ஐந்தும் கலந்த மயக்கம்
- மழைப் பொழிவு
உ. நரம்பின் முடி - பதிற்றுப்பத்து
3 5 4 1 2
3 4 5 1 2
3 1 5 2 4
*3 5 4 2 1
20. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
கூற்று 1: இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன.
2. மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கும் சில வேளைகளில்
அவசியமாகிறது.
இரண்டு கூற்றுகளும் சரி
*கூற்று 1 சரி, 2 தவறு
கூற்று 1 தவறு 2 சரி
இரண்டு கூற்றுகளும் தவறு
21. கலைச்சொல்லை மொழிபெயர்க்கவும். ‘வலஞ்சுழி’
*Clock wise
Post meridian
Anti Clock wise
Ante-meridian
22. ‘அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.’
குறளில் பயின்றுள்ள இயைபு யாது?
பொழிப்பு எதுகை
முற்று மோனை
ஒருவூ எதுகை
*ஒருவூ மோனை
23. ‘இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.’
குறளில் பயின்றுள்ள அணியைக் கண்டறிக.
எடுத்துக்காட்டு உவமையணி
*உவமையணி
உருவக அணி
தீவக அணி
24. பத்திக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக.
“இந்த ஆண்டு மழை சரியான நேரத்தில் பெய்து நம்மைக் காப்பாற்றியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மழையே பெய்யாது பயிர்கள் எல்லாம் கருகி வீணாகப்போனது.”
விண்இன்று
பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
*கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
25. கொடுக்கப்பட்டுள்ள பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடை தருக
“இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும்
இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த
நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச்
சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து
வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும்
அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த்
தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த பரிசு.
இயற்கையின் அழகை ரசித்தால் மட்டும் போதாது. அந்த அழகை
நாம் பாதுகாக்க வேண்டும். நாம் நமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள்
ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று
ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல்
காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும்
பாதுகாத்துக்கொள்ள முடியும்.
எதனை இயற்கை என்கிறோம்?
செதுக்கப்பட்ட பாறைகள்
*இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள்
கலங்கரை விளக்கம்
துறைமுகம்
26. மேலே உள்ள பத்தியில் இல்லாத இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?
பாடித்திரியும் பறவைகள்
கண்சிமிட்டும் விண்மீன்கள்
*தாவிப் பாயும் தன்னிகரற்ற ஆறுகள்
பனி படர்ந்த நீலமலைகள்
27. இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
இயற்கையின் அழகை ரசிக்க
*நம்மைப் பாதுகாத்துக்கொள்ள
பேரிடர் வராமல் தடுக்க
நமது தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள
28. பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக.
இனியது இயற்கை
செழிக்கட்டும் இயற்கை
இயற்கையின் அழகு
*இயற்கை பேண்
29. ‘ஔடதமாம் அனுபவம்’ ஔடதம் என்பதன்
பொருள் யாது?
கல்வி
*மருந்து
ஆசிரியர்
இன்பம்
30. சரியான எதிர்ச்சொல்லைக் கண்டறிக. ‘ஐயம்’
புரிதல்
அறிவு
*தெளிவு
உறுதி
31. இலக்கணக் குறிப்பு தருக. ‘எலும்பும் தசையும்’
உம்மைத்தொகை
சிறப்பும்மை
உவமைத்தொகை
*எண்ணும்மை
32. கோடிட்ட இடத்தை உரிய சொல்லால் நிரப்புக.
-- பிளந்து ஆற்றலை எடுத்து
அனைத்தும் செய்து பார்க்கின்றான்.
அணுவில்
*அணுவைப்
அணுவையும்
அணுவினுள்
33. ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது?
ஆழ் + கடல்
ஆழமான + கடல்
ஆழ + கடல்
*ஆழம் + கடல்
34. ‘செயற்கைக் கோளை விண்ணில் ஏவி
செய்தித் தொடர்பில் சிறக்கின்றான்’
அடிகளில் பயின்றுள்ள இயைபு யாது?
அடி எதுகை
*அடி மோனை
சீர்மோனை
சீர் எதுகை
35. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க:
மனிதர்கள் தம் வேலைகளை எளிதாக செய்ய முதலில் எந்திரங்களை கண்டுபிடித்தனர்.
*மனிதர்கள் தம் வேலைகளை எளிதாகச் செய்ய முதலில் எந்திரங்களைக் கண்டுபிடித்தனர்.
மனிதர்கள் தம் வேலைகளை எளிதாகச் செய்ய முதலில் எந்திரங்களை கண்டுப்
பிடித்தனர்.
மனிதர்கள் தம் வேலைகளை எளிதாக செய்ய முதலில் எந்திரங்களைக் கண்டுபிடித்தனர்.
36. “உலகிலேயே முதன் முதலாக சவுதி அரேபியா சோஃபியா என்ற ரோபோவுக்குக் குடியுரிமை
வழங்கியுள்ளது.”
செயப்பாட்டு
வினைத் தொடராக மாற்று.
உலகிலேயே முதன் முதலாக சவுதி அரேபியாவால் ஒரு ரோபோவின் குடியுரிமை
வழங்கப்பட்டுள்ளது.
*உலகிலேயே முதன் முதலாக சவுதி அரேபியாவால் ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை
வழங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன் முதலாக சவுதி அரேபியாவின் ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை
வழங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன் முதலாக சவுதி அரேபியாவால் ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை
வழங்கப்படுகிறது.
37. இலக்கணக் குறிப்பு தருக. ‘அழியாச் செல்வம்’
பெயரெச்சம்
*ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
எதிர்மறைப் பெயரெச்சம்
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
38. பிரித்து எழுதுக: ‘மூதுரை’
*முதுமை + உரை
மூத்த + உரை
மூப்பு + உரை
முதிய + உரை
39. மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
மஞ்சள்
வந்தான்
*கண்ணில்
தம்பி
40. பொருந்தாத ஒன்றைச் சுட்டுக.
*கவிஞாயிறு
விரல் நுனி வெளிச்சங்கள்
புதிய விடியல்கள்
இது எங்கள் கிழக்கு
41. பிரித்து எழுதுக. ‘காட்டாறு’
காட்டு + ஆறு
கான் + ஆறு
*காடு + ஆறு
காட் + ஆறு
42. காந்தியடிகளைக் கவர்ந்த தமிழ்க்கையேடு நூலை எழுதியவர் யார்?
ராஜாஜி
திரு.வி.க.
ஜோசப் பெஸ்கி
*ஜியு போப்
43. பொருத்துக:
அ. நடுகல் - 1. வேலு நாச்சியார்
ஆ. செல்லமுத்து - 2. குயிலி
இ. தாண்டவராயர் - 3. உடையாள்
ஈ. 28 மொழிகள் - 4. அமைச்சர்
உ. பெண்படைத் தளபதி - 5. தந்தை
3 4 1 2 5
4 1 2 5 3
*3 5 4 1 2
2 1 5 3 4
44. ‘மா’நகராம் ‘மதுரைக்’’கு’ ‘போ’
தொடரில் அமைந்துள்ளபடி அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள
சொற்களைக்கொண்டு நாள்வகைச் சொற்களை வரிசைப்படுத்துக.
பெயர்ச்சொல், உரிச்சொல், இடைச்சொல், வினைச்சொல்
*உரிச்சொல், பெயர்ச்சொல், இடைச்சொல், வினைச்சொல்
உரிச்சொல், இடைச்சொல், வினைச்சொல்,
பெயர்ச்சொல்
வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல், பெயர்ச்சொல்
45. “இந்தப் பெரியவரின் காலடியில் அமர்ந்து தமிழ் கற்க வேண்டும்.”
யாரைக் குறித்து யார் சொன்ன கூற்று இது?
பாரதியார் பற்றி காந்தியடிகள்
வள்ளலார் பற்றி ஜியு போப்
நாமக்கல் கவிஞர் பற்றி ராஜாஜி
*உ.வே.சா பற்றி காந்தியடிகள்
46. கீழ்க்காணும் தொடர்களை ஆராய்க.
1. ஓர் அழகான கிராமம் அது.
2. ஆனால் அஃது எங்கிருக்கிறது என்பதுதான் எனக்கு மறந்துவிட்டது.
3. ஒரு இரவு மட்டுமே நான் அந்த கிராமத்தில் தங்கினேன்.
தொடர் 1 மட்டும் பிழையானது
மூன்று தொடர்களும் பிழையானவை
*மூன்று தொடர்களுமே பிழையற்றவை
மூன்றாம் தொடர் பிழையானது
47. அகர வரிசைப்படுத்துக.
தங்கம், தகடு, பெண், மிச்சம், மிசை, நகரம்
*தகடு, தங்கம், நகரம், பெண், மிச்சம், மிசை
தகடு, தங்கம், நகரம், பெண், மிசை, மிச்சம்
தங்கம், தகடு, நகரம், பெண், மிச்சம், மிசை
48. கலைச்சொல் தருக. ‘நாட்டுப்பற்று’
Patriarchal
*patriotism
Nationalism
Nationalist
49. வறியார்க்குஒன்று
ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து
‘குறியெதிர்ப்பு’ பொருள் தருக.
எதிர்த்து நிற்றல்
இலக்கு அறிதல்
*பயன் எதிர்பார்த்தல்
இலக்கை அடைதல்
50. “குமணன் கட்டியிருந்த கடிகாரம் வளவனுக்கு மிகவும்
பிடித்திருந்தது. அவன் வளவனைப் பார்த்துப் பொறாமைப்பட்டான். தனக்கு இதுபோல் ஒரு
கடிகாரம் இல்லையே என குமணன் மீது வளவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அந்த
கோபத்தில் குமணன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் வளவன் எரிந்து எரிந்து விழுந்தான்.
ஆனாலும் வளவன்மீது குமணனுக்கு கோபமே எழவில்லை.”
கதைக்குப் பொருத்தமான குறளை எழுதுக.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.
*அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை
51. ‘நம்பி இருப்பவர் கும்பி எரிந்திடில்
நன்மை உமக்கு வருமோ ஐயா?’
அடிகளில் பயின்றுள்ள தொடைநயங்கள் எவை?
அடி இயைபு, அடி மோனை
பொழிப்பு மோனை, அடி எதுகை
*பொழிப்பு இயைபு, அடிமோனை
பொழிப்பு இயைபு, அடி எதுகை
52. மொழி பெயர்க்க: ‘Transplantation’
*உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
இதய மாற்று அறுவை சிகிச்சை
இதயம் மாற்றிப் பொருத்துதல்
சிறுநீரக மாற்று
53. ‘மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது - தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது’ சொன்னவர் யார்?
முடியரசன்
*பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
வாணிதாசன்
பாரதிதாசன்
54. “சிறுவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடத்திற்கு அருகே ஒரு கார்
வந்து நின்றது.” முழுவதும் தமிழ்ப்படுத்துக.
சிறுவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடத்திற்கு அருகே ஒரு உந்து
வந்து நின்றது.
சிறுவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடத்திற்கு அருகே ஒரு ஊர்தி
வந்து நின்றது.
*சிறுவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடத்திற்கு அருகே ஒரு
மகிழுந்து வந்து நின்றது.
சிறுவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடத்திற்கு அருகே ஒரு டாக்சி
வந்து நின்றது.
55. “மாணவர்கள் பசியின்றி படிக்க மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்
காமராசர்.” பிழையில்லாச் சொற்றொடரைத் தேர்ந்தெடுக்க.
“மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்
காமராசர்.”
“மாணவர்கள் பசியின்றி படிக்க மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார்
காமராசர்.”
“மாணவர்கள் பசியின்றிப் படிக்க மத்திய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்
காமராசர்.”
*“மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்
காமராசர்.”
56. இந்திய நூலகவியலின் தந்தை (Father of
Indian library science) என்று அழைக்கப்படுபவர்
யார்?
முனைவர் மா. அரங்கண்ணல்
*முனைவர் இரா. அரங்கநாதன்
தேவநேயப் பாவாணர்
மறைமலை அடிகள்
57. ‘multimedia’ தமிழ்ப்படுத்துக.
பன்னாட்டு ஊடகம்
பன்மை ஊடகம்
பேரியல் ஊடகம்
*பல்லூடகம்
58. ‘ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையும் செல்லாத நாடு இல்லை - அந்நாடு
வேற்று நாடு ஆகா தமவேஆம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்.’ என்ற பழமொழி நானூற்றுப் பாடலுக்கான
பொருத்தமான குறளை எழுதுக.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
*யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
எவ்வ துறைவ துலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவுடை யார்.
59. ‘escalator’ [சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க.
நகரும் படிக்கட்டு
மின் தூக்கி
*மின் படிக்கட்டு
சுழலும் படிக்கட்டு
60. ‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து’ குறளில் பயின்றுள்ள அணி யாது?
*எடுத்துக்காட்டு உவமையணி
உவமையணி
உருவக அணி
வேற்றுமை அணி
61. ‘உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.’
குறளில் பயின்றுள்ள தொடைநயங்கள் யாவை?
கூழை மோனை, மேல்க்கதுவாய் இயைபு
கூழை இயைபு, கீழ்க்கதுவாய் மோனை
*கூழை மோனை, கூழை இயைபு
அடி எதுகை, கூழை மோனை
62. ‘சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலாச் சொல்’
குறளில் பயின்றுள்ள அணி யாது?
சொல்பின்வரும் நிலையணி
வேற்றுப்பொருள் வைப்பணி
*சொற்பொருள் பின்வரு நிலையணி
வேற்றுமை அணி
63. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவரின் இயற்பெயர்
என்ன?
துரை மாணிக்கம்
துரையரசன்
*துரைராசு
சின்னதுரை
64. நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
நா + னிலம்
*நான்கு + நிலம்
நா + நிலம்
நான் + நிலம்
65. பொருத்துக:
அ. பணத்தாள் - 1. Debit card
ஆ. கடனட்டை - 2.
Cheque
இ. காசோலை - 3. Credit
card
ஈ. பற்று அட்டை - 4. Demand draft
உ. வரைவோலை - 5.
Currency note
*5 3 2 1 4
5 2 3 1 4
4 3 1 2 5
3 2 4 1 5
66. உரிய நிறுத்தற்குறிகளைக் கொண்ட வாக்கியத்தைத்
தேர்ந்தெடுக்க.
மிக்க மகிழ்ச்சி இந்தப் பணத்தை எனது பரிசாக நீயே வைத்துக்கொள் பண்ணையை
மேலும் விரிவாக்கி நடத்து, வாழ்த்துகள்" என்றார் தந்தை.
மிக்க மகிழ்ச்சி, இந்தப் பணத்தை எனது பரிசாக நீயே வைத்துக்கொள். பண்ணையை
மேலும் விரிவாக்கி நடத்து, வாழ்த்துகள் என்றார் தந்தை.
*"மிக்க மகிழ்ச்சி, இந்தப் பணத்தை எனது பரிசாக நீயே வைத்துக்கொள். பண்ணையை
மேலும் விரிவாக்கி நடத்து, வாழ்த்துகள்" என்றார் தந்தை.
"மிக்க மகிழ்ச்சி, இந்தப்
பணத்தை எனது பரிசாக நீயே வைத்துக்கொள் பண்ணையை மேலும் விரிவாக்கி நடத்து வாழ்த்துகள்" என்றார்
தந்தை.
67. “அந்த மலரைப் பாருங்கள் அழகு.” தொடரிலுள்ள செய்மைத் திரிபுச்
சுட்டை அண்மைச் சுட்டாக மாற்றுக.
இந்த மலரைப் பாருங்கள் அழகு
*இம்மலரைப் பாருங்கள் அழகு
அம்மலரைப் பாருங்கள் அழகு
அதோ! அந்த மலரைப் பாருங்கள் அழகு
68. நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக.
கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்.
*கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம்,
மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்.
மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்,
கோமேதகம்.
முத்து, புஷ்பராகம், மரகதம்,
கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம்.
69. “பயணப் படகுகளில் பண்டங்களை ஏற்றிக்கொண்டு நாங்கள் கடற்பயணம்
புறப்பட்டோம்.”
பத்தியைப் படித்து ஆங்கிலக் கலைச்சொற்களை வரிசைப்படுத்துக.
Voyage,
commodity, ferries
Ferries, voyage,
commodity
Voyage, ferries,
commodity
*ferries,
commodity, voyage
70. அவர் ஒரு ‘பாரம்பரியம்’ கொண்ட
‘வணிகர்’.
அடைப்புக்குறிக்குள் இருக்கும் சொற்களுக்கான சரியான மொழிபெயர்ப்பைத்
தேர்ந்தெடுக்க.
Heritage,
Entrepreneur
Heritage, consumer
*Heritage,
Merchant
Heritage,
adulterer
71. Continent என்ற ஆங்கிலச்சொல்லின் சரியானத்
தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடு.
A) தட்பவெப்பநிலை
B) வானிலை
C) புகலிடம்
*D) கண்டம்
72. புவிஈர்ப்புப்புலம் என்ற
தமிழ்ச்சொல்லின் சரியான ஆங்கிலச்சொல்லைத் தேர்ந்தெடு.
*A)
Gravitational Field
B) Sanctuary
C) Migration
D) Climate
73. ஔவையார் இயற்றாத நூலைத் தேர்ந்தெடு.
A) ஆத்திசூடி
B) கொன்றை வேந்தன்
C) நல்வழி
*D) முதுமொழி மாலை
74. கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள பாடலுன்
தொடைவகையைத் தேர்ந்தெடு.
மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது - தன்
மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது
A) அந்தாதி
B) முரன்
*C) இய்யைபு
D) சந்தம்
75. சரியான நிருத்தர் குறியிடப்பட்டத்
தொடரைத் தேர்ந்தெடு.
*A) நூலகங்கள் மாவட்ட நூலகம், கிளை
நூலகம் , ஊர்ப்புற
நூலகம், பகுதி
நேர நூலகம், தனியாள் நூலகம் எனப் பலவகைப்படும்.
B) நூலகங்கள் மாவட்ட நூலகம்; கிளை
நூலகம் ; ஊர்ப்புற
நூலகம்; பகுதி
நேர நூலகம்; தனியாள் நூலகம் எனப் பலவகைப்படும்.
C) நூலகங்கள் மாவட்ட நூலகம், கிளை
நூலகம் , ஊர்ப்புற
நூலகம், பகுதி
நேர நூலகம், தனியாள் நூலகம், எனப் பலவகைப்படும்.
D) நூலகங்கள் மாவட்ட நூலகம் கிளை
நூலகம் ஊர்ப்புற நூலகம் பகுதி நேர நூலகம்
தனியாள் நூலகம் எனப் பலவகைப்படும்.
76. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு.
A) திங்கள்
B) மஞ்சள்
C) மண்டபம்
*D) நாடகம்
77. பின்வரும் சொற்களைத் திருத்தி
எழுதுக.
தெண்றல் கன்டம் நன்ரி மன்டபம்
*A) தென்றல், கண்டம், நன்றி, மண்டபம்.
B) தென்றல், கண்டம், நன்ரி, மன்டபம்.
C) தெண்றல், கண்டம், நன்றி, மன்டபம்.
D) தென்றல், கண்டம், நன்றி, மன்டபம்.
78. திராவிட நாட்டின் வானம்பாடி என்று
அழைக்கப்படுபவர் யார்?
*A) முடியரசன்
B) வானிதாசன்
C) கண்ணதாசன்
D) வண்ணதாசன்
79. முடியரசன்
இயற்றாத நூலைத் தேர்ந்தெடு.
A) பூங்கொடி
B) வீரகாவியம்
C) காவியப்பாவை
*D) எழில் ஓவியம்
80. தவறான இனையைத் தேர்ந்தெடு.
A) கலம் - கப்பல்
B) ஆழி - கடல்
C) எக்களிப்பு - பெருமகிழ்ச்சி
*D) கழனி - மறம்
81. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்
சொல்லை எடுத்து எழுதுக.
(ஈ-காமர்ஸ்)
A) இணையத்தள வணிகம்
*B) மின்னணு வணிகம்
C) மின்னணு மயம்
D) வங்கி மின்னணு மயம்
82. புறவினாவிற்கு எடுத்துக்காட்டு தருக.
*A) வருவானோ
B) ஏன்
C) யார்
D) எங்கு
83. தண்டருள் என்ற சொல்லின் பொருள் யாது?
*A) குளிர்ந்த கருணை
B) மிகுதி
C) தொண்டு
D) மேலான பொருளே
84. சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான
எதிர்ச்சொல் யாது?
A) அழிவு
B) துன்பம்
*C) சுறுசுறுப்பு
D) சோகம்
85. கோ என்ற சொல் குறிக்கும் விலங்கு எது?
*A) பசு
B) ஆடு
C) குதிரை
D) நாய்
86. பொருத்துக
A) பொருட்பெயர் 1) பூங்கா
B) இடப்பெயர் 2)
கை
C) காலப்பெயர் 3)
செடி
D) சினைப்பெயர் 4) வாரம்
A) 3,2,1,4
*B) 3,1,4,2
C) 3,1,2,4
D) 2,1,4,3
87. பொருத்துக
A) இடுகுறிப் பொதுப்பெயர் 1) கருவேலங்காடு
B) இடுகுறிச் சிறப்புப்பெயர் 2) காடு
C) காரணப் பொதுப்பெயர் 3) மரங்கொத்தி
D) காரணச் சிறப்புப்பெயர் 4) பறவை
*A) 2,1,4,3
B) 2,1,3,4
C) 2,4,3,1
D) 3,4,2,1
88. கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை
அகரவரிசையில் எழுதுக.
மாணவன், மனிதன் மான், பூனை.
*A) பூனை, மனிதன், மாணவன், மான்.
B) பூனை, மாணவன், மான்,மனிதன்.
C) மனிதன், மாணவன், மான், பூனை.
D) மான், மனிதன், மாணவன், பூனை.
89. இருபொருள் தருக. (ஆறு)
A) எண்,ஆறு
*B) எண், நதி
C) என்,எண்
D) நதி, ஆறு
90. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
கழுத்தில் சூடுவது எது?
*A) தார்
B) கணையாழி
C) தண்டை
D) மேகலை
91. கதிரவன், ஞாயிறு என்ற இருபொருளின் ஒரு சொல்
யாது?
A) சந்திரன்
B) நிலவு
C) திங்கள்
*D) சூரியன்
92. பறவைகள் இடம்பெயர்வதற்கு ---- என்று
பெயர்.
*A) வலசை போதல்
B) இடம் பெயர்தல்
C) கண்டம் விட்டு கண்டம் போதல்
D) நாடு விட்டு நாடு போதல்
93. பொருத்தமான சொல்லைக் கொண்டு
நிரப்புக.
மரங்களை வளர்த்து -------யைக் காப்போம் --------- உரங்களைத் தவிர்த்து
நிலவளம் காப்போம்.
A) இயற்கை
*B) மழை
C) காடு
D) பறவை
94. பொற்கோட்டு என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது--
*A) பொன் + கோட்டு
B) பொற் + கோட்டு
C) பொண் + கோட்டு
D) பொற்கோ + இட்டு
95. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை
இயற்றிய இளங்கோவடிகள், எந்த மன்னர் மரபைச் சேர்ந்தவர்?
*A) சேரர்
B) சோழர்
C) பாண்டியர்
D) பல்லவர்
96. சித்தம் என்னும் சொல்லின் பொருள்
யாது?
A) மனம்
*B) உள்ளம்
C) மணம்
D) எண்ணம்
97. நிலத்தினிடையே என்னும் சொல்லைப்
பிரிக்கக் கிடைக்கும் சொல்--
A) நிலம் + இடையே
*B) நிலத்தின் + இடையே
C) நிலத்து + இடையே
D) நிலத் + திடையே
98. நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து
எழுதக் கிடைக்கும் சொல்--
A) நிலா ஒளி
B) நிலஒளி
*C) நிலாவொளி
D) நிலவுஒளி
99. தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும்
தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே
வரும் எழுத்து எது?
A) ஒற்றளபெடை
B) உயிரளபெடை
*C) ஆய்தம்
D) உயிர்மெய்
100. திரையிசைப் பாடல்களில்
உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர் யார்?
A) உடுமலை நாராயணக்கவி
B) மருதகாசி
*C) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
D) கண்ணதாசன்
பொதுப்பாட வினாக்கள்
101. மனித வள மேம்பாட்டுக் குறியீடு கணக்கிடுவதில்
பின்வருவனவற்றில் எது எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை?
A) கல்வி
B) வாழ்நாள் எதிர்பார்ப்பு
*C) பாலின விகிதம்
D) வாழ்க்கைத்
தரம்
102. அம்ரி என்னும் இடத்துடன் தொடர்புைடய
ஆய்வாளர் கீழ்க்கண்டவர்களுள் யார்?
A] சார்லஸ் மேசன்
*B] அலெக்சாண்டர் பர்ன்ஸ்
C] அலெக்சாண்டர் கண்ணிங்காம்
D] சர் ஜான் மார்சல்
103. பின்வருவனவற்றைப் பொருத்துக.
A. காரகோரம் கணவாய். 1. அருணாச்சலப் பிரதேசம்.
B. பொம்மிடில்லா கணவாய். 2. ஜம்மு காஷ்மீர்.
C. ஜோசிலா கணவாய் 3. சிக்கிம்
D. நாதுல்லா கணவாய் 4. இமாச்சலப் பிரதேஷ்
A.
3 2 4 1
*B.2
1 4 3
C.
1 2 4 3
D.
4 3 2 1.
104. இலக்கமுறை
பொருளாதாரத்தில் இந்தியா உலகளாவிய போட்டியாளராகும் என்று கூறியவர்
யார்?
a அமர்தியாசென்.
B குமரப்பா.
*C சுந்தர்பிச்சை.
D டேவிட் ரிக்காடோ.
105. புதையல்ய கற்கால பொருட்கள் பையம்பள்ளி என்ற
இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அந்த பையம்பள்ளி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A) காஞ்சிபுரம்
*B) வேலூர்
C) செங்கல்பட்டு
D) தர்மபுரி
106. பின் வருவனவற்றை வரிசைப்படுத்துக
.
A.
இறையாண்மை
மக்களாட்சி சமய சார்பின்மை சமதர்மம் குடியரசு
B.
இறையாண்மை சமய
சார்பின்மை மக்களாட்சி குடியரசு சமதர்மம் .
*C. இறையாண்மை சமதர்மம் சமய சார்பின்மை மக்களாட்சி குடியரசு .
D.
இறையாண்மை சமய
சார்பின்மை குடியரசு சமதர்மம் மக்களாட்சி .
107. இலங்கையில் வெளியிடப்பட்ட மகாவம்சம் என்ற நூல்
எந்த மொழியில் எழுதப்பட்டது?
A) கிரேக்கம்
B) ரோமானியம்
C) எகிப்து
*D) பாலி
108. கீழ்க்காணும் கூற்றுகளுள்
சரியானது எது ?.
கூற்று 1 ஒரு
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்ப்பத்தி என்பது ஒரு
ஆண்டில் உற்ப்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள்
மற்றும் பணிகளின் மொத்த உற்ப்பத்தி மதிப்பைக் குறிக்கும்.
கூற்று 2 ஒரு
நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது பொதுவாக
அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்ப்பத்தியால்
மட்டும் குறிப்பிடப்படுவதன்றி அந்நாட்டு மக்களின் உயர்ந்த வாழ்க்கைத் தரம் ,அல்லது
மக்களின் நலவாழ்வை உள்ளடக்கியதாகும்.
A இரண்டு கூற்றுகளும் சரி.
B கூற்று ஒன்று சரி கூற்று இரண்டு தவறு.
C இரண்டு கூற்றுகளும் தவறு.
*D கூற்று ஒன்று தவறு இரண்டு சரி.
109. பின்வருவனவற்றைப்
பொருத்துக .
A.முகப்புரையைஇந்திய அரசியலமைப்பின் அடையாள அட்டை என க்கூறியவர் 1. முனிசி.
B. முகப்புரையை இந்திய அரசியலமைப்பின் ஜாதகம் எனக் கூறியவர் 2.
நானா பல்கி வாலா
C. முகப்புரையை இந்திய அரசியலமைப்பின் திரவக் கோள் எனக் கூறியவர் 3. ஹெர்னஸ்
பர்னர்
D. முகப்புரையை
இந்திய அரசியலமைப்பின் ஆன்மா எனக் கூறியவர் 4. தாகூர்
தாஸ் sபார்க்கவா
A. 1 4 3 2.
B. 4 3 2 1.
C. 1 2 3 4.
*d. 2 1 3 4.
110. பின்வரும் சிந்து நாகரிக இடங்களில் 200 ஹெக்டேர்
பரப்பளவு கொண்டதாக மதிப்பிடப்படும் நகரம் எது?
*A] மொகஞ்சதாேரா
B] ராகிகற்கி
C] காளிபங்கன்
D] சாங்குதாேரா
111. சரியான கூற்றினைத் தேர்வு செய்க.
கூற்று ஒன்று அதிகும்பா கல்வெட்டு தமிழ் மன்னர்களின் கூட்டணி பற்றி
குறிப்பிடுகிறது.
கூற்று இரண்டு இந்தக் கல்வெட்டுனைப் பொறித்தவர் கலிங்க அரசன் காரவேலன்
ஆவார்.
A) கூற்று
ஒன்று மட்டும் சரி
B) கூற்று
இரண்டு மட்டும் சரி
*C) கூற்று
ஒன்று மற்றும் இரண்டு சரி
D) கூற்று
ஒன்று மற்றும் இரண்டு தவறு
112. ஹரப்பா
பண்பாட்டின் காலத்தை 1956
ஆம் ஆண்டு கிமு
இரண்டாயிரத்திற்கும்
1500 க்கும்
இைடப்பட்டது என மதிப்பிட்டவர்
யார்?
A] சர்
ஜான் மார்சல்
B] மார்டிமர்
வீலர்
C] t p அகர்வால்
*D) பெர்சவ்ஸ்
113. பின்வருவனவற்றுள் எவை சரியானவை அல்ல ?
*A.குடியரசு
B. சமதர்மம்
C. சமய
சார்பின்மை
D. ஒருமைப்பாடு
.
114. சரியான இணையைப் பொருத்துக.
1 HDI. வாழ்க்கைத்தரக் குறியீடு.
2 GDP மொத்த நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு
.
3 PQLI. மனித
வளக் குறியீடு.
4 GNHI. மொத்த
உள்நாட்டு உற்ப்பத்தி .
A 3,2,4,1.
*B 3,4,1,2.
C 2,4,3,1.
D 4,2,1,3.
115. இந்தியாவில் காணப்படும் சமவெளிகள்
பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை தவறானவை அல்ல?
A. ராஜஸ்தான்
சமவெளி ஆரவல்லி மலைத்தொடருக்கு மேற்கே பரவியுள்ளது.
B. பஞ்சாப்
ஹரியானா சமவெளி பியாஸ்.ராவி சட்லஜ் போன்ற ஆறுகளின் படிவுகளால் உருவானது.
C. பிரம்மபுத்திரா
சமவெளி அதிக அளவில் பரவி உள்ள மாநிலம் மேகாலயா.
D. கங்கை
சமவெளி மேற்கே யமுனா ஆறு முதல் கிழக்கே வங்காளதேசம் வரை பரவியுள்ளது.
A. ஒன்று மற்றும் மூன்று சரி
B. இரண்டு மூன்று மற்றும் நான்கு தவறு
*c. ஒன்று இரண்டு மற்றும் நான்கு சரி.
D. அனைத்தும் சரி
116. மனித வறுமை குறியீடு HPI
எப்போதிலிருந்து
வெளியிடப்படுகிறது?
A) 1990
B) 1995
C) 1994
*D) 1997
117. இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை வடிவத்தை மாற்ற இயலாது எனக் குறிப்பிட்டுள்ள வழக்கு எது ?
A.பெருவாரி
யூனியன் வழக்கு
*B.கேசவானந்த
பாரதி வழக்கு
C. எல் ஐ
சி வழக்கு
D. செண்பகராஜ்
வழக்கு
118. கீழ்கண்டவற்றுள் மூன்றாம் உலக
நாடு எது?.
A கெனடா.
B லண்டன்.
*C மியான்மர்.
D ஜப்பான்.
119. சிற்பக் கலையில் சிறந்து விளங்குபவர்களை
மன்னீட்டாளர்கள் என்று குறிப்பிட்ட முதல் நூல் எது?
A) சிலப்பதிகாரம்
*B) மணிமேகலை
C) அகத்தியம்
D) பெருங்கதை
120. பின்வருபவர்களில் பொருத்தமற்ற
நபரைத் தேர்வு செய்க.
A] தயாராம்
சஹாேன
B] s r ராவ்
*C] பிரண்டன்
D] p p லால்
121. அதிக அளவு முதுமக்கள் தாழி கிடைத்துள்ள இடம் எது?
*A) ஆதிச்சநல்லூர்
B) கீழடி
C) பையம்பள்ளி
D) கொடுமணல்
122. இந்திய பொருளாதரத்தின் பலங்களில் தவறானது எது?.
A வேளாண்மை
முக்கிய பங்கு.
B வேகமாக வளரும்
பொருளாதாரம்.
*C கிராமப்புறங்களின்
விரிவான வளர்ச்சி.
D மக்கள்தொகை.
123. பின்வரும் கூற்றுகளில் எவை தவறானவை அல்ல ?
A. அரசியல்
நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் சிவா
B. அரசியல்
நிர்ணய சபையின் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்
C. அரசியல்
நிர்ணய சபையின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் h. c. முகர்ஜி மற்றும் பிடி கிருஷ்ணமாச்சாரியார்
D. இந்திய
அரசியலமைப்பின் வரைவு குழு தலைவர் அம்பேத்கர்.
A. இரண்டு
மூன்று மற்றும் நான்கு சரி.
B. ஒன்று
இரண்டு மற்றும் மூன்று சரி.
C. மூன்று
மற்றும் நான்கு சரி.
*D. அனைத்தும்
சரி.
124. தமிழ்ச் சமூகத்தில் மகளிர்க்குக் கற்பின் குறியீடாக வைக்கும் மலர் எது?
*A) முல்லை
B) தாமரை
C) செங்காந்தள்
D) அல்லி
125. இந்திய பொருளாதாரத்தின் பலவீனங்களில் தவறானது எது?.
A அதிக
மக்கள்தொகை.
B உள்கட்டமைப்பு
பலகீனம் .
C அத்தியாவாச
பண்டங்களின் விலை உயர்வு.
*D புதுமையான
தொழில்நுட்பம்.
126. பொருந்தாத இணையைத் தேர்வு செய்க
(I) குறிஞ்சி - மாயோன்
(II) முல்லை - சேயோன்
(III) மருதம் - இந்திரன்
(IV) நெய்தல் - கொற்றவை
A) (I) மற்றும்
(II)
B) (I), (II) மற்றும்
(III)
*C) (I), (II), மற்றும்
(IV)
D) மேற்கண்ட
அனைத்தும்
127. சிந்துெவளி நாகரிகத்தில் கோட்டைகள்
அழிக்கப்பட்டைதப் பற்றி குறிப்பிடும் சான்று எது?
A] ஜென்ட்
அவஸ்தா
*B] ரிக்
ேவதம்
C] முண்டக
உபனிடதம்
D] இதிகாசங்கள்
128. தார் பாலைவனம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை தவறானவை அல்ல?
A. உலகின்
17 வது மிகப்பெரிய பாலைவனம் .
B. உப அயன
மண்டல பாலைவனங்களில் உலகின் ஒன்பதாவது மிகப்பெரிய பாலைவனம்.
C. ராஜஸ்தான்
நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு தார் பாலைவனம் பரவியுள்ளது.
A. ஒன்று மற்றும் மூன்று சரி.
B. ஒன்று மற்றும் இரண்டு தவறு.
C. ஒன்று மற்றும் மூன்று சரி.
*D. ஒன்று இரண்டு மற்றும் மூன்று
சரி.
129. எந்த ஆண்டிற்கான மனித வளர்ச்சிக் குறியீடு
சமீபத்தில் வெளியிடப்பட்டது?
A) 2021
*B) 2022
C) 2023
D) 2024
130. "கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கியவன்" இவ்வடிகளால் குறிப்பிடப்படும் கடையேழு வள்ளல்
யார்?
A) பாரி
*B) பேகன்
C) நல்லி
D) காரி
131. மக்கள்தொகை வெடிப்பு ஆண்டு?.
A 1921.
B 1951.
*C 1961.
D 1991.
132. சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு மற்றும் சட்ட திருத்தம் எவை ?
A. 1976 ஆம்
ஆண்டு 42 வது சட்ட திருத்தம்.
B. 1987 53 வது
சட்ட திருத்தம்.
C. 1956 ஆம்
ஆண்டு ஏழாவது சட்ட திருத்தம்.
*D. 1975 ஆம்
ஆண்டு 36 வது சட்ட திருத்தம்.
133. இந்தியாவில் உள்ள தொல்பொருள்களை பாதுகாப்பதற்காக
இந்தியப் புதையல் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?
A) 1872
B) 1874
C) 1876
*D) 1878
134. பின்வருவனவற்றுள்
பொருந்தாத இணையை காண்க ?
A. மாநில
மறுசீரமைப்பு ஆணையம் 1953.
*B. உத்ராஞ்சல்
பெயர் மாற்ற சட்டம் 2005.
C. மாநில
மறுசீரமைப்பு சட்டம். 1956.
D. குடியுரிமைச்
சட்டம் 1955.
135. சங்க காலத்தின் காலம் என்ன?
*A) கி,மு 3 ஆம் நூற்றாண்டு
முதல் கி,பி 3 ஆம் நூற்றாண்டு வரை
B) கி,மு 6 ஆம் நூற்றாண்டு
முதல் கி,பி 3 ஆம் நூற்றாண்டு வரை
C) கி,மு 5 ஆம் நூற்றாண்டு
முதல் கி,பி 5 ஆம் நூற்றாண்டு வரை
D) கி,மு 3 ஆம் நூற்றாண்டு
முதல் கி,பி 6 ஆம் நூற்றாண்டு வரை
136. 2011ஆம் ஆண்டு ஒரு சதுர கிலோமீட்டரில் உள்ள மக்களின் அளவு?.
A 312.
*B 382.
C 325.
D 117.
137. சரியான கூற்றுகளை தேர்வு செய்க.
கூற்று ஒன்று கொடுங்கையான்மலை கல்வெட்டு ஒரு இசைக் கல்வெட்டாகும்.
கூற்று இரண்டு அரசலூர் கல்வெட்டும் ஒரு இசைக் கல்வெட்டாகும்.
A) கூற்று
ஒன்று மட்டும் சரி
B) கூற்று
இரண்டு மட்டும் சரி
*C). கூற்று
ஒன்று மற்றும் இரண்டு சரி
D) கூற்று
ஒன்று மற்றும் இரண்டு தவறு
138. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவது பற்றிக் குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு
பிரிவு எது?
A. பிரிவு
ஒன்பது.
*B. பிரிவு
எட்டு.
C. பிரிவு
10.
D. பிரிவு
11.
139. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
A) ஆதவன்
*B) சென்னி
C) குட்டுவன்
D) இரும்பொறை
140. ----- ஆண்டுகளுக்கு முன்பு பெரு வெடிப்பு
ஏற்பட்டது?
*A) 13.7 மில்லியன்
B) 15 மில்லியன்
C) 13 மில்லியன்
D) 20 மில்லியன்
141. 400 மற்றும் 560 க்கு மீப்பெரு பொது வகுத்தி காண்.
(A) 40
(B) 50
(C) 60
(D)* 80
(E)விடை தெரியவில்லை
142. பின்வரும் பரிமாணங்களில்
எது பல பரிமாண வறுமைக் குறியீட்டில் பயன்படுத்தப்படுவது இல்லை?
*A) வருமானம்
B) சுகாதாரம்
C) வாழ்நாள்
எதிர்பார்ப்பு
D) கல்வி
143. இரு சார் பகா
எண்களின் மீ.பொ.ம 5005. இவற்றின் ஓர் எண் 65 எனில் மற்றொரு எண்
(A) 99
(B) 58
(C)*77
(D) 66
(E)விடை தெரியவில்லை
144. கொடுங்கையான்மலை கல்வெட்டு
குறிப்பிடும் பரிவாதினி எனும்சொல் குறிப்பிடுவது?
A) நாதஸ்வரம்
B) முரசு
C) தம்புரா
*D) வீணை
145. இந்திய குடி உரிமை பற்றிக் குறிப்பிடும் அரசியலமைப்புப் பகுதி மற்றும் சரத்து காண்க.
A. பகுதி 2 சரத்து
6 முதல் 11 வரை
*B. பகுதி
இரண்டு சரத்து ஐந்து முதல் 11 வரை.
C. பகுதி
மூன்று சரத்து 7 முதல் 13 வரை.
D. பகுதி
ஒன்று சரத்து ஒன்று முதல் நான்கு வரை.
146. கீழ்கண்டவற்றுள் வெப்பத்தைக் கடத்தும் கனிமம் எது?.
*A மைக்கா
B பாக்சைட்.
C தங்கம்.
D நிலக்கரி.
147. 0 மற்றும் 6-ன் மீப்பெரு
பொது காரணியைக் காண்க.
(A)* 0
(B) 3
(C) 6
(D) வரையறுக்கப்படவில்லை
(E)விடை
தெரியவில்லை
148. தேசிய
துறைமுக வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு
A 1947.
B 1949.
*C 1950.
D 1975.
149. பின்வரும் கூற்றுகளில் தவறான இணையை காண்க ?
A. இந்தியாவில்
குடியுரிமை சட்டம் 9 முறை திருத்தி அமைக்கப்பட்டது.
B. இந்தியாவில்
ஐந்து வழிகளில் குடியுரிமையை பெறலாம்.
*C.குடியுரிமை
அமெரிக்க அரசியல் அமைப்பில் இருந்து பெறப்பட்டது.
D. வெளிநாடு
வாழ் இந்தியர்கள் தினம் ஜனவரி ஒன்பதாம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
150. மூன்று எண்களின் விகிதம் 2:3:4 அவைகளின் மீ.பொ.வ 10 எனில் அந்த எண்கள்
(A) 10,20,30
(B) 40,20,30
(C) 30,20,40
(D)* 20,30,40
(E)விடை
தெரியவில்லை
151. புறத்திணைகளில் ஒன்றான
வெட்சித் திணை எதைக்
குறிக்கிறது?
*A) ஆநிரை
கவர்தல்
B) ஆநிரை
மீட்டல்
C) மதில்
அமைத்தல்
D) போர்
செய்தல்
152. 1657 மற்றும் 2037-ஐ வகுக்கக் கூடிய
மிகப் பெரிய
எண்ணைக் காண்க. அவ்வாறு வகுக்கும் போது அவை முறையே 6, 5 ஆகிய
மீதியைத் தருகின்றன.
(A) 13
(B) 16
(C)* 127
(D) 381
(E)விடை
தெரியவில்லை
153. பின்வருவனவற்றுள் பொருந்தாத
ஒன்றை தேர்வு செய்க.
A) கன்னியாகுமரி
B) தூத்துக்குடி
C) விருதுநகர்
*D) மதுரை
154. 225, 450 இவற்றிற்கு பகாக் காரணி முறையில்
மீ.பொ.வ காண்க.
(A) 15
(B) 540
(C)* 225
(D) 450
(E)விடை
தெரியவில்லை
155. பொருந்தாத இணையைத் தேர்வு செய்க
(I) முதல் சங்கம் - பெரும்
களி
(II) இடைச் சங்கம் - அகத்தியம்
(III) கடைச் சங்கம் -
பத்துப்பாட்டு
*A) (I) மற்றும்
(II)
B) (I) மற்றும்
(III)
C) (II) மற்றும்
(III)
D) மேற்கண்ட
அனைத்தும்
156. மீப்பெரு பொது
வகுத்தியைக் காண்க. 23*32*5*74,
22*35*52*76, 23*53*72.
(A)* 980
(B) 870
(C) 960
(D) 840
(E)விடை
தெரியவில்லை
157. இந்திய
கல்விமுறை அடிப்படையில் எத்தனை நிலைகளை கொண்டுள்ளது?.
A 3.
*B 6.
C 5.
D 8.
158. ஒரு பால்காரரிடம் 175 லிட்டர் பசும்பாலும் 105
லிட்டர்
எறுமைப்பாலும் உள்ளது. இவற்றை அவர் சம கொள்ளளவு
கொண்ட இரு வகையான கலன்களில் அடைத்து விற்க விருப்பப்படுகிறார். இவ்வாறு விற்பதற்கு தேவைப்படும் கலன்களின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு?
(A) 15 லி
(B) 17 லி
(C) 25 லி
(D)* 35 லி
(E)விடை
தெரியவில்லை
159. ஒரு மெட்ரிக் டன் என்பது என்ன?
*A) 10 குவின்டால்
B) 100 குவின்டால்
C) 1/10 குவின்டால்
D) 1/100 குவின்டால்
160. பின்வருவனவற்றுள் பொருந்தாத
கூற்றைக் காண்க.
A. இந்தியா
தனது நிலை எல்லையை 7 நாடுகளுக்குப் பகிர்ந்துள்ளது.
B. இந்தியா
தனது நிலை எல்லையை அதிக அளவில் பகிர்ந்து உள்ள நாடு பங்களாதேஷ்.
C. இந்தியா
தனது நிலை எல்லையை குறைந்த அளவில் பகிர்ந்துள்ள நாடு ஆப்கானிஸ்தான்
*D. இந்தியா
தனது நிலை எல்லையை அண்டை நாடுகளுக்கு 15
ஆயிரத்து 300 கிலோ மீட்டர் பகிர்ந்தளித்துள்ளது.
161. இரு எண்களின்
கூட்டுத் தொகை 170. மேலும் அவற்றின் மீ.பொ.வ 17 எனும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடிய
ஜோடிகளின் எண்ணிக்கை எத்தனை?
(A) 1
(B)* 2
(C) 5
(D) 7
(E)விடை
தெரியவில்லை
162. சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?
A) டைக்கோ
பிராகே
B) ஆர்க்கிமிடிஸ்
*C) நிக்கோலஸ்
கோபர் நிக்கஸ்
D) தாளமி
163. 62, 78, 109-ஐ வகுத்து முறையே 2, 3 மற்றும் 4 மீதிகளாகக் கொடுக்கும் மீப்பெரு
பொதுக்காரணி காண்க.
(A)* 15
(B) 16
(C) 12
(D) 13
(E)விடை தெரியவில்லை
164. பொருளாதார வாழ்வின்
அடிப்படையை உருவாக்குவது எது என வள்ளுவர் நம்பினார்?.
*A மழை.
B வேளாண்மை.
C உற்பத்தி.
D தேவை.
165. (a-b)2, (b-3)3,
(c-a)4-ன்
மீ.பொ.வ காண்க.
(A) (c-a)4
(B) (a-b)2
(C) 0
(D)* 1
(E)விடை
தெரியவில்லை
166. ஐந்து பணி பொக்கிஷங்களின்
மலைச் சிகரம் என அறியப்படுவது எது ?
A. ஆனைமுடி.
*B.கஞ்சன்
ஜங்கா.
C. அன்னபூர்ணா.
D. நந்தா
தேவி.
167. 1 மீ 20
செ.மீ, 3 மீ 60 செ.மீ
மற்றும் 4 மீ அளவுகளைக் கொண்ட கயிறுகளின் நீளங்களை சரியாக
அளக்கப் பயன்படும் கயிற்றின் அதிகபட்ச நீளம்
(A)* 40 செ.மீ
(B) 4 மீ
(C) 20 செ.மீ
(D) 2 மீ
(E)விடை
தெரியவில்லை
168. 26, 39 மற்றும் 52 ஆகிய எண்களின் மீ.சி.ம காண்க.
(A) 154
(B) 155
(C) 156
(D)* 158
(E)விடை
தெரியவில்லை
169. கீழடி நிலையம்
நிறுவப்பட்ட ஆண்டு,மாதம் எது?
A) 2017 ஜனவரி
*B) 2017 பிப்ரவரி
C) 2017 மார்ச்
D) 2017 ஏப்ரல்
170. 1-லிருந்து 9 வரையிலான
அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச் சிய எண்ணைக் காண்க.
(A) 2510
(B) 2420
(C) 2620
(D)* 2520
(E)விடை
தெரியவில்லை
171. பின்வருவனவற்றுள் நாதியா மாவட்டத்தில் தோன்றிய கழகம் எது?
A] தக்காண
கழகம்
B] சந்தால் கழகம்
*C] இண்டிகோ கழகம்
D] இவை அனைத்தும்
172. 57 உடன் ------------- என்ற எண்ணை கூட்டினால் அது 2, 3, 4
மற்றும் 5 ஆகிய
எண்களால் சரியாக வகுபடும்.
(A) 1
(B) 2
(C)* 3
(D) 4
(E)விடை தெரியவில்லை
173. உத்திரமேரூர் கல்வெட்டு
எந்த அரசரைப் பற்றிக் கூறுகிறது?
A) விஜயாலய சோழன்
B) உத்தம
சோழன்
C) ராஜ
ராஜ சோழன்
*D) பராந்தக
சோழன்
174. 15, 24, 32 மற்றும் 45-ஆல் வகுக்கும் பொது முறையே 8, 17, 25, 38 மீதிகள்
கிடைக்கும்படியான மிகச்சிறிய எண்
(A) 1447
(B) 1440
(C)* 1443
(D) 1433
(E)விடை
தெரியவில்லை
175. ஆற்காட்டு நவாபின் படைகளால் அந்த நல்லூரில் தோற்கடிக்கப்பட்ட பாளையக்காரர் பின் வருபவர்களில் யார்?
A] முத்து
வடுகநாதர்
B] கோபால
நாயக்கர்
C] தீரன்
சின்னமலை
*D] பூலித் தேவர்
176. 6 மணிகள் முதலில் ஒன்றாக அடிக்கும். பின்னர் அவை ஒவ்வொன்றும் 2,
4, 6, 8, 10 மற்றும்
12 வினாடிகள் இடைவெளிவிட்டு அடிக்கும் என்றால் 30 நிமிடத்தில் எத்தனை முறை 6 மணிகள்
ஒன்றாக சேர்ந்து ஒலித்திருக்கும்?
(A) 4
(B) 10
(C) 15
(D)* 16
(E)விடை
தெரியவில்லை
177. இவற்றுள் சிவகங்கையில் அமைந்துள்ள தொல்லியல் இடம் அல்லாதது எது?
*A) ஆதிச்சநல்லூர்
B) மணலூர்
C) அகரம்
D) கொந்தகை
178. வேலூரில் நடை பெற்ற கழகத்தை ஒடுக்குவதற்காக உதவி கேட்டு கூட்ஸ்
சென்ற இடம் எது?
A] திருச்சி
*B] ராணிப்பேட்ைட
C] மதுரை
D] பாளையங்கோட்டை
179. இரு எண்களின்
மீ.சி.ம 48. இவ்விரு எண்களின் விகிதங்கள் முறையே 2:3 எனில் அவ்விரு எண்களின் கூடுதல்
(A) 35
(B) 40
(C)* 60
(D) 111
(E)விடை
தெரியவில்லை
180. இந்தியா குடிகாரர்களின் நாடாக
இருப்பதைவிட ஏழைகளின் நாடாக இருப்பதே மேல் என்று கூறியவர் யார்?.
A நேரு.
B குமரப்பா.
*C காந்தி.
D அம்பேத்கர்.
181. மூன்று போக்குவரத்து
சந்திப்புகளில் உள்ள நெரிசல் விளக்குகள் ஒவ்வொன்றும் முறையே 40 வினாடிகளில், 60 வினாடிகளில் மற்றும் 72 வினாடிகளில் ஒளிர்கின்றன. அவ்விளக்குகள் அனைத்தும் காலை 8 மணிக்கு சந்திப்புகளில் ஒன்றாக ஒளிர்ந்தன எனில் மீண்டும் அவை
எப்பொழுது ஒன்றாக ஒளிரும்?
(A) 8:60
(B) 8:40
(C) 8:05
(D)* 8:06
(E)விடை
தெரியவில்லை
182. மீரட் சிறைச்சாலை எப்போது
உடைக்கப்பட்டது?
*A] 1857 ேம 10
B] 1857 ஏப்ரல் 10
C] 1857 ஜூன் 10
D] 1857 ஜூலை10
183. மீச்சிறு பொது மடங்கு காண்க. 5x-10, 5x2-20.
(A) 5(x2-2)
(B) 5x2-4
(C)* 5(x2-4)
(D) 5(x-4)
(E)விடை
தெரியவில்லை
184. பொருளாதாரத்திற்கான நோபல்பரிசை அமர்த்தியாசென்
பெற்ற ஆண்டு
A 2000
B 2008
C 1995
*D 1998
185. 254 மற்றும் 508 ஆகிய எண்களால் வகுக்கும் போது மீதியாக 4-ஐத் தரும்
மிகச் சிறிய எண்ணைக் காண்க.
(A) 1024
(B)* 512
(C) 1020
(D) 504
(E)விடை
தெரியவில்லை
186. பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
A) முத்துப்பட்டி
B) புகலூர்
*C) ஆதிச்சநல்லூர்
D) அரச்சலூர்
187. மீச்சிறு பொது மடங்கு
காண்க. 8x4y2,
48x2y4.
(A) 48x4y2
(B)* 48x4y4
(C) 8x4y4
(D) 8x2y2
(E)விடை தெரியவில்லை
188. செரஸ் என்பது என்ன?
A) விண்கல்
B) விண்மீன்கள்
C) கோல்
*D) சிறு
கோள்
189. மீச்சிறு பொது மடங்கு
காண்க. -9a3b2,
12a2b2c.
(A) 36a3b2c
(B) -36a2b2
(C) -3a2b2
(D)* -36a3b2c
(E)விடை தெரியவில்லை
190. நடுக்கல் வழிபாட்டின்
ஆறு படிநிலைகளைப்
பற்றி குறிப்பிடும் நூல் எது?
A) புறப்பொருள்
வெண்பாமாலை
B) நன்னூல்
C) பன்னிரு
பாட்டியல்
*D) தொல்காப்பியம்.
191. அரசியல் அமைப்பு நிர்ணய சபையில் பங்கேற்ற
பெண்களின் எண்ணிக்கை காண்க .
A. 1.
B. 293
*C. 15.
D. 4.
192. 8, 9 மற்றும் 12 ஆல் வகுபடும் மிகப்பெரிய 4
இலக்க எண்
(A) 9999
(B) 9996
(C) 9696
(D)* 9936
(E)விடை
தெரியவில்லை
193. மொழிவாரியாக
உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் எது?
A. தமிழ்நாடு.
B. கர்நாடகா.
C. பஞ்சாப்.
*D. ஆந்திரா.
194. வளிமண்டலத்தில் மேகங்கள்
மிதப்பதற்கு அவற்றின் குறைந்த ---- காரணமாகும்?
A) நிறை
*B) அடர்த்தி
C) அழுத்தம்
D) திசைவேகம்
195. 3, 4, 5, 6 மற்றும் 8 ஆல்
வகுபடும் மிகச்சிறிய வர்க்க எண்
(A) 900
(B) 1200
(C) 2500
(D)* 3600
(E)விடை தெரியவில்லை
196. 2024-2025 ஆம்நிதியாண்டின் (GDP) வளர்ச்சி எத்தனை சதவிகிதம் இருக்கும் என்று
(RBI) கணித்துள்ளது?.
A) 6.
B) 6.5
*C) 7
D) 7.5
197. இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று முதல் முதலில் எடுத்துரைத்தவர் யார் ?
A. எஸ்
என் ராவ்.
B. அம்பேத்கர்.
C. ராஜேந்திர
பிரசாத் .
*D. எம்
என் ராய்.
198. மொழி வாரி மாநில மறுசீரமைப்பு எந்த சட்ட திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டது?
*A.ஏழாவது
சட்ட திருத்தம்.
B. 42வது
சட்டத் திருத்தம்.
C. முதல்
சட்ட திருத்தம்.
D. 24வது
சட்டத் திருத்தம்.
199. விவேக வர்த்தினி பத்திரிக்கையை வெளியிட்டவர் யார்?
*A] கந்துகூறி
வீரசலிங்கம் பந்தலு
B] எம் ஜி
ரானேட
C] பி எம்
மலபாரி
D] இவர்கள்
அனைவரும்
200. பின்வருவனவற்றைப் பொருத்துக.
A. குஜராத்
1. 1963.
B. ஹரியானா
2. 1960.
C. நாகலாந்து
3. 1966.
D. சிக்கிம்
4. 1975.
A. 4 2 3 1
B. 2 3 1 4
C. 4 1 3 2
D. 4 3 2 1.