Sunday, January 26, 2025

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் டிஎன்பிஎஸ்சி தொகுதி IV வாராந்திரத் தேர்வு (2) வினாவிடைகள்

                        உள்ளே

    1. தமிழ்ப்பாட  வினா விடைகள்

பொதுப்பாட வினாவிடைகள்

 

 

குறிப்பு: *குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

தமிழ்ப்பாட  வினா விடைகள்

 

1.        வானோலி என்பதைப் பிரித்தெழுதக் கிடைப்பது?

வான + ஒலி

*வான் + ஒலி

வானம் + ஒலி

வானத்து + ஒலி

 

2.         முகில் என்ற சொல்லின் பொருள் யாது?

விண்

மழை

*மேகம்

வெளி

 

3.       ‘தேன்மனம்’ சொல்லைத் திருத்தி எழுதுக.

தேந்மனம்

*தேன்மணம்

தேண்மனம்

தேன்மநம்

 

4.        “வரவரப் படிப்பில் கவனம் இல்லாமல் போய்விட்டது” தொடரில் இடம்பெற்றுள்ள கவனம் என்பதன் பொருள் யாது?

பாதுகாப்பு

உற்றுக் கேட்டல்

பராமரித்தல்

*நாட்டம்

 

5.        “நா ஊருக்குப் போய்ட்டு வந்தேன்” எழுத்துத் தமிழில் எழுதுக.

நான் ஊருக்குப் போய்ட்டு வந்தேன்.

நான் ஊர் போய் வந்துவிட்டேன்.

நான் ஊருக்குப் போனேன், வந்துவிட்டேன்.

*நான் ஊருக்குப் போய் வந்தேன்.

 

6.        ‘உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள வில போகும்’ சொலவடையை எழுத்துத் தமிழில் எழுதுக.

உழைக்கின்ற மாடுதான் ஊருக்குள்ள வெல போகும்.

*உழைக்கிற மாடுதான் ஊருக்குள் விலை போகும்.

உழைக்கிற மாடுதா ஊர்ல வில போகும்.

உழைக்கின்ற மாடுதான் ஊரில் விலை போகும்.

 

7.        இறும்பு சுரம், பழவம், முளரி, பொச்சை போன்ற சொற்கள் குறிக்கும் ஒரே சொல்?

கழனி

அருவி

*காடு

நிலம்

 

8.        ‘துஷ்டி’ என்பதன் சரியான தமிழ்ச்சொல் என்ன?

*துயரம்

துக்கம்

அவச்சொல்

கேதம்

 

9.        “நான் நட்ட செடிகள் முழுவதும் மரங்களாக வளரத் தொடங்கியபோது அவற்றில் பறவைகள் வந்து தங்கின.” தொடரில் இடம்பெற்றுள்ள பெயரெச்சம்/வினையெச்சம் எது?

நட்ட, தங்கின

வளர, தொடங்கி

*நட்ட, வந்து

வளர, தங்கின

 

10.    ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு’  காத்தலும் என்பதன் எதிர்்ச்சொல்லைத் தெரிக.

பேணுதலும்

*அழித்தலும்

பதுக்கலும்

துய்த்தலும்

 

11.   பொருத்துக:

அ. சூரன் – 1. செல்வம்

ஆ. பொக்கிஷம் – 2. பெரும்பரப்பு

இ. சாஸ்தி – 3. வீரன்

ஈ. விஸ்தாரம் – 4. மிகுதி

3 1 2 4

*3 1 4 2

4 3 1 2

2 3 1 4

 

12.    பூட்டுங்கதவுகள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

பூட்டு + கதவுகள்

*பூட்டும் + கதவுகள்

பூட்டின் + கதவுகள்

பூட்டிய + கதவுகள்

 

13.    சரியான வாக்கியத்தைத் தெரிக.

வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் மேடைகளில் அரசியல்ப் பேசக்கூடாது என்று அவருக்குத் தடை விதித்தது ஆங்கில அரசு.

வாய்ப்பூட்டு சட்டம் மூலம் மேடைகளில் அரசியல் பேச கூடாது என்று அவருக்குத் தடை விதித்தது ஆங்கில அரசு.

வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்குத் தடை விதித்தது ஆங்கில அரசு.

*வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்குத் தடை விதித்தது ஆங்கில அரசு.

 

14.    பொருந்தாத சொல்லைத் தெரிக.

கால்வாய்

நகர்ப்புறம்

*வாசல்

தசை

 

15.    வாக்கியத்தைப் படித்து வரிசைப்படுத்துக.

“அறன் காத்த எந்தை இயற்கை எய்தினார்.”

மரூஉ, கடைப்போலி, மங்கலம்

மங்கலம், கடைப்போலி, மரூஉ

*கடைப்போலி, மரூஉ, மங்கலம்

கடைப்போலி, மங்கலம், மரூஉ

 

16.    ‘வெய்யா மாடம்’ இலக்கணக் குறிப்பு தருக.

பெயரெச்சம்

முதனிலைத் திரிந்த பெயரெச்சம்

எதிர்மறைப் பெயரெச்சம்

*ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

 

17.    பொருள் கூறுக. ‘ஞெகிழி’

ப்லாஸ்டிக்

*தீச்சுடர்

நெகிழ்ச்சி

மருட்சி

 

18.    பொருத்தமான சொல்லை இட்டு தொடரை நிறைவு செய்க.

“உட்பகுதி தோண்டப்பட்டவை -- அவை தோணிகள் எனப்பட்டன”

ஆனால்

எனவும்

பிறகு

*என்பதால்

 

19.    கோடிட்ட இடத்தை உரிய சொல் கொண்டு நிரப்புக.

“நாம் காற்றுப்பைகளைக் கட்டிக்கொண்டு சென்று கொஞ்சம் முத்துச்சிப்பிகள் – வருவோம்.

எடுத்து

*சேகரித்து

அகழ்ந்து

தேடிக்கொண்டு

 

20.    வேறுபட்ட ஒன்றைத் தெரிக.

பதம்

*வார்த்தை

மொழி

கிளவி

 

21.    மாறுபடாத சொற்களைக்கொண்ட தொடரைத் தெரிக.

*அவனது வேடம் களைந்ததில் இலக்குமிக்கு மகிழ்ச்சிதான்.

அவனது வேஷம் களைந்ததில் இலக்குமிக்கு மகிழ்ச்சிதான்.

அவனது வேடம் களைந்ததில் இலக்குமிக்கு சந்தோஷம்தான்.

அவனது வேடம் களைந்ததில் இலட்சுமிக்கு மகிழ்ச்சிதான்.

 

22.    வெள்ளத்தால் அழியாது வெந்தணலால்

வேகாது வேந்த ராலும்  

கொள்ளத்தான் முடியாது கொடுத்தாலும்

நிறைவன்றிக் குறைவு றாது  அது எது?

*விச்சை

வீரம்

கொடை

மானம்

 

23.    பொருத்தமான சொல்லைக்கொண்டு கோடிட்ட இடத்தை நிரப்புக.

உலகிலுள்ள உயிரினங்களுள் மனிதப்பிறவி தனித்தன்மை உடையது.--  மனிதப் பிறவிக்குத்தான் எதிர்காலம் சொல்ல முடியாது.

என்பதால்

அதைவிட

மற்றும்

*ஏனென்றால்

 

24.    தொடரில் அமைந்துள்ள சொற்களுக்குப் பொருள் அறிந்து அவற்றை வரிசைப்படுத்துக.

அழகான சோலைகளைக்கொண்ட எங்கள் தலைவனின் ஊர் அகளமான மதிலால் சூழப்பட்டது.

சோ, ஐ, கா, யா

யா, கா, ஐ, சோ

சோ, யா, கா, ஐ

*கா, ஐ, யா, சோ

 

25.    கோடிட்ட இடத்தை நிரப்புக.

காலையில் பள்ளி மணி –

கேட்டது

*ஒலித்தது

ஒளித்தது

ஒழித்தது

 

26.  பொருந்தாத ஓசை உடைய சொல் எது?

பாய்கையால்

மேன்மையால்  

*திரும்புகையில்

அடிக்கையால்

 

27.  எவன் + ஒருவன் என்பதைச் சேர்த்தெழுதக் கிடைப்பது?

என்னொருவன்

எவனோவொருவன்

*எவனொருவன்

எவனோயோருவன்

 

28.  ‘மடமகள்’ எதிர்ச்சொல்லைத் தெரிக.

*முதுமகள்

இளமகள்

முதல் மகள்

நன்மகள்

 

29.  பொருத்துக.   

அ. நாற்று  1. பறித்தல்

ஆ. நீர்  2. அறுத்தல்

இ. கதிர்  3.  நடுதல்

ஈ. களை  4. பாய்ச்சுதல்

3 4 1 2

*3 4 2 1

4 3 2 1

3 2 1 4

 

30.  அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் - ஏலேலங்கிடி ஏலேலோ

ஆளுபணம் கொடுத்துவாரான் - ஏலேலங்கிடி ஏலேலோ.

‘கொடுத்துவாரான்’ எழுத்து வழக்கில் எழுதுக.

கொடுக்கிறான்

கொடுத்து வருவான்

*கொடுத்து வருகிறான்

கொடுக்க வருகிறான்

 

31.  கூலக்கடைத்தெரு என்பதன் மரூஉ யாது?

கூலைக்கடைத்தெரு

கூளைக்கடைத்தெரு

கூழங்கடைத்தெரு

*கூழைக்கடைத்தெரு

 

32.  “நட!” என்றதும், எழுந்து நடந்தவள் மீண்டும் விழுந்துவிட்டாள்.

தொடரில் உள்ள சொற்களின் இலக்கணக் குறிப்பறிந்து வரிசைப்படுத்துக.

வினைமுற்று, வினையெச்சம், வினைச்சொல், வினையாலணையும் பெயர்

வினைமுற்று, வினைச்சொல், வினையாலணையும் பெயர், வினையெச்சம்

*வினைச்சொல், வினையெச்சம், வினையாளணையும் பெயர், வினைமுற்று

வினைச்சொல், வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர்

 

33.  ஆழ்வார்களை அகரவரிசைப்படுத்துக.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடியாழ்வார், திருமழிசையாழ்வார், மதுரகவியாழ்வார், திருப்பாணாழ்வார்.

ஆண்டாள், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார், மதுரகவியாழ்வார்.

*ஆண்டாள், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், நம்மாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார், மதுரகவியாழ்வார்.

ஆண்டாள், குலசேகராழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், மதுரகவியாழ்வார்.

 

34.  தொடரைப் படித்து கோடிட்ட இடத்தை நிரப்புக.

“அயலவர் உண்ணாது இருக்கும்போது நாம் -- உண்பது நெறியும் அன்றுமுறையும் அன்று”

அமர்ந்து

*மட்டும்

மற்றும்

கூட

 

35.  உரிய வினாச்சொல்லை இட்டு நிரப்புக.

மதியாதார் தலைவாசல் மிதிக்கக்கூடாது --?

எங்கே

எப்படி

*ஏன்

யாருடைய

 

36.  பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் பயன்படாத சொல்லைக்கொண்ட வரிசையைத் தெரிக.

விதை, கொதி, கட்டு

*இடி, பேசு, படி ,

நிலவு, நாடு, ஆடு

ஓடு, பார், மிதி

 

37.  உரிய இணைப்புச் சொல்லைக் கொண்ட முழுச் செய்தித் தொடரைத் தெரிக

மர்மக் காய்ச்சல் பரவல், மக்கள் பீதி

மர்மக் காய்ச்சல் பரவலால் மக்களிடையே பீதி

பரவும் மர்மக் காய்ச்சலால், பீதியில் மக்கள்

*மர்மக் காய்ச்சல் பரவி வருவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

 

38.  சரியான வரிசையில் மயங்கொலிச் சொற்களை அமைக்க.

அன்பு வாசம் கமழும் உள்ளமே, ஆண்டவனுக்கான உணவு.

மனம்  (றன்னகரம்), மணம் (டண்ணகரம்), இரை  (இடையினம்), இறை (வல்லினம்)

 

இறை (வல்லினம்), இரை (இடையினம்), மனம் (றன்னகரம்), மணம் (டண்ணகரம்)

 

மனம் (றன்னகரம்), இறை (வல்லினம்), மணம் (டண்ணகரம்), இரை (இடையினம்)

*மணம் (டண்ணகரம்), மனம் (றன்னகரம்), இறை (வல்லினம்), இரை (இடையினம்)

 

39.  பொருந்தாச் சொல்லைத் தெரிக.

ஜென்

*மணக்கொடை

காய்தே மில்லத்

தாரணி

 

40.  பொருத்தமான இணைப்புச் சொல்லைத் தெரிக.

“தமிழகத்தில் மழை பெய்துவருகிறது.  _____  இரண்டு நாள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு.

அதனால்

எனவே

*மேலும்

ஏனென்றால்

 

41. திரிபுச் சுட்டைத் தேர்ந்தெடுக்க.

*அந்தப் பெண்

அப்பையன்

அவர்

உவன்

 

42.   சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு.

*A) கத்தி யின்றி ரத்த மின்றியுத்த மொன்று வருகுது

B) யுத்த மொன்று வருகுது கத்தி யின்றி ரத்த மின்றி

c) ரத்த மின்றி கத்தி யின்றி யுத்த மொன்று வருகுது

D) ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது கத்தி யின்றி

 

43.   சரியான ஒலி மரபைத் தேர்ந்தெடு.

*A) புலி - உறுமும்

B) சிங்கம் - பிளிறும்

C) யானை - முழங்கும்

D) மாடு - கத்தும்

 

44.   தவறான இனையைத் தேர்ந்தெடு.

A) மாடு - கன்று

B) யானை - கன்று

C) புலி - பறழ்

*D) சிங்கம் - குட்டி)

 

45.  இளமைப் பெயர்களைப் பொருத்துக.

A) கரடி 1) கன்று

B) புலி 2) குருளை

C) மாடு 3) குட்டி

D) சிங்கம் 4) பறழ்

A) 3,4,2,1

*B) 3,4,1,2

C) 2,3,4,1

D) 4,3,1,2

 

46.  அடைப்பிற்குள் உள்ள சொல்லின் ஒலி மரபைத் தேர்ந்தெடு. (மாடு)

A) கத்தும்

B) எக்காலமிடும்

*C) கதறும்

D) பிளிறும்

 

47.  உயர்திணை, அஃறிணை வகை அறிந்து பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) முகிலன்

B) கயல்விழி

C) தலைவி

*D) புத்தகம்

 

48.  தொகைச் சொற்களை விரித்து எழுதுக. (முத்தமிழ்)

A) மா, பலா, வாழை.

*B) இயல், இசை, நாடகம்.

C) அஃறினை, உயர்திணை.

D) கீழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு.

 

49.  பொருத்துக.

A) மரபு 1) Media

B) ஊடகம் 2) Tradition

C) பொம்மலாட்டம் 3) Journalism

D) இதழியல் 4) Puppetry

*A) 2,1,4,3

B) 2,1,3,4

C) 2,3,4,1

D) 3,2,1,4

 

50.  சரியாக நிறுத்தல் குறியிடப்பட்டத் தொடரைத் தேர்ந்தெடு.

A) மனிதர் வாழ்வு இயற்கையோடு இயைந்தது; கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை.

B) மனிதர் வாழ்வு இயற்கையோடு இயைந்தது. கவின்மிகு காலைப்பொழுதும் மயக்கும் மாலைப்பொழுதும் பிறை நிலவும் ஓடும் ஓடையும் பாயும் ஆறும் கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை.

*C) மனிதர் வாழ்வு இயற்கையோடு இயைந்தது. கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை.

D) மனிதர் வாழ்வு இயற்கையோடு இயைந்தது கவின்மிகு காலைப்பொழுதும், மயக்கும் மாலைப்பொழுதும், பிறை நிலவும், ஓடும் ஓடையும், பாயும் ஆறும், கத்தும் கடலும் நம் மனத்தை மயக்க வல்லவை

 

51.  கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்.

தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்?

A) பாரதிதாசன்

*B) வானிதாசன்

C) கண்ணதாசன்

D) செல்லிதாசன்

 

52.  தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

வானிதாசனின் இயர்பெயர் என்ன?

A) செல்லிதாசன்

*B) அரங்கசாமி என்ற எத்திராசலு

C) கவிஞரேறு

D) பாவலர்மணி

 

53.  தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

 வானிதாசன் யாருடைய மாணவர்?

*A) பாரதிதாசன்

B) பாரதியார்

C) முடியரசன்

D) நாமக்கல் கவிஞர்

 

54.  தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

வானிதாசன் அறிந்த பிறமொழிகளில் பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) தெலுங்கு

B) ஆங்கிலம்

*C) சிங்கலம்

D) பிரெஞ்சு

 

55.  தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

வானிதாசனுக்கு செவாலியர் விருது எந்த அரசால் வழங்கப்பட்டது?

*A) பிரெஞ்சு

B) ஆங்கிலம்

C) மதராஸ்

D) டச்சு

 

56.  தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர் யார்?

A) சுரதா

B) முடியரசன்

C) வண்ணதாசன்

*D) வானிதாசன்

 

57.  தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

ஓடை என்னும் பாடல் வானிதாசனின் எந்த நூளில் இடம்பெற்றுள்ளது?

A) எழிலோவியம்

B) தமிழச்சி

C) கொடிமுல்லை

*D) தொடுவானம்

 

58.  தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

குழந்தை இலக்கியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

*A) வானிதாசன்

B) வண்ணதாசன்

C) கண்ணதாசன்

D) பாரதிதாசன்

 

59.  தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன். அரங்கசாமி என்ற எத்திராசலு என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இவர் பாரதிதாசனின் மாணவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர். கவிஞரேறு, பாவலர்மணி முதலிய சிறப்புப்பெயர்களைப் பெற்றவர். இவருக்குப் பிரெஞ்சு அரசு செவாலியர் விருது வழங்கியுள்ளது. தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம், எழிலோவியம், குழந்தை இலக்கியம் என்பன இவரது நூல்களில் சிலவாகும். பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள ஓடை என்னும் பாடல் இவரது தொடுவானம் என்னும் நூலில் உள்ளது.

வானிதாசன் இயற்றாத நூலைத் தேர்ந்தெடு.

A) எழிலோவியம்

B) தமிழச்சி

C) கொடிமுல்லை

*D) தமிழச்சியின் கத்தி

 

60.  பொருந்தாத ஒன்றை கண்டறிக.

A) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்

B) கவிஞரேறு

C) பாவலர்மணி

*D) அரங்கசாமி என்ற எத்திராசலு

 

61.  காடு ஜாதவ் பயேங்கால் உருவாக்கப்பட்டது. இது எவ்வகைத் தொடர்?

*A) செயப்பாட்டு வினை

B) செய்வினை

C) பிறவினை

D) தன்வினை

 

62.  எதிர்ப்பாலுக்குரிய பெயரை எழுதுக. (தோழி)

A) சிறுவன்

*B) தோழன்

C) ஆண்

D) பெண்

 

63.  பலவின்பாளுக்கு எடுத்துக்காட்டு தருக.

A) கல்

B) பசு

*C) மண் புழுக்கள்

D) செடி

 

64.  பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.

A) குழலி நடனம் ஆடியது.

*B) குழலி நடனம் ஆடினாள்.

C) குழலி நடனம் ஆடுவான்.

D) குழலி நடனம் ஆடின.

 

65.  அடைப்பிற்குள் கொடுக்கப்பட்டுள்ள சொல்லுக்கு சரியான தமிழாக்கம் தருக. (Forest Conservator)

A) வன விலங்குகள்

B) வனவியல்

*C) வனப் பாதுகாவலர்

D) காடு

 

66.  தவறான இனையைத் தேர்ந்தெடு.

A) நீரோடை - Stream

B) உவமை - Parable

C) இயற்கை வளம் - Natural Resource

*D) வனவியல் - Jungle

 

67. பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக. (சந்தோசம்)

*A) மகிழ்ச்சி

B) சினம்

C) வியப்பு

D) துன்பம்

 

68.  பொருத்துக.

A) ஆச்சரியம் 1) துவக்கம்

B) ஆரம்பம் 2) இலக்கு

C) பரீட்சை 3) வியப்பு

D) லட்சியம் 4) தேர்வு

A) 3,1,2,4

*B) 3,1,4,2

C) 3,2,1,4

D) 3,4,2,1

 

69.  சரியான இனையைத் தேர்ந்தெடு.

*A) கடல்வாழ் உயிரினம் - Marine creature

B) கப்பல்தளம் - Marine technology

C) கப்பல் தொழில்நுட்பம் - Shipyard

D) பெருங்கடல் - Submarine

 

70.  Storm என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழாக்கம் செய்க.

A) மழை

B) வெயில்

*C) புயல்

D) வெள்ளம்

 

71.  அணிகலன் என்ற தமிழ் சொல்லின் நேரடி ஆங்கில சொல் எது?

A) Moral

B) Uniforin

C) Guidance

*D) Ornament             

 

72.  பொருத்துக.

A) கோடை விடுமுறை 1) Child Labour

B) குழந்தைத் தொழிலாளர் 2) Summer Vacation

C) கல்வியறிவு 3) Discipline

D) ஒழுக்கம் 4) Literacy

A) 2,1,3,4

*B) 2,1,4,3

C) 2,4,3,1

D) 3,4,2,1

 

73.  தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.

(என் தாயார் என்னை ------ காத்து வளர்த்தார்.)

*A) கண்ணை இமை காப்பது போல்

B) தாயைக் கண்ட சேயைப் போல

C) உள்ளங்கை நெல்லிக்கனி போல

D) இஞ்சி தின்ற குரங்கு போல

 

74.  தொடருக்குப் பொருத்தமான உவமையை எடுத்து எழுதுக.

(அப்துல் கலாமின் புகழ் ----------------- உலகெங்கும் பரவியது.)

*A) குன்றின்மேலிட்ட விளக்கு போல

B) குடத்துள் இட்ட விளக்கு போல

C) கிணற்றுத் தவளை போல

D) பசுமரத்தாணி போல

 

75.  கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு.

1) தூரிகை - Brush

2) சிற்பம் - Sculpture

3) படைப்பாளர் - Artist

4) கல்வெட்டு - Inscriptions

A) 1,2

B) 1,2,3

*C) 1,2,4

D) 1,2,3,4

 

76.  பொருந்தாததைத் தேர்ந்தெடு.

A) கையெழுத்துப்படி - Manuscripts

B) குகை ஓவியங்கள் - Cave paintings

C) நவீன ஓவியம் - Modern Art

*D) கலைஞர் - Creator

 

77.  கோபம் என்னும் வடசொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது?

A) வருத்தம்

B) அச்சம்

*C) சினம்

D) மனம்

 

78.  மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

பாரி மடமகள் பாண்மகற்கு - நீர்உலையுள்

பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்

ஒன்றாகு முன்றிலோ இல்.

இப்பாடளில் இடம்பெற்றுள்ள (முன்றிலோ இல்) ென்ற பழமொழியின் பொருள் யாது?

*A) ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை

B) ஒன்றுமில்லாத நாடு எதுவுமில்லை

C) ஒன்றுமில்லாத காடு எதுவுமில்லை

D) ஒன்றுமில்லாத கூடு எதுவுமில்லை

 

79.  Folklore என்ற சொல்லைத் தமிழ் படுத்துக.

A) நாகரிகம்

*B) நாட்டுப்புறவியல்

C) அறுவடை

D) வேளாண்மை

 

80.  நீர்ப்பாசனம், பயிரிடுதல் ஆகிய சொற்களின் ஆங்கில சொற்களை குறிப்பிடுக.

A) Harvest/Paddy

B) Agronomy/Agriculture

C) Folklore/Poet

*D) Irrigation/Cultivation

 

81.  தலைப்புச் செய்திகளை முழு சொற்றொடர்களாக எழுதுக.

எ.கா.) தலைப்புச் செய்தி: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் - வானிலை மையம் அறிவிப்பு.

*A) தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

B) தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் வானிலை மையம் அறிவிப்பு.

C) தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை விரைவில்தொடக்கம் வானிலை மையம் அறிவிப்பு.

D) தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதில் தாமதம் என வானிலை மையம் அறிவிப்பு.

 

82.  சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.

(நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். ----------- துன்பப்பட நேரிடும்.)

*A) இல்லையென்றால்

B) ஆகையால்

C) அதுபோல

D) மேலும்

 

83.  சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.

(பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன். - - - - - - - - பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.)

A) ஏனெனில்

B) இல்லையென்றால்

*C) எனவே

D) அதுபோல

 

84.  (கவிதா பாடினாள்) இது எவ்வகை வினை?

A) பிறவினை

*B) தன்வினை

C) செயப்பாட்டு வினை

D) செய்வினை

 

85.  கால மரமைத் திருத்தி எழுதுக.

A) நேற்று மழை பெய்யும்

*B) நேற்று மழை பெய்தது

C) நேற்று மழை பெய்கின்றது

D) இன்று காலை மழை பெய்கின்றது

 

86.  பாடல் மற்றும் பாடல் ஆசிரியரோடு பின்வருவனவற்றைப் பொருத்துக.

A.a. எளிய மொழியில் தமிழ் நூல் எழுதிட வேண்டும் என பாடியவர் 1. நாமக்கல் கவிஞர்.

B. அருள்நெறி அறிவை தரலாகும் அதுவே தமிழன் குரலாகும் எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் 2. பாரதிதாசன்.

C. ஒன்றல்ல இரண்டல்ல தம்பி என தொடங்கும் பாடலின் ஆசிரியர் 3. உடுமலை நாராயணன்.

D. கார்த்திகை தீபம் என காடெல்லாம் பூத்திருக்கும் என்னும் பாடலின் ஆசிரியர் 4.சுரதா.

*a. 2 1 3 4.

B. 3 2 1 4.

C. 3 4 1 2.

D. 1 2 3 4.

 

87.   தமிழ் நூல்களில் திரு என்னும் அடை மொழியோடு வெளிவந்த நூல் எது?

A. திருமந்திரம்.

B. திருகடிகம்.

C. திருக்குற்றாலக் குறவஞ்சி.

*d. திருக்குறள்.

 

88.  பின்வருவனவற்றுள் முத்துராமலிங்க தேவர் பற்றிய கூற்றுகளில் பொருந்தாத இணையை காண்க.

A. தேசியம் காத்த செம்மல் என முத்துராமலிங்க தேவரை பாராட்டியவர் திரு வி கல்யாண சுந்தரனார்.

B. முத்துராமலிங்க தேவரின் அரசியல் குரு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

*c. நேதாஜி என்னும் பெயரில் நாளிதழை நடத்தியவர் முத்துராமலிங்க தேவனார்.

D. முத்துராமலிங்க தேவரின் வீரமிக்க பேச்சு விடுதலைக்கு உதவும் எனக் கூறியவர் காமராசர்.

 

89.  தொல்காப்பியம் படித்து என் தொல்லைகளை மறந்தேன் இந்நிலையை படித்து என் இன்னல்களை மறந்தேன் என்ற கூற்றை கூறியவர் யார்?

A. பாரதியார்.

B. வாணிதாசன்.

*c. சிதம்பரனார்.

D. முத்துராமலிங்க தேவர்.

 

90.  ராபி சேதுப்பிள்ளை பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறான இணையை காண்க.

A. சொல்லின் செல்வர் எனப் போற்றப்படுபவர் ரா பி சேதுப்பிள்ளை.

B. செய்யுளுக்கே உரிய எதுகை மோனை உரைநடையில் கொண்டு வந்தவர்.

*c. சாகித்ய அகாடமி விருது பெற்ற இரண்டாவது நூல் தமிழ் இன்பம்.

D. ஊரும் பேரும் என்னும் நூலின் ஆசிரியர் ரா பி சேதுப்பிள்ளை.

 

91.  திருக்குறள் வகுப்புகள் நடத்தியும் சொற்பொழிவை நிகழ்த்தியும் திருக்குறளை பரப்பும் பணி செய்தவர் யார்?

*a. வி முனுசாமி.

B. பே நா குப்பசாமி.

C. பரிமேலழகர்.

D. நச்சுனார்க்கினியர்.

 

92.  காளமேக புலவர் இயற்றிய நூல்களுள் பொருந்தாதவை எவை?

A. பர பிரம்ம விளக்கம்.

B. சரஸ்வதி மாலை.

C. திருவானைக்காவூலா.

C. திருவானைக்காவூலா.

*d. சரஸ்வதி அந்தாதி.

 

93.  கருத்துப்பட ஓவியங்களை இந்தியா என்னும் இதழில் வரைந்தவர் யார்.

*a. பாரதியார்.

B. பாரதிதாசன்.

 C. தேன் அரசு.

D. வாணிதாசன்.

 

94.  திக்கெல்லாம் புகழூறும் திருநெல்வேலி என்று கூறியவர் யார்?

A. திருநாவுக்கரசர்.

*b. திருஞானசம்பந்தர்.

C. மாணிக்கவாசகர்.

D. சுந்தரர்.

 

95.  தமிழிசை காவலர் குற்றாலம் முனிவர் கடித இலக்கியத்தின் முன்னோடி என்றெல்லாம் சிறப்பிக்கப்படுபவர் யார்?

 *a. டி கே.சிதம்பரநாதர்.

B. தேவநேய பாவாணர்.

C. இளங்குமரனார்.

D. பெருஞ்சித்திரனார்.

 

96.  தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?

A. கண்ணதாசன்.

*b. வாணிதாசன்.

C. பாரதிதாசன்.

D. காளிதாஸ்.

 

97.  செல்வத்து பயனே ஈதல் எனத் தொடங்கும் பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

A. அகநானூறு.

B. பழமொழி நானூறு.

C. நாலடியார்.

*d. புறநானூறு.

 

98.   .  ஒன்று  முதலான 12 ராசிகளையும் விண்மீன்களையும் வரைந்த செய்தி எந்த சங்க நூலில் குறிப்பிடப்படுகிறது?

A. மதுரைக்காஞ்சி.

B. முல்லைப்பாட்டு.

C. பட்டினப்பாலை.

*d. நெடுநல்வாடை.

 

99.  வீருடைச் செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி என தமிழின் புகழை பறைசாற்றியவர் யார்?

*a. பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

B. தேவநேய பாவணர்.

C. பரிதிமாற் கலைஞர்.

D. பாரதிதாசன்

 

100.  பெரும் முத்திரையர்கள் பற்றி குறிப்பு காணப்படும் நூல் எது?

A. நற்றிணை.

B. பழமொழி நானூறு.

*c. நாலடியார்.

D. திருக்குறள்

 

பொதுப்பாட வினாவிடைகள்

101)  பின்வரும் கூற்றுகளில் பொருந்தாத இணையை காண்க.

A. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம் என குறிப்பிடுகிறது.

B. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 17 தீண்டாமை ஒழிப்பு பற்றிக் குறிப்பிடுகிறது.

*C. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 (4 ) பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பற்றி குறிப்பிடுகிறது.

D. குற்றம் சாட்டப்பட்டவரை பாதுகாக்கும் உரிமையை பற்றி இந்திய அரசியலமைப்பின் பிரிவு 20 குறிப்பிடுகிறது.

102)  உலகில் அதிக மழை பொழியும் இந்திய மாநிலம் எது?

*A. மேகாலயா.

B. தமிழ்நாடு

C. ராஜஸ்தான்

D. அருணாச்சல பிரதேசம்

103)  ஐந்தாண்டுத் திட்டங்கள் வாயிலாக பொருளாதாரத் திட்டமிடல் முறை எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?.

A. UK

*B. USSR

C. USA

D. UAE

 

104)  பின் வருவனவற்றைப் பொருத்துக.

A.சினுக் 1. மத்திய ஆப்பிரிக்கா

B. ஹர் மட்டான் 2. ராக்கி மலை

C. லு  3. இந்தியா

D. குறைந்த அளவில் மழை பொழியும் இந்திய மாநிலம்  4. ராஜஸ்தான்

A. 4 3 2 1

*B. 2 1 3 4

C. 2 4 3 1

D. 1 2 3 4

 

 

 

 

105)  பொருத்துக .

A. விரும்பும் மதத்தைப் பின்பற்றவும் பரப்பவும் உரிமை உண்டு   1. பிரிவு 26 .

 B. சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை 2. பிரிவு 25.

C. சமயவரி செலுத்த தடை      3. இந்திய அரசியலமைப்பு பிரிவு 28.

D. சமயக் கல்வி நிறுவனங்கள் வழிபாட்டுத்தலங்களில் கலந்து கொள்ளாமல் இருக்க உரிமை உண்டு.    4. பிரிவு 27.

A. 4 2 3 1

B. 2 1 3 4

*C. 2 1 4 3

D. 4 3 2 1

 

106)  குளாம்கிரி என்னும் நூலினை எழுதியவர் யார்?

A] நாராயண குரு

B] ஐயங்காளி

*C] ஜோதி பாபுலே

D] வைகுண்ட சுவாமிகள்

107)  கடைசி ஐந்தாண்டுத் திட்டம் எது ?

A. 10வது ஐந்தாண்டுத் திட்டம்

B. 11வது ஐந்தாண்டுத் திட்டம்

*C.12வது ஐந்தாண்டுத் திட்டம்

D. 13வது ஐந்தாண்டுத் திட்டம்

 

108)  சீக்கிய மதத்தின் புனிதத் தன்மையை மீட்டெடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட அமைப்பு எது?

A] நிரங்கரி இயக்கம்

B] நாம்தாரிஇயக்கம்

*C] சிங் சபா

D] இவை மூன்றும்

 

109)  சுழல் திட்ட காலம்

A. 1976-1977

B. 1977-1978

*C. 1978-1979

D. 1981-1982

 

110)  கலெக்டர் ஜாக்சனை பணியிடை நீக்கம் செய்த ஆளுநர் யார்?

A] தாமஸ் மன்றோ

*B] எட்வர்ட் கிளைவ்

C] வில்லியம் பெண்டிங்

D] வெல்லஸ்லி

111)  பொருத்துக.

i) ஹார்டோ டோமர்        1.1966-1969

ii) டி.பி.தார்                        2.1951-1956

iii) பி.சி.மகலாநோபிஸ்   3. 1974-1979

iv) திட்ட விடுமுறைக் காலம்-4. 1956-1961

A.3 2 1 4

*B.2 3 4 1

C.2 3 1 4

D.2 1 4 3

 

112)  அடிப்படை உரிமைகளும் வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளும் அரசியல் அமைப்பின் மனசாட்சியாக இருக்கிறது என்று கூறியவர் யார்?

A. அம்பேத்கர்

*B. கிரான் வெல் ஆஸ்டின்

C. பதஞ்சலி

D. ஸ்வரன் சிங்

 

113)  பின் வருவனவற்றுள் பொருந்தாத கூற்றைக் காண்க.

A. இந்தியாவில் நீண்ட மழைக்காலப் பருவம் உடைய மாநிலம் கேரளா

B. 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக அளவு வெப்பம் காணப்பட்ட பகுதி ராஜஸ்தான்

C. இந்தியாவில் குளிர்காலத்தில் அதிக வெப்பம் காணப்படும் இடம் திருவனந்தபுரம்

*D. 2024 ஆம் ஆண்டு அதிக வெப்பம் காணப்பட்ட இந்திய மாநிலம் கர்நாடகா

114)  அடிப்படை உரிமை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை அல்ல?

i)அடிப்படை உரிமை நீதிமன்றம் மூலம் நடைமுறைப்படுத்தக் கூடியது.

ii)இந்திய அரசியலமைப்பு பிரிவு 21 ஐ நிறுத்தி வைக்க முடியும்.

iii)ஏழு முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என அடிப்படை உரிமை குறிப்பிடுகிறது.

iv) 1978 ஆம் ஆண்டு 44 வது சட்டத் திருத்தத்தின் மூலம் சொத்துரிமை நீக்கப்பட்டது.

A. ஒன்று மற்றும் நான்கு சரி.

B. இரண்டு மற்றும் மூன்று சரி.

C. மூன்று மற்றும் நான்கு தவறு.

 *D. இரண்டு மற்றும் மூன்று தவறு.

115)  முதலீட்டுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஐந்தாண்டுத் திட்டம் எது?

A.5வது திட்டம்

*B.6வது திட்டம்

C.7வது திட்டம்

D.9வது திட்டம்

 

116)  பின்வருவனவற்றுள் பிந்த்ராய் மற்றும் சிங்றாய் ஆகியவர்களுடன் தொடர்புடைய கிளர்ச்சி எது?

A] வாகாபி கிளர்ச்சி

*B] கோல் கிளர்ச்சி

C] சந்தால் கிளர்ச்சி

D] முண்டா கிளர்ச்சி

 

117)  அதிகாரப்பூர்வமாக வங்கம் எப்போது பிரிக்கப்பட்டது?

A] 1905 ஆகஸ்ட் 7

B] 1905 அக்டோபர் 7

C] 1905 ஆகஸ்ட் 16

*D] 1905 அக்டோபர் 16

118)  அடிப்படை உரிமை பற்றிய சரியான கூற்றைக் காண்க.

i) அடிப்படை உரிமை இந்திய அரசியலமைப்புப் பகுதி 3 ல் குறிப்பிடப்படுகிறது.

 ii) அமெரிக்க அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டது.

iii) அடிப்படை உரிமைகள் என்பது மக்களாட்சியின் கவசம் என்று கூறியவர் பதஞ்சலி சாஸ்திரி.

iv) வாழ்வதற்கான உரிமையைப் பற்றி பிரிவு 21 குறிப்பிடுகிறது.

A. ஒன்று மூன்று மற்றும் நான்கு சரி.

B. இரண்டு மூன்று மற்றும் நான்கு சதி.

C. இரண்டு மூன்று மற்றும் நான்கு தவறு.

*D. அனைத்தும் சரி.

 

119)  கூற்று மற்றும் காரணத்தை விளக்குக.

கூற்று: தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளையினால் இந்தியாவில் மேற்கு கடலோரப் பகுதிகள் அதிக மழையை பெறுகின்றன

காரணம்: இப்பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் காற்று வீசும் திசையில் அமைந்துள்ளன.

A. கூற்று சரி காரணம் தவறு

B. கூற்று தவறு காரணம் சரி

C.கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

*D. கூற்று மற்றும்  காரணம் இரண்டும் சரி

 

120)  அரசு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள் அடிப்படை உரிமைகளை மீறி செயல்படக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கு எது?

A. கேசவானந்த பாரதி வழக்கு.

*B. செண்பகம் துரைராஜ் வழக்கு.

C. எல். ஐ .சி வழக்கு

 D. எஸ். ஆர். பொம்மை வழக்கு.

 

121)  மனித வள மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கிய ஐந்தாண்டுத் திட்டம் எது?.

*A. 8வது திட்டம்

B. 9வது திட்டம்

C. 11வது திட்டம்

D. 12வது திட்டம்

 

122)  காலநிலை சராசரியாக எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கிடப்படுகிறது?

A. 24 மணி நேரம்

B. ஆண்டுக்கு ஆறு முறை கணக்கிடப்படுகிறது

C. 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது

 *D. 35 ஆண்டுகளுக்கு ஒரு முறை கணக்கிடப்படுகிறது

 

123)  குப்த மன்னர்களின் விருதுப் பெயர்களை அவர்கள் ஆட்சி புரிந்த கால முறைப்படி வரிசைப்படுத்துக.

A] சக்கராதித்யா, கவிராஜா, மகாராஜாதி ராஜா, சாகாரி

B] சாகாரி, சக்ராதித்யா, மகாராஜாதி ராஜா, கவிராஜா

*C] மகாராஜாதி ராஜா, கவிராஜா, சாகாரி, சக்ராதித்யா

D] கவிராஜா, சாகாரி, சக்ராதித்யா, மகாராஜாதி ராஜா

 

124)  கீழ்கண்ட கூற்றுகளோடு தொடர்புடைய ஐந்தாண்டுத் திட்டம் எது?.

i) தன்னிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்குதல் ,மற்றும் ஆக்கபூர்வமான வேலைவாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது.

ii) முதல்முறையாக பொதுத்துறைக்கு மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது, இது தனியார் துறையின் வெற்றியாக அமைந்தது .

iii) இத்திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5 சதவிகிதம் ஆனால் 6 சதவிகிதம் வளர்ச்சி காணப்பட்டது.

 

A.6வது திட்டம்.

*B.7வது திட்டம்.

C.8வது திட்டம்.

D.10வது திட்டம்.

 

125)  பின்வரும் கூற்றுகளில் பொருந்தாத கூற்றைக்  காண்க.

A. அரசு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகள் அயர்லாந்து நாட்டு அரசியல் அமைப்பில் இருந்து பெறப்பட்டது.

B. அரசு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகளை இந்திய அரசியலமைப்பின் புதுமையான சிறப்பு அம்சம் என்று அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

C. இந்திய அரசியலமைப்பு பகுதி நான்கு பிரிவு 36 முதல் பிரிவு 51 வரை குறிப்பிடுகிறது.

*D.அரசு வழிகாட்டும் நெறிமுறைக் கோட்பாடுகளை நீதிமன்றம் கட்டாயமாக செயல்படுத்த முடியும்.

 

126)  குப்தர்கள் காலத்தில் அக்கினிகுப்தர் குப்த நிர்வாகத்தில் பின்வரும் எந்தப பொறுப்பினை வகித்தார்?

A] மகா சந்திவிக்ரகிகா 

*B] மகா தண்ட நாயகா

C] உபாரிக்கா

D] இவை மூன்றும்

 

127)  இந்தியா- சீனா போரினால் தோல்வியுற்ற ஐந்தாண்டுத் திட்டம் எது?.

*A 3வது திட்டம்

B 4வது திட்டம்

C 6வது திட்டம்

D 9வது திட்டம்

 

128)  மக்கள் நலனை மேம்படுத்த அரசு சமூக ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிடும் இந்திய அரசியலமைப்பு பிரிவு எது?

*A. பிரிவு 38

B. பிரிவு 36

C. பிரிவு 43

D. பிரிவு 37

 

129)  பின்வருவனவற்றுள் மூன்று உபாரிக்காக்களை பற்றிக் குறிப்பிடும் ஆவணம் எது?

*A] தாமோதர்பூர் செப்பேடு

B] ஈரன் தூண் கல்வெட்டு

C] நாளந்தா முத்திரைகள்

D] அலகாபாத் கல்வெட்டு

 

130)  சமுகநீதியுடன் சமமான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கிய ஐந்தாண்டுத் திட்டம் எது?.

A. 8வது திட்டம்

*B. 9வது திட்டம்

C. 7வது திட்டம்

D. 4வது திட்டம்

 

131)  பின்வருவனவற்றைப் பொருத்துக.

A. 86 ஆவது சட்ட திருத்தம் 1. 1976.

B. 42வது சட்ட திருத்தம் 2. 2002.

 C. முதல் சட்ட திருத்தம் 3. 1951 .

D. 44வது சட்டத் திருத்தம் 4. 1978.

*A. 2 1 3 4

B. 3 2 1 4

C. 4 2 3 1

D. 4 3 2 1

 

132)  தாமோதர் பூர் செப்பேடு எந்த குப்த மன்னர் காலகட்டத்தைச் சேர்ந்தது?

A] ஸ்கந்தகுப்தர்

B] குமாரகுப்தர்

C] விஷ்ணு குப்தர்

*D] புத்த குப்தர்

 

133)  விரைவான மற்றும் அதிகமான உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வித்திட்ட ஐந்தாண்டுத் திட்டம் எது?.

A. 7வது திட்டம்

B. 10வது திட்டம்

*C. 11வது திட்டம்

D. 12வது திட்டம்

 

134)  இந்திய அரசியலமைப்பின் பிரிவு 40 எதைப் பற்றிக் கூறுகிறது?

A. பொது சிவில் சட்டம்.

*B. பஞ்சாயத்து ராஜ்.

C. சமவேலை வாய்ப்பிற்குச் சம ஊதியம்.

D. இலவச சட்ட உதவி.

135)  குப்தர் கால கட்டுமானக் கோவில்களில் எத்தனை வகைகள் காணப்படுகின்றன?

A] மூன்று

B] நான்கு

*C] ஐந்து

D] ஒன்பது

 

136)  தம்பிரான் தோழர் என்று போற்றப்படுபவர் யார்?

A) திருஞானசம்பந்தர்

B) அப்பர்

C) மாணிக்கவாசகர்

*D) சுந்தரர்

 

 

 

137)  இரு முழு எண்களின் வித்தியாசம் 72. அந்த இரு எண்களின் விகிதம் 3:5 எனில் அந்த இரு எண்களை காண்க.
*(A) 108, 180

(B) 110, 182

(C) 114, 186

(D) 106, 178

 

 

 

138)  மைய விளக்கு விசை என்பது---- ?

A) உண்மையான விசை

*B) மைய நோக்கு விசைக்கு எதிரான விசை

C) மெய் நிகர் விசை

D) வட்டப்பாதையின் மையத்தை நோக்கி இயங்கும் விசை

 

 

 

139)  M:n = 3:2 எனில் (4m+5n) / (4m-5n) –ன் விகித மதிப்புக் காண்க.
(A) 10:11

(B) 22:3

(C) 13:5

*(D) 11:1

 

 

 

140)பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையைக் காண்க.

A. மக்கள் பிரதிநிதி சட்டம் 1951

B. சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் பாதுகாப்பு சட்டம் 1967

*C. சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம் 1956

D. வன பாதுகாப்பு சட்டம் 1980

 

141)  சங்ககால மன்னனான பசும்பொன் பாண்டியனின் யானைகளின் மேல் வெள்ளை கொடி பறந்தது என்ற செய்தியை கூறும் நூல் எது?

*A) அகநானூறு

B) கலித்தொகை

C) குறுந்தொகை

D) நற்றிணை

 

 

 

142)  A:b = c:d எனில் (ma+nc) / (mb+nd) க்கு சமமான விகிதம் எது?
(A) m:n

(B) dm:cn

(C) an:mb

*(D) a:b

 

 

143)  தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரியம் துவங்கப்பட்ட ஆண்டு எது?

A)1909

*B) 1910

C) 1911

D) 1912

 

 

 

144)  ரமேஷும் மீனா-வும் ரூ.25,000/-ஐ 3:2 என்ற விகிதத்தில் பிரித்துக் கொண்டனர். அதன்பிறகு ஒவ்வொருவரும் தன் பங்கில் ரூ.5,000/- முதலீடு செய்கின்றனர். தற்போது மீனா-வுக்கும் ரமேஷ்-க்கும் உள்ள பங்கின் புதிய விகிதம்
(A) 4:3

*(B) 3:4

(C) 3:2

(D) 2:3

 

 

145)  இந்திய திட்டமிடலின் சிற்பி என்று அழைக்கப்படுபவர் யார்?.

A. அம்பேத்கார்

B. பி.சி.மகலாநோபிஷ்

 

*C. ஜவகர்லால் நேரு

D. காந்தி

 

146)  "இன் உயிர் தருதலும் ஆற்றுமோ -

முன்னிய தேஎத்து முயன்று செய்பொருளே?

   என வரும் கலித்தொகையின் பாடல்கள் இடம் பெற்றுள்ள திணை எது?

A) குறிஞ்சித் திணை

B) முல்லைத்திணை

*C) பாலைத்திணை

D) நெய்தல் திணை

    

 

147)  ஒரு குடும்பத்தின் வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள விகிதம் 7:6 மற்றும் வரவு ரூ.21,000/- எனில் சேமிப்பு
      (A) ரூ.6,000

(B) ரூ.5,000/-

*(C) ரூ.3,000/-

(D) ரூ.4,000/-

 

 

 

148)  நீரில் மூழ்கி இருக்கும் காற்று குமிழி மேலே எழும்பும்போது அதன் அளவு

*A) அதிகரிக்கும்

B) குறையும்

C) அதே அளவில் இருக்கும்

D) குறையும் அல்லது அதிகரிக்கும்

 

 

149)  A:B = 4:6, B:C = 18:5 எனில் A:B:C-ன் விகிதம்
(A) 16:22:30

(B) 12:20:5

(C) 14:20:15

*(D) 12:18:5

 

 

150)  சுயசார்பு என்ற கருத்து எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் அறிமுகப்படுத்தபட்டது?

A. முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்

B. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம்

*C. மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்

D. நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்

 

151)  பின்வரும் நூல்களையும் அவற்றின் சிறப்புப் பெயர்களையும் குறியீடுகளைக் கொண்டு பொருத்துக.

   a) முல்லைப்பாட்டு - 1) நெஞ்சாற்றுப்படை

   b) திருமுருகாற்றுப்படை - 2) கூத்தராற்றுப்படை

   c) மலைப்படுகடாம் - 3) புலவராற்றுப்படை

   d) அகநானூறு - 4) நெடுந்தொகை

A) 1, 2, 3, 4

*B) 1, 3, 2, 4

C) 4, 2, 3, 1

D) 4, 3, 2, 1

 

152)  A:B = 1/3 : 4/9 , B:C = 5/6 : 7/12 C:D = 2/7 : 5/14 எனில் A:B:C:D ஆனதி
(A) 40:28:35:30

*(B) 30:40:28:35

(C) 28:30:40:35

(D) 35:30:28:40

 

153)  சாலைப்போகம் என்பது யாருக்கு வழங்கப்பட்ட நிலம் ஆகும்?

A) பிராமினர்களுக்கு

*B) ஆசிரியர்களுக்கு

C) ஜமீன்தார்களுக்கு

D) மன்னர்களுக்கு

 

154)  1 / 2.5  : 1:z :: 1/z : ½.5 எனில் x-ன் ்மதிப்புக் காண்க.
      (A) 2/5

*(B) 5/2

(C) 1/5

(D) 3/5

 

 

155)  அடிப்படைக் கடமையை இந்திய அரசியலமைப்பில் சேர்க்க எந்த குழு பரிந்துரை செய்தது?

*A. ஸ்வரன் சிங் குழு

B. ராஜமன்னார் குழு

C. மண்டல் குழு

D. மேற்கூறிய எதுவும் இல்லை

 

156)  பின்வருவனவற்றுள் வீரமாமுனிவரோடு தொடர்பில்லாத நூல் எது?

*A) சத்திய வேத கீர்த்தனை

B) அன்னை அழுங்கள் அந்தாதி

C) அடைக்கல மாலை

D) திருக்காவலூர் கலம்பகம்

 

157)  வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு அதன் குறைந்த ----- காரணமாகும்

*A) அடர்த்தி

B) அழுத்தம்

C) திசைவேகம்

D) நிறை

 

 

158)  2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் x = ?
(A) 50

(B) 4

(C) 10

*(D) 8

 

 

159)  நாட்டுப்புறப் பாடல் பானியில் பக்தி பாடல்களைப் பாடிய ஆழ்வார் யார்?

A) ஆண்டாள்

B) பெரியாழ்வார்

*C) திருமங்கை ஆழ்வார்

D) திருமழிசை ஆழ்வார்

 

 

160)  இந்தியாவில் 14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம் எது?.

A. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்

*B. நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்

C. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்

D. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம்

 

161)  12:x = y:4 = 8:16 x, y ன் மதிப்பு = --------- , ---------
(A) 6, 8

(B) 2, 24

*(C) 24, 2

 (D) 8, 6

 

 

162)  காவிரிப்பூம்பட்டினம் கிபி 2 ஆம் நூற்றாண்டில் கடலால் மூழ்கடிக்கப்பட்டது என்று எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

A) பட்டினப்பாலை

B) அகநானூறு

C) சீவக சிந்தாமணி

*D) மணிமேகலை

 

 

163)  4, 16 மற்றும் 7 –க்கு 4-ஆவது விகித சமம் காண்க.
(A) 22

(B) 25

*(C) 28

(D) 29

 

 

164)  "பொருட்கலவை" என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நூல் எது?

A) பதிற்றுப்பத்து

*B) பரிபாடல்

C) அகநானூறு

D) குறுந்தொகை

 

 

165)  பின்வரும் கூற்றுகளில் பொருந்தாத இணையைக் காண்க.

A. அடிப்படைக் கடமை பகுதி போர் ஏ வில் இணைக்கப்பட்டுள்ளது

B. அடிப்படைக் கடமை ரஷ்ய அரசியல் அமைப்பில் இருந்து பெறப்பட்டது

*C. அடிப்படைக் கடமை பிரிவு 51 இல் இணைக்கப்பட்டுள்ளது

D. அறிவியல் மனப்பான்மையைப் பற்றி இந்திய அரசியலமைப்பு அடிப்படை கடமையில் இணைக்கப்பட்டுள்ளது

 

166)  60 லிட்டர் கலவையில் அமிலத்திற்கும் நீருக்கும் இடையே உள்ள விகிதம் 2:1 ஆகும். அமிலத்திற்கும் நீருக்கும் இடையே உள்ள விகிதத்தை 1:2 ஆக்க வேண்டுமானால் கலவையில் சேர்க்க வேண்டிய தண்ணீரின் அளவு (லிட்டரில்)
(A) 55

*(B) 60

(C) 50

(D) 45

 

 

167)  இராமாயணத்தில் "சுந்தரன்" என்ற பெயரால் அழைக்கப்படுபவர் யார்?

A) இராமன்

B) இலக்குவன்

C) குகன்

*D) அனுமன்

 

 

168)  யாருடைய காலத்தில் திண்ணை பள்ளிக்கூடம் நிறுவப்பட்டது?

A) சேரர் காலத்தில்

B) சோழர் காலத்தில்

C) பாண்டியர் காலத்தில்

*D) நாயக்கர் காலத்தில்

    

 

169)  சிலப்பதிகாரம் என்பதை விட சிறப்பதிகாரம் என்பதே சிறந்தது என்று கூறியவர் யார்?

A) மு வரதராசனார்

B) அறிஞர் அண்ணா

C) தெ பொ மீனாட்சி சுந்தரனார்

*D) வே சா

 

 

170)  சர்வ சிக்ஸ அபியான் எந்த ஐந்தாண்டுத் திட்டத்தின்போது தொடங்கப்பட்டது?

A. ஏழாவது ஐந்டாண்டுத் திட்டம்

B. ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்

*C. பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம்

D. பதினோறாவது ஐந்தாண்டுத் திட்டம்

 

171)  நாலடியாரில் உள்ள முப்பாலை அவற்றின் அதிகாரங்களோடு பின்வரும் குறியீடுகளைக் கொண்டு பொருத்துக.

   a) அறத்துப்பால் - 1) 3

   b) பொருட்பால் - 2) 24

   c) இன்பத்துப்பால் - 3) 13

A) 1, 2, 3

*B) 3, 2, 1

C) 2, 1, 3

D) 1, 3, 2

 

 

172)  ரீனா மற்றும் உஷா-வின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீனா-வின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
*(A) 7:4

(B) 6:5

(C) 2:3

(D) 4:7

 

 

173)  தமிழின் முதல் "கள ஆய்வு நூல்" எது?

A) சிலப்பதிகாரம்

B) கம்பராமாயணம்

C) சீவக சிந்தாமணி

*D) பெரியபுராணம்

 

 

174)  இரு நபர்களின் வயதுகளின் விகிதம் 1:3 மற்றும் வயதுகளின் பெருக்கற்பலன் 48 எனில் அவர்களின் வயதுகளின் வித்தியாசம் என்ன?
(A) 2

(B) 12

*(C) 8

(D) 4

 

 

175)  அடிப்படைக் கடமை சட்டத் திருத்தம் தொடர்பான அறிக்கை  வர்மா கமிட்டியால் எந்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது?

*A. 1999

B. 1976

C. 2002

D. 1978

 

176)  சேர நாட்டை அச்சமில்லாத நாடாக குறிப்பிட்டிருக்கும் நூல் எது?

A) சிலப்பதிகாரம்

*B) முத்தொள்ளாயிரம்

C) மணிமேகலை

D) கம்பராமாயணம்

 

 

177)  (a+b) : (b+c) : (c+a) = 6:7:8 மற்றும் a+b+c = 14 எனில் c-ன் மதிப்பு
*(A) 6

(B) 8

(C) 14

(D) 7

 

 

178)  "வருந்தி வந்தவருக்கு ஈதழும் வைகலும் விருந்தும் அன்றி விலைவன யாவையே" என்ற பாடல் அடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) மணிமேகலை

*C) கம்பராமாயணம்

D) சீவக சிந்தாமணி

 

 

179)  மூன்று எண்கள் 3:5:7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் சராசரி 60 எனில் அவ்வெண்களில் மிகச் சிறிய எண் யாது?
*(A) 36

(B) 12

(C) 15

(D) 48

 

 

180)  வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்த ஐந்தாண்டுத் திட்டம் ?.

*A. முதலாவது ஐந்தாண்டுத் திட்டம்

B. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்

C. நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்

D. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம்

 

 

181)  "உலக வசனம்" என்று அழைக்கப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல் எது?

A) திருக்குறள்

B) நாலடியார்

*C) பழமொழி நானூறு

D) நான்மணிக் கடிகை

 

 

182)  15 அட்டைகளின் மொத்த எடை 50 கிராம் எனில் அதே அளவுடைய 2.5 கி.கிராம் எடையில் உள்ள அட்டைகளின் எண்ணிக்கை
*(A) 750

(B) 700

(C) 680

(D) 720

 

 

183)  கம்பராமாயணம் பற்றிய பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது அல்ல?

(i) கம்பராமாயணம் ஒரு வழிநூல் ஆகும்

(ii) கம்பராமாயணம் "கம்பச்சத்தரம்" என்றும் அழைக்கப்படுகிறது

(Iii) கம்பராமாயணம் நிலைமண்டல  ஆசிரியப்பாவால் ஆனது

(iv) கம்பராமாயணம் 6 காண்டங்களையும் 116 படலங்களையும் உள்ளடக்கியது.

A) (i) மற்றும் (ii)

*B) (iii) மற்றும் (iv)

C) (ii) மற்றும் (iii)

D) (ii) மற்றும் (iv)

 

 

184)  7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
(A) 25 நாட்கள்

*(B) 28 நாட்கள்

(C) 20 நாட்கள்

(D) 45 நாட்கள்

 

 

185)  ஒடிசா நாட்டோடு தொடர்புடைய புலவர் யார்?

A) உமறுப் புலவர்

B) கம்பர்

*C) ஒட்டக்கூத்தர்

D) எச் கிரிட்டினனார்

 

 

186)  இரு எண்களின் கூடுதலானது இரண்டாம் எண்ணின் 116 2/3 % எனில் முதல் மற்றும் இரண்டாம் எண்களுக்கு இடையே உள்ள விகிதம்
*(A) 1:6

(B) 3:7

(C) 7:3

(D) 7:4

 

 

187)  பின்வருவனவற்றுள் பொருந்தாததை தேர்வு செய்க?

A) சூழ்ச்சி சருக்கம்

B) சூதாட்டச் சருக்கம்

*C) சபதச் சருக்கம்

D) அடிமைச் சருக்கம்

 

 

188)  ஒரு குதிரை மற்றும் இரண்டு மாடுகளின் மொத்த விலை ரூ.680/-. ஒரு குதிரையின் விலையானது ஒரு மாட்டின் விலையை விட ரூ.80/- அதிகம். எனில் குதிரை மற்றும் மாட்டின் விலையின் விகிதமானது
*(A) 7:5

(B) 5:7

(C) 8:9

(D) 9:8

 

189)  நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் சிறப்பு பெயர்களில் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?

A) தீந்தமிழ் பனுவல்

B) திராவிட வேதம்

*C) உத்திர வேதம்

D) ஆண்ட தமிழ்மறை

 

 

190)  ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்நாட்டில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் எது?

A) அண்ணாமலை பல்கலைக்கழகம்

B) அண்ணா பல்கலைக்கழகம்

*C) சென்னை பல்கலைக்கழகம்

D) காமராஜர் பல்கலைக்கழகம்

    

 

191)  பின்வரும் பாடல் வரிகளையும் அவை இடம்பெற்றுள்ள நூல்களையும் குறியீடுகளைக் கொண்டு பொருத்துக.

   a) செல்வம் சகடகால் போல வரும் - 1) பழமொழி நானூறு

   b) அணுவைத் துளைத்து ஏழ்கடல் புகட்டி குறுகத் தரித்த குரள் - 2) கொன்றை வேந்தன்

   c) குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை - 3) ஔவையார் பாடல்கள்

   d) புலம்பிக்கவரை புலமை தெரிதல் - 4) நாலடியார்

A) 1, 3, 2, 4

B) 1, 2, 3, 4

*C) 4, 3, 2, 1

D) 4, 2, 3, 1

 

192)  9 மாதங்களுக்கும் ஒரு வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க.
*(A) 3:4

(B) 4:3

(C) 9:1

(D) 1:9

 

 

193)  அழுத்த சமையல் கலனில் உணவு விரைவாக சமைக்கப்படுவதற்கு காரணம் என்ன?

A) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதிநிலையை குறைக்கிறது

*B) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதிநிலையை உயர்த்துகிறது

C) குறைக்கப்பட்ட அழுத்தம் கொதிநிலையை உயர்த்துகிறது

D) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகுநிலையை குறைக்கிறது

    

 

194)  அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது் மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்
(A) 10:50

(B) 50:10

*(C) 5:1

(D) 1:5

 

 

195)  தமிழக அரசு எப்பொழுது தொழில் கல்வியை அறிமுகப்படுத்தியது?

*A) 1978

B) 1979

C) 1986

D) 1992

 

 

196)  சுருக்குக. 2 ஹெக்டேர் : 150 m2
*(A) 200:3

(B) 2000:3

(C) 20:3

(D) 2:3

 

197)  வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் கருவி எது?

A) பால்மானி

B) திரவமானி

*C) காற்றழுத்தமானே

D) நீடீயல் அழுத்தி

 

198)  2:7-ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்?
    *(A) 4:49

(B) 49:4

(C) 4:14

(D) 8:343

 

 

199)  அடிப்படைக் கடமைகள் இந்திய அரசியலமைப்பில் இணைக்கப்பட்ட சட்டப்பிரிவுகள் யாவை?

A. 97வது சட்டத் திருத்தம் மற்றும் 69 வது சட்ட திருத்தம்

*B. 42வது சட்ட திருத்தம் மற்றும் 86வது சட்ட திருத்தம்

C. 44வது சட்ட திருத்தம் மற்றும் 42வது சட்ட திருத்தம்

 D. முதல் சட்ட திருத்தம் மற்றும் 97வது சட்ட திருத்தம்

 

200)  கீழ்க்காணும் விகிதங்களில் மிகப் பெரியது எது?
4:5 , 8:15 , 3:10 , 1:2.
     *(A) 4:5

(B) 8:15

(C) 3:10

(D) 1:2