Tuesday, April 8, 2025

ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தின் டிஎன்பிஎஸ்சி தொகுதி IV வாராந்திரத் தேர்வு (8) வினாவிடைகள்

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

1.        மக்கள் குழுவை எவ்வாறு அழைக்கலாம்?

கூட்டம்

தொகுதி

*சமூகம்

பெருக்கம்

2.       அசதி என்பதன் பொருள்?

அயர்ச்சி

*சோர்வு

துக்கம்

மடி

3.        பிழையற்ற தொடரைத் தெரிக.

தமிழ் எங்கள் அறிவுக்குத் <தோல்

*தமிழ் எங்கள் அறிவுக்குத் >தோள்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோழ்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோழன்

4.        கவிதையை நிறைவு செய்க.

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் --.

*வாள்

வாழ்

வால்

வான்

5.        பொருத்தமான சொல்லை இட்டுத் தொடரை நிறைவு செய்க.

அமுதம் மிக இனிமையானது. -- தமிழும் இனிமையானது.

அதனால்

ஆனால்

*அதுபோலவே

ஏனெனில்

6.        பிழையற்ற சொல்லைத் தெரிக.

<<மருமனம்

*>>மறுமணம்

><மறுமனம்

<>மருமணம்

7.        ‘செம்பயிர்’ பிரித்தெழுதுக.

செம் + பயிர்

*செம்மை + பயிர்

செமை + பயிர்

செழுமை + பயிர்

8.        வேறுபட்ட சொல்லைத் தெரிக.

மேதினி

வையம்

பார்

*வெளி

9.        ‘வான்தோன்றி, வளி தோன்றி, நெருப்புத் தோன்றி’

வளி என்பதன் பொருள்?

பாதை

நோவு

*காற்று

வலிமை

10.    துகள், மேன்மை, வயல், வண்டு இவற்றைக் குறிக்கும் ஓரெழுத்து மொழி எது?

கா

பா

மே

*மா

11.    ‘வேனுவனம்’ என்ற ஊர் தற்போது மருவி எவ்வாறு வழங்கப்படுகிறது?

தஞ்சை

திருச்சி

*நெல்லை

பாலை

12.    பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிக.

அண்ணன் தம்பிகள்தான் என்றாலும் அவர்களிடையேயான உறவு – போன்றது.

நகமும் சதையும்

*தாமரை இலைத் தண்ணீர்

காற்றும் மழையும்

பூவும் முள்ளும்

13.    பொருத்துக.

அ. அக்கசாலை  1. சிறை

ஆ. கூழைக்கடைத்தெரு  2. பொன்

இ. காவற்புரைத்தெரு  3. தானியம்

ஈ. பேட்டை  4. வணிகம்

4 2 3 1

2 4 3 1

3 4 1 2

*2 3 1 4

14.    வல்லினத்தை முறையாக இட்டும் நீக்கியும் எழுதப்பட்ட பிழையற்ற தொடரைத் தெரிக.

பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சிப் பெறலாம். செல்வத்தைத் தனியே அனுபவித்தல் இழத்தலுக்கு சமம்.

*பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்ச்சி பெறலாம். செல்வத்தைத் தனியே அனுபவித்தல் இழத்தலுக்குச் சமம்.

பொருளை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சி பெறலாம். செல்வத்தை தனியேயனுபவித்தல் இழத்தலுக்குச் சமம்.

பொருளை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சிப் பெறலாம். செல்வத்தை தனியே அனுபவித்தல் இழத்தலுக்கு சமம்.

15.   மாறுபட்ட சொல்லைத் தெரிக.

அடித்தான்

*தடுத்தான்

மிதித்தான்

உதைத்தான்

16.   உறுபசியும் ஓவாப் பிணியும்செறுபகையும்

சேராது இயல்வது நாடு.

குறளில் பயின்றுள்ள ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எது?

செறுபகை

உறுபசி

சேராது

*ஓவாப் பிணி

17.   தொடரில்இடம்பெற்றுள்ள வழு எது?

நாடு  முழுவதும் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் காலம் அது.

*கால வழு

திணை வழு

இட வழு

மரபு வழு

18.   பத்தியை்ப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சமூகப் பாதுகாப்பு அளித்தல், சிறப்புக்கல்வி, தொழிற்பயிற்சி அளித்தல், சுயவேலைவாய்ப்பு அளித்தல், உதவி உபகரணங்கள் வழங்குதல், தடையற்ற சூழல் அமைத்தல் மற்றும் சிறப்புப்பள்ளிகள், இல்லங்கள் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசுப் பணியாளர்களுக்கான தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 4 சதவீத இடஒதுக்கீடு மூலம், கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை 1,493 மாற்றுத்திறனாளிகள் அரசுப்பணியைப் பெற்றுள்ளனர். அதேபோன்று மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்துவதைத் தனியார்த்துறைகளிலும் ஊக்குவிக்கும் பொருட்டு தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 10 மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தி இருந்தால், அத்தகைய நிறுவனங்களுக்கு மாதந்தோறும் ஒரு நபருக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் ஊதிய மானியத்தினை ஒரு ஆண்டிற்கு அரசு வழங்கும்.

உலக வங்கியின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் உரிமைத் திட்டத்தின் (RIGHTS) மூலம், 2024-25 ஆம் நிதியாண்டில் 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக 10 வருவாய்க் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும், 38 வட்டார அளவிலான சேவை மையங்களும் தொடங்கப்பெற்று,  மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், ஆறு வகையான மறுவாழ்வு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில், 2025-26 ஆம் ஆண்டில், 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அனைத்து மாவட்டங்களிலும் 82 வருவாய்க் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும் 400 வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும் ஏற்படுத்தப்படும்.

மாற்றுத்திறனாளிகள் தற்சார்புடன் இயல்புநிலைக்கு நிகரான செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் வகையில், தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட திறன்மிகு கண்ணாடிகள் (Smart Vision Glasses), அறிவுசார் மாற்றுத்திறன் உயர் குழந்தைகளுக்கான கற்பிக்கும் உபகரணப் பெட்டகம் (TLM Kit), நிற்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் நவீன உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீனக் கருவிகள் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளின் தேவைக்கு ஏற்ப வழங்கும் திட்டம் 125 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேலும் செம்மைப்படுத்தும்.

மாநிலத்திலுள்ள அனைத்துவகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில், நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தக்க சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமன்றி, அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாகத் திகழ்வார்கள்.

இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1,433 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்புப்பள்ளிகள் மற்றும் இல்லங்களில் எவை மேம்படுத்தப்படும் என அரசு கூறுகிறது?

பாதுகாப்பு

தரமான சூழல்

*உட்கட்டமைப்பு வசதி

அடிப்படை வசதிகள்

19.   பத்தியை்ப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

மாற்றுத்திறனாளிகளுக்கான சூழல் எத்தகையதாக அமைய வேண்டும்?

பாதுகாப்பான

உதவிகரமான

சிறப்பான

*தடையற்ற

20.   பத்தியை்ப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தும் தனியார்த்துறைகளுக்கு ஓராண்டுக்கு அரசு மாதந்தோறும் வழங்குவது?

*ஊதிய மானியம்

உதவி மானியம்

நிலுவைத்தொகை

கடன் மானியம்

21.    பத்தியை்ப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

சரியான அடுக்கு எது?

வருவாய்க்கோட்டம், வட்டாரம், மாவட்டம்

மாவட்டம், வட்டாரம், வருவாய்க்கோட்டம்

வருவாய்க்கோட்டம், மாவட்டம், வட்டாரம்

*மாவட்டம், வருவாய்க்கோட்டம், வட்டாரம்

22.    பத்தியை்ப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

கொடுக்கப்பட்டுள்ள பத்திஇடம்பெற்றுள்ள ஆவணம் எது?

தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேடு

*தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025-26

அரசின் பொருளாதார ஆய்வறிக்கை

முதல்வரின் 110 விதியின்கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பு.

23.   கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமற்ற சொல் எது?

அழுவம்

*பகல்

வங்கம்

மீகான்

24.    கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.

குறளில் பயின்றுள்ளஅணி யாது?

வேற்றுமை அணி

இல்பொருள் உவமையணி

*பிறிது மொழிதல் அணி

தற்குறிப்பேற்ற அணி

25.    பொருத்தமான சொல்லை இட்டு நிரப்புக.

ஆழ் -- அடியில் நீர்மூழ்கிக் கப்பலில் எங்களது பயணம் தொடர்ந்தது.

கடலில்

கடலால்

கடலோடு

*கடலுக்கு

26.    பொருத்துக.

அ. இதழ்  1. தற்பவம்

ஆ. கமலம்  2. தற்சமம்

இ. விடம்  3. திசைச்சொல்

ஈ. தகவல்  4. பலபொருள் ஒருமொழி

*4 2 1 3

4 1 2 3

2 3 4 1

3 4 1 2

27.    பிழையான தொடரைத் தெரிக.

மாணவர்களை இப்போது சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லலாம்.

மாணவர்களை இப்போது சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறோம்.

மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றோம்.

*மாணவர்களை இப்போது சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வோம்.

28.   ‘துயின்றிருந்தார்’ பிரித்தெழுதுக.

துயில் + இருந்தார்

*துயின்று + இருந்தார்

துயின்றி + இரு்ந்தார்

துயி்ன் + இருந்தார்

29.    பிழையற்ற தொடரைத் தெரிக.

கல்வி ஓரு ஒளிவிளக்கு.

கல்வி ஓர் <>ஒலிவிளக்கு.

*கல்வி ஓர் >>ஒளிவிளக்கு.

கல்வி ஓர் ><ஒளிவிலக்கு.

30.    வரிசைப்படுத்துக.

கையில் கோவின் பையினால் என்ன பயன்?

அரசன், இளமை, ஒழுக்கம்

*ஒழுக்கம், அரசன், இளமை

இளமை, அரசன், ஒழுக்கம்

அரசன், ஒழுக்கம், இளமை

31.    மிகப் பொருத்தமான தொடரைத் தெரிக.

வள்ளுவர் சிலையைக் காண, உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு நாள்தோறும் வந்து செல்வர்.

*வள்ளுவர் சிலையைக் காண, உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

வள்ளுவர் சிலையைக் காண, உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு நாள்தோறும் வந்து சென்றன.

வள்ளுவர் சிலையைக் காண, உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றன.

32.   பொருத்துக.

அ. போக்கு  1. முதனிலைத் தொழிற்பெயர்

ஆ. உடன்பாடு  2. விகுதி பெற்ற தொழிற்பெயர்

இ. வினா  3. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

ஈ. கோடாமை  4. எதிர்மறைத் தொழிற்பெயர்

2 3 4 1

4 3 1 2

3 4 1 2

*2 3 1 4

33.    கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க  

அதற்குத் தக.

குறளில் பயின்றுள்ள தொடைநயங்கள் எவை?

*முற்றுமோனை, மேல்க்கதுவாய் எதுகை

அடி மோனை, அடி இயைபு

கீழ்க்கதுவாய் எதுகை, மேல்க்கதுவாய் மோனை

கூழை மோனை, பொழிப்பு எதுகை

34.    எதிர்ச்சொல் தெரிக. ‘இசை’

நடனம்

மேலே

*இகழ்

துன்பம்

35.    நிலம் தீ நீர் -- விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

விடுபட்ட ஒன்றைத் தெரிக.

வானம்

*காற்று

புவி

புனல்

36. அகரவரிசைப்படுத்துக.

எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஔகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம்.

அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஔகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம், எழுத்து, ஒலிவடிவம்.

ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம், எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஔகாரம்.

அழகுணர்ச்சி, ஆரம்நீ, இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஔகாரம்.

37.  பொருத்துக.

அ. வந்தான்  1. தெரிநிலை வினைமுற்று

ஆ. நல்லவன்  2. குறிப்பு வினைமுற்று

இ. பாடியவள்  3. வினையாலணையும் பெயர்

ஈ. மறந்து  4. வினையெச்சம்

4 3 2 1

2 4 3 1

3 4 1 2

*1 2 3 4

38.  சேர்த்தெழுதுக. ‘வன்மை + உஉருவம்

வன்மையுருவம்

*வல்லுருவம்

வன்னுருவம்

வலுவுருவம்

39.  ‘இடமும் பொருளும்’ இலக்கணக் குறிப்பு தெரிக.

சிறப்பும்மை

எச்ச உம்மை

*எண்ணும்மை

உம்மைத்தொகை

40.  ‘கேட்ட பாடல், நல்ல பாடல்’ தொடரில் இடம்பெற்றுள்ள சொற்களின் இலக்கணக் குறிப்புகள் எவை?

தெரிநிலைப் பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம்

குறிப்புப் பெயரெச்சம், தெரிநிலைப் பெயரெச்சம்

*தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம்

பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம்

41.  நடைபெற்ற குழப்பங்களுக்குக் காவலர்களே காரணம் என்கிறார்கள்.” பொருத்தமான பழமொழியைத் தெரிக.

உள்ளங்கை நெல்லிக்கனி போல

*வேலியே பயிரை மேய்ந்தது போல

தாமரை இலைத் தண்ணீர்போல

மடை திறந்த வெள்ளம்போல

42.  ‘யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.

குறளுக்குப் பொருத்தமான பழமொழி எது?

கற்றது கையளவ்உ, கல்லாதது உலகளவு.

பிச்சையெடுத்தாலும் கற்க மறக்காதே

*கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

அல்ல அல்லக் குறையாதது கல்விச் செல்வமே.

43.  ;நான் நேற்று இரவு மதுரை சென்றடைந்தேன்.

தொடரில் மறைந்துள்ள வேற்றுமை உறுபைத் தெரிக.

மூன்றாம்

ஐந்தாம்

நான்காம்

*இரண்டாம்

44.  கீழ்க்கண்டவற்றுள் இனவெழுத்துகள் அல்லாத சொல்லைத் தெரிக.

*மாமரம்

மாங்காய்

மாஞ்சோலை

மாந்தோப்பு

45. மிகவும் பழமையான கைவினைக்கலைகளுள் ஒன்று மண்பாண்டக் கலை.

பொருத்தமானவினாச்சொல்லைத்  தெரிந்து தொடரை வினாத்தொடராக மாற்றுக.

*ஏன்

எந்த

எது

எவை

46.  இசையின் இனிமைக்குத் துணை -- இசைக் கருவிகள் ஆகும்.

செய்வது

செய்தன

செய்யும்

*செய்பவை

47.  பொருந்தா இணையைத் தெரிக.

வேட்பு – விருப்பம்

போற்றார் – செற்றார்

ஓர்ந்து – நாடி

*எல் – அல்

48.  ‘திடுதிப்புனு’ எழுத்து மொழியாக்குக.

உடனடியாக

நடுநடுங்க

அதிர்ச்சியாக

*திடீரென்று

49. நண்பர்கள்தான் என்றாலும், அவர்களுக்குள்ளும் பலமுரண்கள் – ஆக இருந்தன.

மலரில் முட்களாக

இலை மறைக் காயாக

*நீறு பூத்த நெரு்ப்பாக

புற்றுக்குள் நாகமாக

50.  பொருத்துக.

அ. அழுக்காறு  1. ஈகை

ஆ. பொச்சாப்பு  2. நட்பு

இ. இகல்  3. ஊக்கம்

ஈ. இரவு  4. பொறை

*4 3 2 1

3 4 1 2

4 1 2 3

2 1 3 4

51. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது. கல்வெட்டுகள் கி.மு. (பொ..மு.) மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. செப்பேடுகள் கி.பி. (பொ..) ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.

வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும். தமிழெழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும். சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே இடம்பெற்றுள்ளன. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன.

கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன. இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி (சிலம்பு 5 : 112) என்னும் தொடரால் அறியலாம்.

பண்டைக்காலத்தில் தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் நாம் இன்று எழுதுவது போன்ற வடிவத்தில் எழுதப்படவில்லை. அவை காலத்திற்கேற்பப் பல உருவ மாற்றங்களைப் பெற்றுத்தான் இக்கால வடிவத்தை அடைந்திருக்கின்றன. இவ்வாறு எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன.

பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன. பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் நேர்க்கோடுகள் பயன்படுத்தப்பட்டன. ஓலைகளில் நேர்க்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர். சில எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக அமைந்துவிட்டன.

தவறான இணை எது?

1.       பாறைகள் – நேர் எழுத்து

2.       அழகுபடுத்தல் – குறுக்குக்கோடு

3.       ஓலைகள் – வளைவெழுத்து.

ஒன்று மற்றும் மூன்று

ஒன்று மட்டும்

இரண்டு மற்றும் மூன்று

*இரண்டு மட்டும்

52. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது. கல்வெட்டுகள் கி.மு. (பொ..மு.) மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. செப்பேடுகள் கி.பி. (பொ..) ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.

வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும். தமிழெழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும். சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே இடம்பெற்றுள்ளன. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன.

கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன. இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி (சிலம்பு 5 : 112) என்னும் தொடரால் அறியலாம்.

பண்டைக்காலத்தில் தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் நாம் இன்று எழுதுவது போன்ற வடிவத்தில் எழுதப்படவில்லை. அவை காலத்திற்கேற்பப் பல உருவ மாற்றங்களைப் பெற்றுத்தான் இக்கால வடிவத்தை அடைந்திருக்கின்றன. இவ்வாறு எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன.

பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன. பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் நேர்க்கோடுகள் பயன்படுத்தப்பட்டன. ஓலைகளில் நேர்க்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர். சில எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக அமைந்துவிட்டன.

தமிழ் எழுத்துகள் நிலைபெறக் காரணம்

ஓவியக்கலை

இசைக்கலை

*அச்சுக்கலை

சிற்பக்கலை

53.  பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள்?

தமிழ் எழுத்து

*கண் எழுத்து

வட்டெழுத்து

வளைவெழுத்து

54.  பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

சரியான வரிசையைத் தெரிக.

தமிழெழுத்து, கண்ணெழுத்து, வட்டெழுத்து

வட்டெழுத்து, கண்ணெழுத்து, தமிழெழுத்து

கண்ணெழுத்து, தமிழெழுத்து, வட்டெழுத்து

*கண்ணெழுத்து, வட்டெழுத்து, தமிழெழுத்து

55.  பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது. கல்வெட்டுகள் கி.மு. (பொ..மு.) மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. செப்பேடுகள் கி.பி. (பொ..) ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.

வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து ஆகும். தமிழெழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும். சேர மண்டலம், பாண்டிய மண்டலம் ஆகிய பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே இடம்பெற்றுள்ளன. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான பதினொன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன.

கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன. இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி (சிலம்பு 5 : 112) என்னும் தொடரால் அறியலாம்.

பண்டைக்காலத்தில் தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் நாம் இன்று எழுதுவது போன்ற வடிவத்தில் எழுதப்படவில்லை. அவை காலத்திற்கேற்பப் பல உருவ மாற்றங்களைப் பெற்றுத்தான் இக்கால வடிவத்தை அடைந்திருக்கின்றன. இவ்வாறு எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன.

பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன. பாறைகளில் செதுக்கும்போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் நேர்க்கோடுகள் பயன்படுத்தப்பட்டன. ஓலைகளில் நேர்க்கோடுகளையும் புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர். சில எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக அமைந்துவிட்டன.

பத்திக்குப் பொருத்தமான தலைப்பைத் தெரிக.

*காலந்தோறும் தமிழ் எழுத்து வரிவடிவ வளர்ச்சி

தமிழ் எழுத்து வரிவடிவ வளர்ச்சி

தமிழ் எழுத்து வரிவடிவ வகைகள்

தமிழ் எழுத்து வரலாறு

56.  சரியான வாக்கிய அமைப்பை காண்க

1 மாறன் தரையில் உருண்டான் தன்வினை

2 ஆசிரியர் மாணவர்களை திருத்தினார் பிறவினை

3 மாணவர்கள் வகுப்பறையை தூய்மை செய்தனர் செய்வினை

4 நாடகம் நம்பியால் நடிக்கப்பட்டது செயற்பாட்டு வினை

A1 4 சரி

B 2 3 சரி

C 1 3 சரி

*D அனைத்தும் சரி

57. ஒருமை பன்மை உள்ள தவறான இணையை காண்க

1 மன்னர் தன் குடிகளிடம் அன்பாய் இருப்பார்

2 மன்னர் தம் குடிகளிடம் அன்பாய் இருப்பார்

A 1 சரி 2 தவறு

*B 1 தவறு 2 சரி

C இரண்டும் சரி

D இரண்டும் தவறு

58. ஒருமை பன்மையில் சரியானவற்றை காண்க

1 திட்டங்கள் சரியாக தீட்டப்பட்டது

2 ஒரு காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது

3 பறவைகள் வானத்தில் பறந்தன

4 இதை செய்தவன் இவன் அல்லன்

A 1 3 சரி

B 2 4 சரி

* C 2 3 4  சரி

D அனைத்தும் சரி

59. சரியான மரபுத் தொடரை பொருத்துக

A அரசி உலாவினால் உயர்திணை

B எறும்புகள் வரிசையாக சென்றன 2 அக்ரினை

C அவள் சென்றாள் பெண்பால்

D அவன் சிரித்தான் ஆண்பால்

அவர்கள் ஓடினர் பலர் பால்

F அது பறந்தது ஒன்றன்பால்

G அவை நின்றன பலவின்பால்

* A 1 2 3 4 5 6 7

B 7 6 5 4 3 2 1

C 1 7 6 2 5 3 4

D 7 5 6 4 1 2 3

60. வினை மரபில் பொருந்தாத இணையை காண்க

1 அம்பை எய்தார்

2 பூ கொொய்தார்

3 ஆடை நெய்தார்

4 இலையை கொய்தார்

A அனைத்தும் சரி

* B நான்கு மட்டும்

C மூன்று மட்டும்

D ஒன்று மட்டும்

61. தொகை மரபுச் சொற்களைப் பொருத்துக

1 சாவி 1 உருண்டை

B நெல் 2 கொத்து

C நூல் 3 வயல்

D வைக்கோல் 4   போர்

* A 2 3 1 4

B 1 2 3 4

C 2 1 4 3

D 4 1 2 3

62. திணை மரபில் தவறானவற்றை காண்க

1 அரசன் போருக்கு சென்றான் உயர்திணை

2 ஆடு கத்தினாள் உயர்திணை

3 மலர் விழி சிரித்தது உயர்திணை

4 யானைகள் பிலிரின அஃறினை

A 1 4 தவறு

B 1 2 4 தவறு

* C 2 3 தவறு

D அனைத்தும் தவறு

63. சரியான நிறுத்தல் குறிகளை காண்க

A நல்லோர் வாழ்வர்; தீயோர் வீழ்வர்;

B நல்லோர் வாழ்வர். தீயோர் வீழ்வர்

* C நல்லோர் வாழ்வர்; தீயோர் வீழ்வர்;

D நல்லோர் வாழ்வர். தீயோர் வீழ்வர்.

64. சரியான நிறுத்தல் குறியீட்டை காண்க

முத்தமிழ். இயல் இசை நாடகம்

B முத்தமிழ், இயல் இசை நாடகம்

* C முத்தமிழ்:இயல், இசை, நாடகம் முதலில் என ஆகும்.

D முத்தமிழ், இயல் இசை நாடகம் முதலியனாகும்.

65. கீழ்க்கண்டவற்றுள் சரியான நிறுத்தல் குறியை காண்க

A மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று பாடியவர் யார்.

B சீவக சிந்தாமணி எவ்வாறு அழைக்கப்படுகிறது,

* C குறிஞ்சிப்பாட்டில் எத்தனை மலர்கள் உள்ளன?

D திணைகள் எத்தனை வகைப்படும்!

66. நம் முன்னோர் எப்பொருளை எச்சொள்ளாள் வழங்கினரோ அப்பொருளை அச்சொல்லால் வழங்குவது

A வழு

B தொகை

* C மரபு

D சொல்

67. நிறுத்தல் குறி பற்றிய தவறான இணையை காண்க

1 தொகைச் சொல்லை அடுத்து கார் புள்ளி வரும்

2 உடன்பாட்டு மற்றும் எதிர்மறை தொடர்களில் அரை புள்ளி வரும்

3 பொருட்களை என்னும் இடங்களில் கார் புள்ளி வரும்

பெயரின் தலைப்பு எழுத்தின் பின் முற்றுப்புள்ளி வரும்

* A மட்டும்

B மட்டும்

C மட்டும்

D அனைத்தும் தவறு

68. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக

A ஊரே யாவரும் யாதும் கேளிர் கணியன் பூங்குன்றனார் என் என்றார்

B என்றார் கணியன் பூங்குன்றனார் யாதும் யாவரும் கேளிர் ஊரே

யாதும் கணியன் பூங்குன்றனார் என்றும் ஊரே கேளிர் என்றார்

* D கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார்

69. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் ஆக்குக

A உயிரே தமிழே வணக்கம் உனக்கும் உறவம்மா தாய் பிள்ளை எனக்கும்

* B தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்

C உனக்கும் எனக்கும் வணக்கம் தமிழே உயரம்மா தாய் பிள்ளை

D தாய் பிள்ளை உறவம்மா வணக்கம் உனக்கும் எனக்கும் உயிரே தமிழே

70. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் அமைக்க

A பணி உடைய  மற்றும் பிற  இன்சொலன் ஆதல்

b பணி உடையன்  அணி அல்ல  இன்சொலன் ஆதல் மற்ற

* C பணி உடையன் இன்சொலன் ஆதல் அணி அல்ல மற்றுபிற

D பிற மற்று அணி அல்ல ஆதல் இன்சொலன் பணி உடையன்

71. சரியான இணையை காண்க

1 transplantation உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

2 art gallery  கலைக்கூடம்

C entrepreneur  தொழில் முனைவோர்

D adulteration  கலப்படம்

A ஒன்று மற்றும் இரண்டு சரி

B மூன்று மற்றும் நான்கு சரி

C ஒன்று மற்றும் நான்கு சரி

*D அனைத்தும் சரி

72. பொருந்தாத இணையை காண்க

1 trust பணிவு

2 volunteer பண்புடையோர்

3 knowledge of reality மெய் உணர்வு

4 weather நிலை

A ஒன்று மட்டும்

மூன்று மற்றும் நான்கு

*C ஒன்று இரண்டு நான்கு மட்டும்

D நான்கு மட்டும்

73. ஆங்கிலச் சொல்லை தமிழ்ச்சொல் உடன் பொருத்துக

A charity 1 உபதேசம்

B dignity 2 வானியல்

C preaching 3 ஈகை

D astronomy 4 கண்ணியம்

A 1 2  3 4

B1 3 2 4

* C 3 4 1 2

D 4 3 2 1

74. பொருத்தமான இணையை தேர்வு செய்க

1  reciprocity ஒப்புரவு நெறி

2 courtesy நற்பண்பு

3 communism பொதுவுடைமை

4 poverty  பொறுமை

* A 1 2 3 சரி

B 2 3 சரி

C 2 4 சரி

D அனைத்தும் சரி

75. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல்லை காண்க (irrigation paddy )

A அறுவடை நெற்கதிர்

*B நீர்ப்பாசனம் நெற்பயிர்

C பாசனம்  நெற்களம்

நெற்பயிர் நீர்ப்பாசனம்

76. தமிழ் சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்லை காண்க

(பயிரிடுதல் ‌ , அறுவடை)

A paddy  cultivation

B harvest  paddy

* C cultivation  harvest

D harvest cultivation

77. தமிழ் சொல்லை ஆங்கிலச் சொல்லுடன் பொருத்துக

சமவெளி 1valley

B மலைமுகடு 2 locust

C வெட்டுக்கிளி 3 ridge

D பள்ளத்தாக்கு 4 plain

A 2 1 4 3

B 3 1 2 4

* C4 3 2 1

D 1 2 3 4

78. தவறான இணையைத் தேர்வு செய்

1 rational பகுத்தறிவு

2 objective குறிக்கோள்

3 integrity ஒருங்கிணைப்பு

4 agreement ஆவணம்

A 1 4 தவறு

B 1 3 தவறு

* C 3 4 தவறு

D அனைத்தும் தவறு

79. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது

A thread

B loon

C stitch

D* d tanning

80. பொருத்துக

A drum 1 கூடை முடைதல்

B basketry 2 முரசு

C knitting  3  கொம்பு

D horn 4 பின்னுதல்

A 1 2 3 4

B 4 1 3 2

C 2 4 1 3

* D 2 1 4 3

81. சரியான இணையை காண்க

1 பண்டிகை திருவிழா

2 வெள்ளம் நீர் பெருக்கு

3 வியாபாரம் வணிகம்

4 அச்சன் தந்தை

A அனைத்தும் சரி

B 1 2 சரி

C 3 4 சரி

D 1 4 சரி

82. தவறான இணையை காண்க

1 அசல் மூலம்

2 ஜமக்காளம் போர்வை

3 வேடிக்கை காட்சி

4   keyboard விசைப்பலகை

A 1 மட்டும் தவறு

* B 2 மட்டும் தவறு

C அனைத்தும் சரி

D அனைத்தும் தவறு

83. தவறான இணையை காண்க

1 யுகம் ஊழி

2 விஞ்ஞானி அறிவியல்

3 கேணி கிணறு

4 shift key மாற்று விசை குமிழி

A 1 மட்டும் தவறு

B 1 4 தவறு

* C 2 மட்டும் தவறு

D அனைத்தும் தவறு

84.  கீழ்க்கண்டவற்றுள் சரியான பிற மொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் சொல்லை காண்க ( ஜன்னல்)

A அலமாரி

B cupboard

C சாளரம்

D காலதர்

A  a மட்டும் சரி

*B c d மட்டும் சரி

C அனைத்தும் சரி

D அனைத்தும் தவறு

85. சரியான இணையை காண்க

1 குசனி சமையலறை

2 ஏராளம் மிகுதி

3 இலாகா துறை

4 பட்டாளம் படைப்பிரிவு

5 ஜாதகம் பிறப்பியம்

A 1 5 சரி

B 1 2 3 சரி

C 1 4 சரி

* D அனைத்தும் சரி

86. உ வே சாவை பாராட்டிய வெளிநாட்டினரை சரியாக தேர்வு செய்க

A] ஜி யு போப் கால்டுவெல்

*B] ஜி யு போப் ஜூலியல் வின்சோன்

C] ஜி யு போப் வீரமாமுனிவர்

d] ஜி யு போப் ஹிராஸ் பாதிரியார்

87. சாதிகள் இரண்டொழிய வேறில்லை என்று கூறிய தமிழ் புலவர் யார்

A] பாரதியார்

*B] அவ்வையார்

C] பெருவாயில் முல்லியார்

D] கபிலர்

88. பின்வருபவர்களில் தமிழ் என்னை ஈர்த்தது குரலோ என்னை இழுத்தது என்று மொழிந்து இன்புற்றவர் யார்

A] ஹிராஸ் பாதிரியார்

B] ஜி யு போப்

*C] டாக்டர் கிரௌல்

D] கான்ஸ்டான்டைன் ஜோசப் வேஸ்கி

89. மீனாட்சி சுந்தரனார் எங்கு வாழ்ந்த பொழுது உ வே சாவிற்கு ஆசிரியராக இருந்தார்

*A] திருவாவடுதுறை

B] திரிசலபுரம்

C] திருவாமூர்

D] மயிலை

90. திரிகடுகத்தில் இடம்பெற்றுள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை எத்தனை

A] 400

B] 268

C] 40

*D] 100

91. அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக அன்னை பாரத நாடு திகழ்கிறது என்று குறிப்பிடும் கவிஞர் யார்

A] திரு வி கா

*B] தாராபாரதி

C] சுரதா

D] வாணிதாசன்

92. மன்னருக்கு தம் தேசமல்லால் சிறப்பில்லை கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது

A] பழமொழி நானூறு

B] நாலடியார்

C] நான்மணிக் கடிகை

*D] மூதுரை

93. மக்கள் கவிஞர் என்னும் சிறப்பிற்குரிய கவிஞர் யார்

A]வே இராமலிங்கனார்

B] உடுமலை நாராயண கவி

*C] கல்யாண சுந்தரனார்

D] பெருஞ்சித்திரனார்

94. நல்லொழுக்கத்தை விதைக்கும் வித்துக்களாக ஆசாரக்கோவை கூறும் கருத்துக்கள் எத்தனை

A] 4

B] 5

C] 6

*D] 8

95. பின்வருவனவற்றுள் நிலையான செல்வமாக திருவள்ளுவர் குறிப்பிடுவது

A] பொருட்செல்வம்

B] நிறைந்த சுற்றம்

*C] ஊக்கம்

D] மக்கட் செல்வம்

96. பின் வருபவர்களில் துரைராசு என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர் யார்

*A] முடியரசன்

B] பெருஞ்சித்திரனார்

C] வாணிதாசன்

D] தமிழொளி

97. மலைக்கள்ளன் எனும் நூலினை எழுதிய கவிஞர் யார்

A] கண்ணதாசன்

*B] நாமக்கல் கவிஞர்

C] பாவேந்தர்

D] இவர்களுள் எவரும் இலர்

98. மணக்கொடை வாங்கும் திருமணத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என வெளிப்படையாக அறிவித்த தலைவர் யார்

A] பெரியார்

B] முத்துராமலிங்கத் தேவர்

*C] காயிதே மில்லத்

D] காமராஜர்

99. இயேசு காவியம் என்னும் படைப்பிற்குரிய கவிஞரை தேர்வு செய்க

A] வீரமாமுனிவர்

*B] முத்தையா

C] வைரமுத்து

D] முகமது ரபி

100. முன்றுரை அரையனாரின் படைப்பினை தேர்வு செய்க

*A] பழமொழி நானூறு

B] நாலடியார்

C] ஆசாரக்கோவை

D] நான்மணிக்கடிகை

101)     தகவல் பெறும் உரிமைச் சட்டம் இயற்றப் பெரிதும் பங்களித்தவர் யார்?

*A) அருணா ராய்

B) சந்திப் கோஷ்

C) அண்ணா ஹசாரே

D) சஞ்சய் சிங் ப்ரித்வா

102)    ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் தமிழகப் பெண் யார்?.

A ராணி மங்கம்மாள்.

B ருத்ரமாதேவி.

*C வேலூநாச்சியார்.

D வடிவுநாச்சியார்.

103)      உலகப் பொதுசுகாதார நாள் எது?

*A) ஏப்ரல் 7

B) ஜூன் 5

C) ஜூன் 9

D) ஜூலை 15

104)      பெண்களைப் பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு. அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைத்த அநீதியாகும் என்று கூறியவர் யார்?

A) பெரியார்

B) அம்பேத்கார்

*C) மகாத்மா காந்தி

D) ஆபிரகாம் லிங்கன்

105)      பேரறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தின் அன்னிபெசண்ட் என்று அழைக்கப்பட்டவர் யார்?.

*A மூவாலூர்  ராமாமிர்தம் அம்மாள்.

B தர்மாம்பாள்.

C அசலாம்பிகை அம்மாள்.

D அஞ்சலை அம்மாள்.

106)      பின்வருவனவற்றுள் பொருந்தாத கூற்றைத் தேர்வு செய்க.

*a. மௌலானா அபுல் கலாம் ஆசாத் 1889 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் கல்கத்தாவில் பிறந்தார்

 B. வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது இந்திய காங்கிரஸின் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்.

C. 1992 ஆம் ஆண்டு மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது

D. 1912 ஆம் ஆண்டு மௌலானா அபுல் கலாம் ஆசாத் அல் ஹிலால் என்னும் இதழைத் தோற்றுவித்தார்

107)  கீழ்க்கண்ட புயல்களை ஆண்டு அடிப்படையில் வரிசைப்படுத்துக?

1. ஓக்கி 2. நிஷா 3. கஜா 4. நிவர் 5. வர்தா

A) 5 2 4 1 3

*B) 2 5 1 3 4

C) 3 4 2 5 1

D) 3 5 2 1 4

108)  கீழ்கண்ட நபர்களூள் பொருந்தாத நபரைக் கண்டுபிடி?.

A வேலூநாச்சியார்.

B குயிலி.

C உடையாள்.

*D வடிவுநாச்சியார்.

109)      வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் நோய் எது

A] டெர்மாடிடிஸ்

*B] ஸ்கர்வி

C] பெரி பெரி

D] ரிக்கட்ஸ்

110)       இந்தியாவில் வேலைவாய்ப்பின் முதன்மை தன்மை என்ன

A விவசாயம் சார்ந்த

B தொழில் சார்ந்த

C திறன் சார்ந்த

*D பல பரிமாணங்கள்

111)        தென்நாட்டு ஜான்சிராணி என்று மஹாத்மாவால் அழைக்கப்பட்டவர் யார்?.

A லீலாவதி.

B அம்புஜத்தம்மாள்.

C நீலாம்பிகை.

*D அஞ்சலையம்மாள்.

112)       விழி மூடிக்கொள் பிடித்துக் கொள் என்பது எதற்கான ஒத்திகை ஆகும்?

*A) நிலநடுக்கம்

B) சுனாமி

C) தீ

D) கலவரம்

113)       இந்தியாவில் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக் கதிர் எனப் போற்றப்படுபவர் யார்?

 A. காந்தி

 B. தந்தை பெரியார்

*c. அம்பேத்கர்

 D. இரட்டைமலை சீனிவாசன்

114)  பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைத் தேர்வு செய்க.

கூற்று - 1; ஊழல் என்பது சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

கூற்று - 2; டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் புள்ளிவிபிரப்படி 2024 ஆம் ஆண்டு 40 மதிப்புடன் இந்தியா 86வது இடம் வகிக்கிறது.

கூற்று - 3; 2023 ஆம் ஆண்டு ஊழல் தரவரிசை பட்டியலில் இந்தியா 93வது இடம் வகித்துள்ளது.

*A) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

B) கூற்று 1 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

D) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

115)  மத்திய அரசின் உதவியோடு தமிழகத்தில் செயல்பட்டு வரும் நோய்த் தடுப்புத் திட்டங்களில் சரியானவற்றைத்தேர்ந்தெடு.

1) தேசிய மலேரியா ஒழிப்புத் திட்டம்

2) யானைக்கால் நோய் தடுப்புத் திட்டம்

3) காசநோய் ஒழிப்புத் திட்டம்

4) தொழுநோய் ஒழிப்புத் திட்டம்

A) 1 மட்டும் சரி

B) 2 மட்டும் சரி

C) 3 மட்டும் சரி

*D) 1,2,3,4 சரி

116)  பள்ளி மாணவர் நலத்திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு எது?

A) 1961

B) 1962

C) 1963

*D) 1964

117)  பின்வருவனவற்றுள் தவறான கூற்றைக் காண்க

A. 1926 ஆம் ஆண்டு நவஜவா பாரத் சபா பகத்சிங் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது

B. 1929 ஆம் ஆண்டு ஏப்ரல் எட்டாம் நாள் பகத்சிங் மற்றும் படுகேசவதத் ஆகியோர் டெல்லியில் உள்ள சட்டமன்றத்தின் மீது குண்டுகள் வீசினர்

c. 1931 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் நாள் பகத்சிங் ராஜ் குரு சுகதேவ் ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர்

*d. 1930 ஆம் ஆண்டு பகத்சிங் சிட்டகம் ஆயுதப் படைத்தளத்தைத் தாக்கினார்

118)  கீழ்கண்ட கூற்றுகளில் இருந்து சரியான கூற்றைத் தேர்வு செய்க.

கூற்று 1; முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கிமு 3800 இல் பாபிலோனியாவில் எடுக்கப்பட்டது.

கூற்று 2; நவீன உலகில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது முதல் முறையாக வியட்நாமில் எடுக்கப்பட்டது.

கூற்று 3; இந்தியாவில் 1872 ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்யப்படுகிறது.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

B) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

*D) மேற்கண்ட எதுவும் இல்லை

119)  லோக் ஆயுக்தா மசோதா முதன்முதலில் எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது?

A) மகாராஷ்டிரா

B) குஜராத்

*C) ஓடிஸா

D) தமிழ்நாடு

120)  சீனீவாச காந்தி நிலையம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியவர் ?.

A அசலாம்பிகை அம்மாள்.

B ராமாமிர்தம் அம்மாள்.

*C அம்புஜத்தம்மாள்.

D கோதைநாயகியம்மாள்.

121)       இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பல்வேறு துறைகளின் இறங்கு வரிசையில் சரியான வரிசை எது

A முதன்மைத் துறை, இரண்டாம் நிலைத் துறை, மூன்றாம் நிலைத் துறை

B முதன்மைத் துறை, மூன்றாம் நிலைத் துறை, இரண்டாம் நிலைத் துறை

*C மூன்றாம் நிலைத் துறை, இரண்டாம் நிலைத் துறை, முதன்மைத் துறை

D இரண்டாம் நிலைத் துறை, மூன்றாம் நிலைத் துறை, முதன்மைத் துறை

122)      உலக உணவு தினம் என்று கடைபிடிக்கப்படுகிறது

A] ஆகஸ்ட் 16

*B] அக்டோபர் 16

C] ஆகஸ்ட் 17

D] அக்டோபர் 17

123)      இந்தியர்களின் நலனுக்காக எத்தகைய இன்னல்களையும் ஏற்பேன்; என் இன்னுயிரையும் தருவேன் என்று கூறியவர் யார் ?

A ஜான்சிராணி.

B அன்னிபெசண்ட்.

*Cதில்லையாடி  வள்ளியம்மை.

D தர்மாம்பாள்.

124)      106 வது திருத்தச் சட்டம் பெண்களுக்கு____இல் முக்கியத்துவம் அளிக்கிறது?

A) சமத்துவக் கல்வி

*B) அரசியல் பங்கேற்பு

C) வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு

D) பொருளாதாரத்தில் முக்கியத்துவம்

125)      நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருமுறை இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுகள் எவை

A. 1937 மற்றும் 1939

*b. 1938 மற்றும் 1939

C. 1940 மற்றும் 1942

D. 1939 மற்றும் 1943

126)      பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை துவங்கப்பட்ட ஆண்டு எது?

A) 1954

*B) 1955

C) 1956

D) 1957

127)      சமீபத்தில் வெப்பச் சலனத்தை ஓர் பேரிடராக எந்த மாநிலம் அறிவித்துள்ளது?

A) கேரளா

B) மகாராஷ்டிரா

*C) தமிழ்நாடு

D) ஆந்திரா

128)      மகாத்மா காந்தி அவர்களால் குருதேவ் என்று அழைக்கப்பட்டவர் யார்?

A. சித்தர் அஞ்சல் தாஸ்

*b. ரவீந்திரநாத் தாகூர்

C. தேவேந்திரனாத்  தாகூர்

D. சத்யேந்திரநாத் தாகூர்

129)  தமிழக அரசு உயர் கல்வி உறுதித்திட்டம் யாருடைய பெயரில் வழங்கிவருகிறது?.

A முத்துலெட்சுமி ரெட்டி.

B தர்மாம்பாள்.

*C மூவாலூர் ராமாமிர்தம்  அம்மாள்.

D அன்னை தெரசா.

130)      தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களைத் தேர்ந்தெடு.

*A) 2 மற்றும் 3

B) 3 மற்றும் 4

C) 5 மற்றும் 6

D) 6 மற்றும் 7

131)       தமிழ்நாடு பல்லுயிர் அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம் எங்கு அமைய உள்ளது?

A) திருநெல்வேலி

B) மதுரை

*C) கன்னியாகுமரி

D) சிவகங்கை

132)      முதல் சட்டமன்ற தமிழக பென் உறுப்பினர் யார்?.

A முத்துலெட்சுமி ரெட்டி.

*B ருக்குமனி லட்சுமிபதி.

C தாமரைக்கனி அம்மாள்.

D மலர்முகத்தம்மாள்.

133)      பின்வரும் கூற்றுக்களை ஆராய்க.

கூற்று - 1; மத்திய புலனாய்வு அமைப்பு 1963 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

கூற்று 2; இந்த அமைப்பானது மத்திய பணியாளர் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

கூற்று 3; இவ்வமைப்பானது அரசியலமைப்பு சார் அமைப்போ அல்லது சட்டப்பூர்வ அமைப்போ அல்ல. புலனாய்வு & ஆலோசனை கூறும் அமைப்பாக மட்டுமே செயல்படுகிறது.

A) கூற்று 1 மற்றும் 2 மட்டும் சரி

B) கூற்று 1 மற்றும் 3 மட்டும் சரி

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும் சரி

*D) அனைத்து கூற்றுகளும் சரி

134)     இந்தியா அரசால் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் எந்த ஆண்டில் இருந்து தொடங்கப்பட்டது

A 1991

B 1988

*C 1993

D 1995

135)      பின்வருவனவற்றுள் சரியான கூற்றைக் காண்க

 1.சோழர் கால வணிகக் குழு அமைப்பில் இரண்டு பிரிவுகள் காணப்பட்டன.

 2. கடல் கடந்து வாணிகம் செய்பவர் அஞ்சு வண்ணத்தார் என அழைக்கப்பட்டனர்

3. உள்நாட்டில் வணிகம் செய்பவரை மணி கிராமத்தார் என்று அழைத்தனர்

a. இரண்டு மற்றும் மூன்று சரி

B. ஒன்று மற்றும் மூன்று சரி

C. மூன்று மட்டும் சரி

*d. ஒன்று இரண்டு மற்றும் மூன்று சரி

136)  இந்தியாவில் எந்தத் துறையில் பெண்கள் அதிக அளவில் பங்கு வகிக்கிறார்கள்

A விவசாயம்

B உற்பத்தி

C அமைப்பு சாரா தொழில்

*D சேவைகள்

137)  இளவுவாரம் என்ற பத்திரிக்கையை நடத்தியவர் யார்?

*A தர்மாம்பாள்.

B ராதாபாய்.

C அம்புஜத்தம்மாள்.

D கிருஷ்ணம்மாள்.

138)      மத்திய அரசின் உணவு மற்றும் உணவு கலப்பட சட்டம் எப்போது இயற்றப்பட்டது

*A] 1954

B] 1959

C] 1963

D] 1953

139)      லோக்பால் என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?

A) அசோக் குமார் சென்

*B) எல் எம் சிங்வி

C) ஆனந்த விசுவாஸ் பட்டேல்

D) சாந்தி பூஷண்

140)      தமிழக முதல் சட்டமன்ற மேலவைப் பெண் உறுப்பினர் யார்?

A ருக்குமனி லட்சுமிபதி.

*B முத்துலட்சுமி ரெட்டி.

C வை.மு.கோதைநாயகி அம்மாள்.

D ராதாபாய்.

141)       பொருத்துக

 A.அன்பில் பட்டயம் 1. சுந்தர சோழன்

 B. திருவாலங்காடு செப்பேடு 2. ராஜேந்திர சோழன்

 C. கரந்தைச் செப்பேடு 3. ராஜராஜ சோழன்

 D. சார்லாட்ச் செப்பேடு வீர ராஜேந்திரன்

*a. 1 3 2 4.

B. 2 1 3 4

 C. 3 1 2 4

D. 2 1 4 3.

142)      கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்டவர் யார்?.

*A கே.பி. சுந்தராம்பாள்.

B ஜானகி.

C தர்மாம்பாள்.

D பத்மாசினி அம்மாள்.

143)      மனித உடலில் சில தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த அளவை தேவைப்படும் ஊட்டச்சத்து எது

A] கார்போஹைட்ரேட்

B] புரதம்

*C] வைட்டமின்

D] கொழுப்பு

144)      நன்கு வளர்ந்த நாடுகளில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் விகிதம் என்ன

A அதிக அளவு

*B குறைந்த அளவு

C நிலையாக இருக்கும்

D ஏற்ற இறக்கம் காணப்படும்

145)      வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகப் பெண் யார்?

A அன்னிபெசண்ட்.

B ரமாபாய்.

*C ராதாபாய்.

D ருக்குமணி லட்சுமிபதி.

146)      கீழ்கண்டவற்றுள் சரியான கூற்றைத் தேர்வு செய்க?

கூற்று 1;: மத்திய தகவல் ஆணையம் தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவு 15 இன் கீழ் ஏற்படுத்தப்பட்டது.

கூற்று 2; தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் 65 வயது அல்லது 5 ஆண்டுகள் ஆகும்.

கூற்று 3; தகவல் ஆணையர்களை மறு நியமனம் செய்ய இயலாது.

A) கூற்று 1 மற்றும் 3 மட்டும்

*B) கூற்று 3 மட்டும்

C) கூற்று 2 மற்றும் 3 மட்டும்

D) கூற்று 1 மற்றும் 2 மட்டும்

147)      பொருளாதாரத்தில் நிறுவனங்களால் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, உற்பத்தி காரணிகளுக்கு வெகுமதிகளை வழங்கும்போது அது என்ன அழைக்கப்படுகிறது

A வள இழப்பீடு

B உற்பத்தி வெகுமதி அமைப்பு

*C காரணி கொடுப்பனவுகள்

D பொருளாதார மறுபகிர்வு

148)      பெண்உரிமையை நிலைநாட்ட நீறுபூத்த நெருப்பாய் இல்லாமல் ஞாயிறு ஒளியாய்ச் சுடர்விட்டவர் யார்?.

A முத்துலட்சுமி.

B அன்னிபெசண்ட்.

C அம்புஜத்தம்மாள்.

*D ராமாமிர்தம் அம்மாள்.

149)      கீழ்க்கண்டவற்றுள் உயிரி உரங்களில் அல்லாதது எது

A] ரைசோபியம்

B] அசோஸ் பைரிலம்

C] அசோலா

*D] அக்வா போனிக்ஸ்

150)      மொத்த பயனுள்ள தேவையின் அதிகரிப்பு எதற்கு வழிவகுக்கிறது

A வழங்கல்

*B வேலைவாய்ப்பு

C சேமிப்பு

D வரிவிதிப்பு

151)       காந்திபுராணம் இயற்றியவர் யார்?.

A அம்புஜத்தம்மாள்.

B தர்மாம்பாள்.

C மூவாலூர் ராமாமிர்தம் அம்மாள்.

*D அசலாம்பிகை அம்மாள்.

152)      மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

A) ஸ்ரீ பிரவீன்குமார் ஸ்ரீவஸ்தவா

B) சுரேஷ் என் படேல்

*C) எஸ் ராஜீவ்

D) அரவிந்த குமார்

153)      அரிகேசரி மாறவர்மனை சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர் யார் ?

a. திருநாவுக்கரசர்

*b. திருஞானசம்பந்தர்

C. திலகவதி

D. மாணிக்கவாசகர்

154)  2020ஆம்ஆண்டு பத்மபூஷண் விருது பெற்ற பெண் யார்?.

A நாகம்மாள்.

B வை.மு.கோதைநாயகிஅம்மாள்.

C தர்மாம்பாள்.

*D கிருஷ்ணம்மாள்.

155) ஒரு பொருளாதாரத்தில் புழக்கத்தில் இருக்கும் பணத்தின் மொத்த இருப்புக்கான சொல் என்ன

A மூலதனம்

B பணம்

*C பண வழங்கல்

D நிதி

156)  பொருத்துக

A) சம ஊதிய சட்டம் 1) 2012

B) குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2) 1961

C) போக்சோ சட்டம் 3) 1976

D) வரதட்சணை தடுப்புச் சட்டம் 4) 2005

A) 2 1 4 3

B) 2 3 4 1

C) 4 2 1 3

*D) 3 4 1 2

157)  கிராமப்புற வேலையில்லாத் திண்டாட்டத்தை பின்வரும் வழிகளில் மட்டுமே___________ தீர்க்க முடியும்

A விவசாயத்தை தொழில்மயமாக்குதல்

B விவசாயத்தை இயந்திரமயமாக்குதல்

C விவசாயத்தை பல்வகைப்படுத்துதல்

*D விவசாயத்தை நவீனப்படுத்துதல்

158)  வேள்விக்குடி செப்பேடுகளில் கொடையாளி என்று அழைக்கப்படுபவர் யார்?

A. சுந்தர பாண்டியன்

 *b. ஜெடிலா  பராந்தக நெடுஞ்செழியன்

 C. இரண்டாம் ராஜசிம்மன்

D. வீரபாண்டியன்

159)  வீரதமிழன்னை என்று அழைக்கப்பட்டவர் யார்?.

A நாகம்மை.

*B தர்மாம்பாள்.

C நீலாம்பிகை.

D ராமாமிர்தம்.

160)  தகவல் அறியும் உரிமைச் சட்டம் தமிழ்நாட்டில்____ஆம் ஆண்டு இயற்றப்பட்டது?

A) 2006

B) 2002

*C) 1997

D) 2005

161)  இந்தியாவில் பழங்குடியின மக்களின் முதன்மையான தொழில் எது

*A விவசாயம்

B சுரங்கம்

C கைவினைப்பொருட்கள்

D சேவை

162)  மதுரை கொண்டான் என்று அழைக்கப்படுபவர் யார் ?

A. குலோத்துங்க சோழன்

B. ராஜராஜ சோழன்

C. முதலாம் ராஜேந்திர சோழன்

*d. பராந்தக   சோழன்

163)  நான் கண்ட பாரதம் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?.

A மூவாலூர் ராமாமிர்தம் அம்மாள்.

B தர்மாம்பாள்.

*C அம்புஜத்தம்மாள்.

D நீலாம்பிகை அம்மாள்.

164)  பொருத்துக

A) இடித்துரைப்பாளர் சட்டம் - 1) 2013

B) லோக்பால் சட்டம் - 2) 2005

 C) பணச் சலவை தடுப்புச் சட்டம் - 3) 2014

D) தகவல் அறியும் உரிமைச் சட்டம் 4) 2002

A) 2 3 4 1

B) 4 3 1 2

*C) 3 1 4 2

D) 2 1 4 3

165)  இவற்றுள் முதன்மைத் துறையில் வராதது எது?

A வேளாண்மை

*B உற்பத்தி

C மீன்வளம்

D சுரங்கம்

166)  லீலாவதி யாருடைய மகள்.?.

A அம்புஜத்தம்மாள்.

B நீலாம்பிகை அம்மாள்.

*C அஞ்சலையம்மாள்.

D ராமாமிர்தம் அம்மாள்.

167)  மத்திய கண்காணிப்பு ஆணையம் எந்த ஆண்டு சட்டபூர்வ அமைப்பாக மாற்றப்பட்டது?

A) 1986

*B) 2003

C) 2013

D) 1964

168)  ஆட்டோமொபைல் தொழிலால் "தெற்காசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் எந்த நகரம்

*A சென்னை

B கோயம்புத்தூர்

C மதுரை

D திருச்சிராப்பள்ளி

169)  ஜெகன்மோகினி என்ற பத்திரிகையை நடத்தியவர் யார்?
a
தர்மாம்பாள்..

B நீலாம்பிகை .

*C வை.மு.கோதை நாயகியம்மாள்.

D சரஸ்வதி பாண்டுரங்.

170)  ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்யம் வழங்கும் திட்டம்____முதல் செயல்பட்டு வருகிறது?

A) நவம்பர் 2011

*B) மே 2011

C) பிப்ரவரி 2012

D) ஜூலை 2011

171)  இந்தியாவில் எந்த மாநிலம் அதன் வேலைவாய்ப்பு சூழ்நிலையை பிரதிபலிக்கும் வகையில் அதிக தனிநபர் வருமானத்தைக் கொண்டுள்ளது

A பஞ்சாப்

B தமிழ்நாடு

C ராஜஸ்தான்

*D மகாராஷ்டிரா

172)  தனிநபர் சத்யகிரகத்தில் பங்குபெற்ற தமிழகப் பெண் யார்?.

A ருக்குமனி லட்சுமிபதி .

*B சரஸ்வதி பாண்டுரங்.

C நீலாம்பிகை.

D மணிகர்னிகா.

173)  இந்தியாவில் எந்த மாநிலம் அதிக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெயர் பெற்றது

A கேரளா

B பஞ்சாப்

C ராஜஸ்தான்

*D உத்தரபிரதேசம்

174)  ஊழல் அதிகரிப்பதால் ஏற்படும் பின்வரும் விளைவுகளில் தவறானதைக் கண்டறிக.

A) மக்கள் தொகை வளர்ச்சி

B) குறைவான நாட்டு வருமானம்

*C) வேலைவாய்ப்பின்மை குறைதல்

D) மேற்கண்ட எதுவும் இல்லை

175)  எந்த அரசாங்க சட்டம் அல்லது திட்டம் இந்தியாவின் கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளை வழங்குவதை உறுதி அளிக்கிறது

A இந்தியாவில் தயாரிப்போம்

B பிரதம மந்திரி பீமா யோஜனா

*C மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம்

D பிரதம மந்திரி வேலை வாய்ப்பு திட்டம்