Monday, June 22, 2026

ஆன்சலிவன் பயிற்சிமையத்தின் வாராந்திர மாதிரித்தேர்வு (5) வினாவிடைகள்

குறிப்பு: *குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக் கொள்க.

1. 'மேதினி' என்ற சொல்லின் சரியான பொருளைக் கண்டறிக. (உரிய பொருளைக் கண்டறிதல்)

   நிலவு

   *உலகம்

   வானம்

   கடல்

 

2. கீழ்வருவனவற்றுள் 'தாமரை' என்னும் பொருளைத் தராத சொல் எது?

   கமலம்

   பங்கயம்

   முளரி

*நறுவீ

   

    3. '' என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள் யாது?  

   ஆடு

   பசு

   யானை

   குதிரை

 

4. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்க: (அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்)

   தையல், தோட்டம், தம்பி, தீமை

   *தம்பி, தீமை, தையல், தோட்டம்

   தோட்டம், தையல், தீமை, தம்பி

   தீமை, தம்பி, தோட்டம், தையல்

 

5. 'தஞ்சாவூர்' என்ற ஊர்ப்பெயரின் சரியான மரூஉ எது? (ஊர்ப்பெயர்களின் மரூஉ)

   தஞ்சை

   மன்னை

   மயிலை

   புதுவை

 

6. கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு: "வானில் ________ தோன்றினால் மழை பொழியும்."

   *முகில்

   நட்சத்திரம்

   கதிரவன்

   சந்திரன்

 

7. 'ஒரு' , 'ஓர்' பிழை திருத்துக: "________ ஊரில் ________ அரசன் இருந்தான்." (பிழை திருத்துக)

   ஒரு, ஒரு

   ஓர், ஓர்

   ஓர், ஒரு (உயிர் எழுத்தின் முன் 'ஓர்', உயிர்மெய் எழுத்தின் முன் 'ஒரு' வர வேண்டும்)

   ஒரு, ஓர்

 

8. பேச்சு வழக்குச் சொல்லிற்கு இணையான எழுத்து வழக்குச் சொல்லைத் தேர்க: "நேத்து மழ பேஞ்சுது"

   நேற்று மழை பெய்ந்தது

   நேத்து மழை பெய்தது

   *நேற்று மழை பெய்தது

   நேற்றைக்கு மழை பேய்தது

 

9. "பாட்டி கதையைக் கூறினார்" - இது எவ்வகை வினைத் தொடர்

   செயப்பாட்டு வினை

 *செய்வினை

   தன்வினை

   பிறவினை

 

10. பால் பிழையற்ற சரியான தொடரைக் கண்டறிக.

   *அவர்கள் வந்தனர்

   அவள் வந்தது

   அவன் வந்தாள்

   பறவைகள் பறந்தனர்

 

11. திணைப் பிழையைத் திருத்தி எழுதுக:

   மாடுகள் நனைந்தாள்

   *மாடுகள் நனைந்தன

   மாடுகள் நனைந்தான்

   மாடு நனைந்தன

 

12. காலப் பிழையற்ற சரியான தொடரைக் கண்டறிக.

   நேற்று மழை பெய்யும்

   நேற்று வருவேன்

   *நேற்று மழை பெய்தது

   நாளை மழை பெய்தது

 

13. ஆட்டின் இளமைப் பெயர் என்ன?

   கன்று

   *குட்டி

   பிள்ளை

   பறழ்

 

14. சரியான வினை மரபுச் சொல்லைத் தேர்ந்தெடு: "நெசவாளர் ஆடை ________."

   *நெய்தார்

   தைத்தார்

   செய்தார்

   முடைந்தார்

 

15. 'யானைக் கூட்டம்' என்பதை மரபுத் தொகையாக எப்படிக்கூற வேண்டும்?

   யானை மந்தை

   யானைத் திரள்

   யானைச் சவாரி

   *யானைக் கூட்டம் / யானை நிரை

 

16. 'Migration' என்ற ஆங்கிலச்சொல்லிற்கு நேரான தமிழ்ச்சொல் எது?

   ஒவ்வாமை

   *வலசை

   தேடு பொறி

   மரபணு

 

17. 'Natural Resource' என்பதன் சரியான தமிழ்ச்சொல் எது?

   *இயற்கை வளம்

   பல்லுயிர் மண்டலம்

   வனப்பாதுகாவலர்

   வனவியல்

 

18. 'Journalism' என்ற கலைச்சொல்லின் பொருள் என்ன?

   ஒலியியல்

   ஊடகம்

   *இதழியல்

தகவல் தொடர்பியல்

 

19. 'மடைதிறந்த வெள்ளம் போல' - இவ்வுவமைத் தொடர் உணர்த்தும் பொருள் யாது?

   *தடையின்றி மிகுதியாக ஓடுதல்

   மிக மெதுவாகச் செல்லுதல்

   பயனின்றிப் போகுதல்

   ஒற்றுமையாக இருத்தல்

20. 'அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்' - இப்பழமொழி உணர்த்தும் கருத்து என்ன?

   *பரப்பளவை விடச் செய்யும் செயலை ஆழமான கவனத்துடன் செய்ய வேண்டும்

   நிலத்தை அகலமாக மட்டுமே உழ வேண்டும்

   விவசாயம் செய்யக் கூடாது

   ஆழமில்லாமல் மேலோட்டமாக வேலை செய்ய வேண்டும்

 

21. கடியலூர் உருத்திரங்கண்ணனார் பத்துப்பாட்டில் பாடியுள்ள நூல்கள் யாவை?

திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி

*பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை

 சிறுபாணாற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு

 முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை

 

22. அகநானூற்றின் 255-ஆவது பாடலான 'கவின்மிகு கப்பல்' என்ற கவிதையை இயற்றியவர் யார்?

 கடியலூர் உருத்திரங்கண்ணனார்

 தேனரசன்

* மருதன் இளநாகனார்

 காளமேகப் புலவர்

 

23. பாரதிதாசனின் எந்த நாடக நூலுக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது?

 பாண்டியன் பரிசு

 அழகின் சிரிப்பு

 குடும்ப விளக்கு

* பிசிராந்தையார்

 

 

24. 'வெள்ளை ரோஜா', 'பெய்து பழகிய மேகம்' ஆகிய கவிதை நூல்களை எழுதிய ஆசிரியர் யார்?

 காளமேகப் புலவர்

* தேனரசன்

 பாரதிதாசன்

 உருத்திரங்கண்ணனார்

 

 

25. 'திருவானைக்கா உலா', 'சரசுவதி மாலை', 'சித்திரமடல்' ஆகிய நூல்களை இயற்றிய ஆசிரியர் யார்?

* காளமேகப் புலவர்

 கடியலூர் உருத்திரங்கண்ணனார்

 தேனரசன்

 பாரதிதாசன்

 

26. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இதழ்களான 'குயில்', 'தென்றல்' ஆகியவற்றில் கவிதைகள் எழுதிய ஆசிரியர் யார்?

 மருதன் இளநாகனார்

 சமண முனிவர்

* தேனரசன்

 வரதன்

 

27. மணத்துக்கன் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற இக்குறளிள் ஆகுல நீர என்ற தொடரின் சரியான பொருள் யாது?.

அ அறத்தின் வழியில் செல்வது.

ஆ ஆழமான நீர்நிலை போன்றது.

*இ வெறும் ஆறவார தன்மை உடையன.

ஈ மணதுயரத்தை அளிப்பவை.

 

28, அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம் இக்குறளிள் இழுக்கா என்ற சொல்லின் சரியான இலக்கண குறிப்பு யாது?.

*செய்யா என்னும் வாய்பாட்டு எதிர் மறை வினை எச்சம்.

 உறிச்சொற்றோடர்.

ஈறுகெட்ட எதிர் மறை பெயர் எச்சம்.

ஈ முற்று பெறாத வினைமுற்று.

 

29. வள்ளுவர் வீள்நாள் என்று குறிப்பிடுவது எதனை?.

ஒரு மனிதன் வறுமையில் வாடும் நாள்.

*ஒருவன் தன் வாழ்வில் அறச்செயல் ஏதும் செய்யாத நாள்.

மழை பொழியாமல் வாணம் வறண்ட நாள்.

உடலில் நோய் வாய் பட்டு படுத்திருக்கும் நாள்.

 

30. அறன் வழியுறுத்தல் எனும் அதிகாரத்தில் மைய கருத்தாக வள்ளுவர் வழியுறுத்துவது எது?.

துறவரம் புனுவதே மிக சிறந்த அறம்.

செல்வத்தை வாறிவழங்குவதெ அறத்தின் உச்சம்.

விதியை மதியால் வெல்வதெ அறம்.

*மணத்தூய்மையோடு தீயகுணங்களை நீக்கி , தல்லிபோடாமல் அறம் செய்ய வேண்டும்.

 

 

 

31. பொருந்தாச் சொல்லைத் தெரிக.

மொழி

*வார்த்தை

பதம்

கிளவி

 

32. பொருத்துக.

அ. மாநகர்  1. வடசொல்

ஆ. அம்பி  2. திசைச்சொல்

இ. சக்கரம்  3. திரிசொல்

ஈ. பண்டிகை  4. இயற்சொல்

4 2 3 1

*4 3 1 2

3 4 1 2

2 3 4 1

 

33. பொருள்படும்படியான வரிசையி் அமைந்த ஓரெழுத்து தொடரைத் தெரிக.

*ஆ,   ஊ,   ஈ

, ,

,,

அனைத்தும்

 

34. பையில் கை வேண்டும்

மூவில் மே வேண்டும்.

தொடருக்கு ஏற்ற வரிசையைத் தெரிக.

ஒழுக்கம், இளமை, அன்பு, மூப்பு

மூப்பு, இளமை, அன்பு, ஒழுக்கம்

*இளமை, ஒழுக்கம், மூப்பு, அன்பு

அன்பு,மூப்பு, இளமை, ஒழுக்கம்

 

35. பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்தை எவ்வாறு அழைக்கலாம்?

சாரியை

விகாரம்

விகுதி

*சந்தி

 

36. எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டுவது வினைச்சொல் என்றால், இவற்றைக் காட்டாதது எது?

*தொழிற்பெயர்

வினையாலணையும் பெயர்

வினையெச்சம்

வினைமுற்று

 

37. பொருத்துக.

அ. மறதி  1. முதனிலை திரிந்த தொழிற்பெயர்

ஆ. உடன்பாடு  2. முதனிலை தொழிற்பெயர்

இ. கொதி  3. எதிர்மறை தொழிற்பெயர்

ஈ. நடவாமை  4. விகுதி பெற்ற தொழிற்பெயர்

4 3 2 1

2 3 4 1

*4 1 2 3

1 4 3 2

 

38. ‘அவன் மெல்ல நடந்து வந்தான்.’

வேர்ச்சொல் தெரிக.

வா

நட

மெல்ல

*நடந்துவா

 

39. ‘நீ வேட்டி கட்டி முட்டி முறுக்கினாலும், எங்கள் பாட்டிகூடப் பயப்படாது’

தொடரில் இடம்பெற்றுள்ள சொற்கள்  எவை?

*தற்பவம்

தற்சமம்

திசைச்சொல்

திரிசொல்

 

40. கொடுக்கப்பட்டனவற்றுள் பகாப்பதம் எது?

வேலன்

நடித்தாள்

*நீர்

உறுபயன்

 

01, கீழ்கானும் கூற்றுகளுள் எது சரியானது அல்ல?.

கூற்று 1 மனிதனின் கடந்த காலத்தை புவியியல் துனைகொண்டு அறிந்துகொள்ளும் முயற்சியெ தொல்லியலின் அடிப்படையாகும்.

கூற்று 2 தொல்லியல் எனும் சொல் ஆர்க்கியோஷ் (ARCHAEOS) எனப்படும் கிரெக்க சொல்லிருந்து கிடைக்கப்பெற்றது ஆகும்.

கூற்று 3 இதில் ஆர்க்கியோஷ் (ARCHAEOS ) என்றால் தொன்மை , மற்றும் (LOGOS) என்றால் ஆய்வு காரனம் விவாதம் அல்லது அறிவியல் என்று பொருள்படும்.

கூற்று 4 ஆகையால் தொல்லியல் என்பது மனிதனின் கடந்த காலத்தின் எச்சங்கள் மூலம் ஆய்வு செய்யும் ஒரு அறிவியல் ஆகும்.

பதில்கள்.

A கூற்று இரண்டு மூன்று மற்றும் நான்கு.

B கூற்று ஒன்று மற்றும் இரண்டு.

C கூற்று நான்கு மட்டும்.

*D கூற்று ஒன்று மட்டும்.

 

2 ரிசர்வ் வங்கியின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் பணிக் கொள்கை மற்றும் கடன் கட்டுப்பாட்டுக் கருவிகளை அவை தொடங்கப்பட்ட காலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்துக:

 

1 பணப்புழக்கச் சீரமைப்பு வசதி (LAF)

 

2 ஆந்திராந்தர நிலைமை வசதி (MSF)

 

3 சந்தை நிலைப்படுத்தல் திட்டம் (Market Stabilization Scheme - MSS)

 

4 நுகர்வோர் விலை குறியீடு (CPI) அடிப்படையிலான பணவீக்க நெகிழ்வு இலக்கு (Flexible Inflation Targeting)

 

*) 1 - 3 - 2 - 4

 

) 1 - 2 - 3 - 4

 

) 3 - 1 - 2 - 4

 

) 1 - 3 - 4 - 2

 

 3.கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க:

 இமயமலையில் உற்பத்தியாகும் ஆறுகள் அனைத்தும் வற்றாத ஜீவநதிகள் ஆகும்.

 2. சிந்து நதியின் மிகப்பெரிய துணையாறு சீனாப் (Chenab) நதியாகும்.

 3. கங்கை ஆறு திபெத் பகுதியில் 'சாங்போ' என்று அழைக்கப்படுகிறது.

   A) 1, 2 மற்றும் 3 சரி

  * B) 1 மற்றும் 2 மட்டும் சரி

   C) 2 மற்றும் 3 மட்டும் சரி

   D) 1 மற்றும் 3 மட்டும் சரி

 

4, தமிழ்நாடு தொல்லியல் துறை துவங்கப்பட்ட ஆண்டு?.

*A 1961.

B 1967.

C 1969.

D 1977.

 

5 கூற்று (A): இந்திய ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழு (MPC) என்பது ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும் (Statutory Body).

 

காரணம் (R): உர்ஜித் படேல் குழுவின் பரிந்துரையின்படி, 1934-ஆம் ஆண்டின் ரிசர்வ் வங்கிச் சட்டம் 2016-ல் திருத்தப்பட்டு இக்குழு அமைக்கப்பட்டது.

 

*) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம்.

 

) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம் அல்ல.

 

) (A) சரி, ஆனால் (R) தவறு.

 

) (A) தவறு, ஆனால் (R) சரி.

 

6. தீபகற்ப இந்திய ஆறுகள் தொடர்பான கீழ்க்காணும் கூற்றுகளைக் கருத்தில் கொள்க:

 1. கோதாவரி ஆறு 'விருத்தகங்கா' (Vridhaganga) என்று அழைக்கப்படுகிறது.

 2. தீபகற்ப இந்திய ஆறுகளில் நர்மதை, தபதி மற்றும் மாஹி ஆகிய மூன்று ஆறுகள் மட்டுமே கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கின்றன.

 3. காவிரி ஆறு 'தென் இந்தியாவின் கங்கை' என்று அழைக்கப்படுகிறது.

   மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?

   A) 1 மற்றும் 2 மட்டும் சரி

   B) 2 மற்றும் 3 மட்டும் சரி

   C) 1 மற்றும் 3 மட்டும் சரி

  * D) 1, 2 மற்றும் 3 சரி

 

7 ரிசர்வ் வங்கியின் முழுமையான துணை நிறுவனங்கள் (Wholly Owned Subsidiaries) மற்றும் அவற்றின் பணிகளைப் பொருத்துக:

 

குழு அ (துணை நிறுவனம்) - குழு ஆ (முதன்மைப் பணி)

 

1. DICGC - i. டிஜிட்டல் கட்டண முறைகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு

 

2. BRBNMPL - ii. வங்கிகளின் கணினி மேலாண்மை மற்றும் சைபர் பாதுகாப்பு

 

3. ReBIT - iii. வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதம்

 

4. IFTAS - iv. ரூபாய் நோட்டுகளை அச்சடித்தல் மற்றும் மேலாண்மை

 

) 1-iii, 2-iv, 3-i, 4-ii

 

*) 1-iii, 2-iv, 3-ii, 4-i

 

) 1-iv, 2-iii, 3-ii, 4-i

 

) 1-ii, 2-iv, 3-iii, 4-i

 

 

8, மனோரா துறைமுகம் நினைவுச்சின்னம் அமைந்துள்ள மாவட்டம் எது?.

A நாகப்பட்டிணம்.

*B தஞ்சாவூர்.

C இராமநாதபுரம்.

D தூத்துக்குடி.

 

9. கீழ்க்காணும் கூற்றுகளில் 'நமாமி கங்க திட்டம் குறித்த கூற்றுக்களை ஆராய்க

 1. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே, இந்தியாவின் அனைத்து வற்றாத ஜீவநதிகளையும் தூய்மைப்படுத்திப் பாதுகாப்பதாகும்.

 2. கங்கை நதியை மீட்டெடுக்கும் இத்திட்டத்தை, "உலகின் சிறந்த 10 சுற்றுச்சூழல் மறுசீரமைப்புத் திட்டங்களில் ஒன்றாக" ஐக்கிய நாடுகள் சபை (UN) சமீபத்தில் அங்கீகரித்துள்ளது.

   A) கூற்று 1 மட்டும் சரி

  * B) கூற்று 2 மட்டும் சரி

   C) கூற்று 1 மற்றும் 2 இரண்டும் சரி

   D) கூற்று 1 மற்றும் 2 இரண்டும் தவறு

 

10, கீழ்கண்டவற்றுள் பொருந்தாத இனையை கண்டுபிடிக்கவும்.?

A புதுக்கோட்டைபொற்பனைகோட்டை ஆலங்குடி வட்டம்.

B தென்காசிதிருமலாபுரம் சிவகிரி வட்டம்.

*C சிவகங்கைகொந்தகை திருப்பத்தூர் வட்டம்.

கிருஷ்னகிரிசென்னாநூர் ஊத்தங்கரை வட்டம்.

 

11. காவிரி நதிநீர் தீர்ப்பு மற்றும் அதன் வரலாற்றுப் பின்னணி குறித்து கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க:

 1. 1924-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்கும் மைசூர் சமஸ்தானத்திற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம், 50 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் உருவாக்கப்பட்டது.

 2. 1990-ஆம் ஆண்டு மத்திய அரசால் அமைக்கப்பட்ட 'காவிரி நதிநீர் தீர்ப்பாயம்', அதன் இறுதித் தீர்ப்பை 2007-ஆம் ஆண்டில் வழங்கியது.

 3. 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட 'காவிரி மேலாண்மை ஆணையம்', மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டை முறைப்படுத்தும் சட்டப்பூர்வ அமைப்பாகச் செயல்படுகிறது.

 * A) 1 மற்றும் 2 மட்டும் சரி

   B) 2 மற்றும் 3 மட்டும் சரி

   C) 1 மற்றும் 3 மட்டும் சரி

  D) 1, 2 மற்றும் 3 சரி

 

12 ரிசர்வ் வங்கியின் மத்திய இயக்குநர் குழு (Central Board of Directors) மற்றும் அதன் கட்டமைப்பு குறித்த பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்றைத் தேர்ந்தெடு:

 

() ரிசர்வ் வங்கியின் ஒட்டுமொத்த விவகாரங்களும் 21 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய இயக்குநர் குழுவினால் நிர்வகிக்கப்படுகின்றன.

 

() இந்த இயக்குநர் குழுவில் ஒரு ஆளுநர் (Governor) மற்றும் அதிகபட்சமாக நான்கு துணை ஆளுநர்கள் (Deputy Governors) அரசு முகமையால் நியமிக்கப்படுகிறார்கள்.

 

() மும்பை, கல்கத்தா, சென்னை மற்றும் புது தில்லி ஆகிய இடங்களில் உள்ள நான்கு உள்ளூர் வாரியங்களின் (Local Boards) தலைவர்களும் இந்த 21 உறுப்பினர்களில் அடங்குவர்.

 

*() ஆர்பிஐ ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்களின் பதவிக்காலம் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின்படி 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

13, பொருநை என்று அழைக்கப்படும் ஆறு எது.?

A பவானி.

B அமராவதி.

வைகை.C

*D தாமிரபரனி.

 

14. கூற்று மற்றும் காரணத்தை ஆராய்க:

கூற்று (A): தீபகற்ப இந்தியாவின் ஆறுகள் பெரும்பாலானவை பருவகால ஆறுகள் மற்றும் மழைநீரை மட்டுமே ஆதாரமாகக் கொண்டவை.

காரணம் (R): தீபகற்ப பீடபூமியின் நிலத்தோற்றம் கடினமான பாறைகளைக் கொண்டுள்ளதாலும், ஆறுகள் செங்குத்தான சரிவுகளில் பாய்வதாலும், இவை பெரும்பாலும் வற்றக்கூடிய தன்மையைப் பெற்றுள்ளன.

* A) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் (R) கூற்று (A)-விற்கான சரியான விளக்கமாகும்.

B) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் (R) கூற்று (A)-விற்கான சரியான விளக்கமல்ல.

C) கூற்று (A) சரி, ஆனால் காரணம் (R) தவறு.

D) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

 

 

15, தமிழகத்தில் முதன் முதலாக தொல்லியல் அகல்வாய்வு செய்யப்பட்ட இடம் எது.?

A சிவகலை.

B கீழ்நமண்டி.

*C ஆதிச்சநல்லூர்.

D காவேரி பகுதி.

 

16 ரிசர்வ் வங்கியின் கடமைகளில் ஒன்றான "கடைசி கட்டக் கடன் ஈவோன்" (Lender of Last Resort) என்பது எதைக் குறிக்கிறது?

 

1. எந்த ஒரு வணிக வங்கியும் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கும்போது, வேறு எங்கும் கடன் கிடைக்காத பட்சத்தில் ரிசர்வ் வங்கியை அணுகலாம்.

 

2. இது வங்கிகளின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றவும், நிதி அமைப்பில் முறையான சரிவு (Systemic Failure) ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது.

 

3. இந்த வசதியின் கீழ் ஆர்பிஐ தகுதிவாய்ந்த பிணையங்களின் அடிப்படையில் மட்டுமே வணிக வங்கிகளுக்குக் அவசரகால நிதியுதவி வழங்கும்.

 

சரியான தேர்வு எது?

 

() 1 மற்றும் 2 மட்டும்

 

() 2 மற்றும் 3 மட்டும்

 

(*) 1, 2 மற்றும் 3 அனைத்தும்

 

() 1 மட்டும்

 

 

17 கீழ்க்கண்டவற்றுள் பாமினி அரசு பிரிந்த ஐந்து சுல்தானியங்களில் சேராதது எது?

) பீஜப்பூர்

) அகமது நகர்

) கோல்கொண்டா

*) குல்பெர்க்கா

 

18, இந்திய தொல்லியல் துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்.?

A ஆண்ரு ஜகர்.

*B அலெக்ஸ்சாண்டர் கன்னிஃகாம்.

C மார்டிமர் வீலர்.

D சிவானந்தம்.

19 கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:

1 பாமினி அரசு மகாராஷ்டிரா முழுவதிலும், கர்நாடகத்தின் சில பகுதிகளிலும் பரவி இருந்தது.2 பாமினி அரசை பதினெட்டு முடியரசர்கள் ஏறத்தாழ 180 ஆண்டுகள் ஆண்டனர்.

3 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாமினி அரசு ஆறு சுல்தானியங்களாகப் பிரிந்தது.

மேற்கண்ட கூற்றுகளில் சரியானவை எது/எவை?

*) 1, 2 மட்டும் சரி

) 2, 3 மட்டும் சரி

) 1, 3 மட்டும் சரி

) அனைத்தும் சரி

 

20, ரோமானிய நாணயங்கள் மற்றும் மதுகுடுவைகள் கண்டுபிடிக்கப்பட்ட தமிழக தளம் எது.?

A வசவசமுத்திரம்.

*B அரிக்கமேடு.

C கீழ்நமண்டி.

D பல்லாபுரம்.

 

21 கூற்று (A): இந்திய ரூபாயின் வெளிநாட்டு மதிப்பு (Exchange Rate) சர்வதேசச் சந்தையில் கடுமையான வீழ்ச்சியைச் சந்திக்கும் போது, ரிசர்வ் வங்கி தனது வசம் உள்ள டாலர்களைச் சந்தையில் விற்கத் தொடங்கும்.

 

காரணம் (R): டாலரின் சப்ளையைச் சந்தையில் அதிகரிப்பதன் மூலம் ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுத்து, மாற்று விகிதத்தில் தீவிர ஏற்ற இறக்கங்கள் இல்லாதவாறு நிலைத்தன்மையை உண்டாக்குவது ஆர்பிஐ-யின் கடமையாகும்.

 

*() கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரி, மேலும் காரணம் (R) என்பது கூற்று (A)-விற்கான சரியான விளக்கமாகும்.

 

() கூற்று (A) மற்றும் காரணம் (R) ஆகிய இரண்டும் சரி, ஆனால் காரணம் (R) என்பது கூற்று (A)-விற்கான சரியான விளக்கம் அல்ல.

 

() கூற்று (A) சரி, ஆனால் காரணம் (R) தவறு.

 

() கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.

 

22 பின்வரும் கூற்றுகளை ஆராய்ந்து சரியான விடையை அளி:

கூற்று (A): விஜயநகரத்தின் செல்வமும் வளமும், அதற்கு எதிராகத் தக்காண முஸ்லிம் அரசுகளை ஒருங்கிணைத்தது.

காரணம் (R): 1565-இல் நடைபெற்ற தலைக்கோட்டைப் போரில் விஜயநகர அரசை நசுக்குவதில் இவ்வரசுகள் வெற்றி பெற்றன.

) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு.

) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி.

*) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

 

23, தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் அதிகமாக கிடைக்கப்பெற்ற இடம் எது.?

A ஆதிச்ச நல்லூர்.

B சிவகலை.

*C கொடுமணல்.

D மாங்குழம்.

 

24 ரிசர்வ் வங்கியின் தரவுப் புள்ளிவிவரங்கள் மற்றும் முக்கிய வெளியீடுகள் (Publications) குறித்த பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

 

1. நிதியியல் நிலைத்தன்மை அறிக்கை (Financial Stability Report - FSR): இது ரிசர்வ் வங்கியால் ஆண்டுக்கு இருமுறை (Bi-annually) வெளியிடப்படும் நாட்டின் மிக முக்கிய நிதி ஆரோக்கியக் குறிகாட்டியாகும்.

 

2. பணவியல் கொள்கை அறிக்கை (Monetary Policy Report): இது நாட்டில் பணவீக்கத்தின் போக்கு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆய்வு செய்ய 6 மாதங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது.

 

3. 'வங்கி குறைதீர்ப்பாளர் திட்டம்' (Banking Ombudsman Scheme) தற்போது ஒருங்கிணைந்த குறைதீர்ப்புத் திட்டமாக (Integrated Ombudsman Scheme) மாற்றப்பட்டு ஆர்பிஐ-யினால் நேரடியாகக் கண்காணிக்கப்படுகிறது.

 

மேற்கண்டவற்றுள் சரியானவை எது/எவை?

 

() 1 மற்றும் 2 மட்டும்

 

() 2 மற்றும் 3 மட்டும்

 

() 1 மற்றும் 3 மட்டும்

 

*() 1, 2 மற்றும் 3 அனைத்தும்

 

 

25 கீழ்க்காணும் கூற்றுகளைக் கவனி:

1 இரண்டாம் தேவ ராயர் நவீனப் போர்முறைகளில் பயிற்சி அளிப்பதற்காக இஸ்லாமிய வீரர்களைத் தனது படையில் பணியமர்த்தும் முறையைத் தொடங்கினார்.

2 இவர் கஜபதி வம்ச அரசர்களிடம் தோல்வியடைந்தார்.

மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானது?

*) 1 மட்டும் சரி

) 2 மட்டும் சரி

) 1, 2 ஆகிய இரண்டும் சரி

) 1, 2 ஆகிய இரண்டும் தவறு

 

26,  கீழ்கானும் இனைகளில் எத்தனை இனைகள் சரியானது.?

A கீழடி : சங்ககால நகர நாகரீகம்.

B பயம்பள்ளிஇரும்பு பயன்பாட்டிற்க்கான முதல் சான்று.

C ஆதிச்ச நல்லூர்முதுமக்கள் தாழிகள்.

D வெம்பகோட்டைவிருதுநகர் .

2,4.

1,3,4.

1,3.

*ஈ அனைத்தும்.

 

27பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

1 கிருஷ்ணதேவராயர் ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் கஜபதி வம்ச அரசரை ஒடுக்குவதே அவரது முதற்கட்ட பணியாக இருந்தது.

2 இவர் பாமினி சுல்தான் முகமதுஷாவைச் சிறையிலிருந்து விடுவித்து மீண்டும் அரியணையில் அமர்த்தினார்.

3 போர்ச்சுகீசிய பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை கிருஷ்ணதேவராயர் தோற்கடித்தார்.

 

) 1, 2 மட்டும் சரி

*) 2, 3 மட்டும் சரி

) 1, 3 மட்டும் சரி

) அனைத்தும் சரி

 

28 ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டு வெளியீட்டு நடைமுறை குறித்த பின்வரும் கூற்றுகளில் தவறான கூற்றைக் கண்டறி:

 

() ரிசர்வ் வங்கி 1957 முதல் 'குறைந்தபட்ச இருப்பு முறை' (Minimum Reserve System) என்ற முறையைப் பின்பற்றி ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது.

 

() இம்முறையின் கீழ், ஆர்பிஐ தன்னிடம் எப்போதுமே குறைந்தபட்சம் ₹200 கோடி மதிப்பிலான இருப்பை வைத்திருக்க வேண்டும்.

 

() இந்த ₹200 கோடியில், குறைந்தபட்சம் ₹115 கோடி மதிப்பிற்குத் தங்கமும் (Gold), மீதமுள்ள ₹85 கோடி வெளிநாட்டுப் பத்திரங்களாகவும் (Foreign Securities) இருக்க வேண்டும்.

 

*() இந்த குறைந்தபட்ச இருப்புத் தொகையை விடக் கூடுதலாகச் சந்தையில் புதிய பணத்தை அச்சிட வேண்டுமானால், அதற்கு நிகரான 100% தங்கத்தை ஆர்பிஐ கூடுதலாகச் சேமிக்க வேண்டும்.

 

29, 1863 ஆம் ஆண்டு சென்னை பல்லாபுரத்தில் பழைய கற்க்கால கருவிகளை கண்டுபிடித்தவர் யார்.?

A அலெஷ்சாண்டர் ரீ.

B ஐராவதம் மகாதேவன்.

*C இராபர்ட் புருஷ் புட்.

D மார்டிமர் வீலர்.

 

30 கூற்று (A): விஜயநகரப் பேரரசின் படை இந்தியாவில் அதிகம் அச்சுறுத்தக்கூடிய படையாக இருந்தது.

காரணம் (R): வெடிமருந்து ஆயுதங்களும் காலாட்படையும் ஒருங்கிணைக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

*) கூற்று (A) சரி, காரணம் (R) தவறு.

) கூற்று (A) தவறு, காரணம் (R) சரி.

) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

) கூற்று (A) மற்றும் காரணம் (R) இரண்டும் சரி, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

 

 

31. தலைமைச் சுரப்பி எனப்படுவது எது?

A. பீனியல் சுரப்பி

B. அட்ரினல் சுரப்பி

*C. பிட்யூட்டரி சுரப்பி

D. தைராய்டு சுரப்பி

 

32, நெல்மனிகள் நிறைந்த பானைகள் கிடைக்கப்பெற்ற இடம் எது.?

A மாங்குழம்.

*B பொறுந்தல்.

C வெம்பக்கோட்டை.

D பயம்பள்ளி.

 

33 பின்வரும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்களை (Governors) அவர்கள் பதவியேற்ற காலத்தின் அடிப்படையில் பழமையானதிலிருந்து புதியது என்ற வரிசையில் (Chronological Order) முறைப்படுத்துக:

 

1 டாக்டர் மன்மோகன் சிங்

 

2 ஒஸ்போர்ன் ஸ்மித் (Osborne Smith)

 

3 சி.டி.தேஷ்முக் (C.D. Deshmukh)

 

4 ரகுராம் ராஜன்

 

*() 2 - 3 - 1 - 4

 

() 3 - 2 - 1 - 4

 

() 2 - 1 - 3 - 4

 

() 4 - 1 - 3 - 2

 

 

34 கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் (Guilds) இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள வெளிநாட்டுப் பயணி யார்?

) நியூனிஸ்

*) அப்துர் ரஸாக்

) நிக்கோலோ கோண்டி

) டோமிங்கோ பயஸ்

 

35 சுரண்டலுக்கு எதிரான உரிமை - ) சரத்து 29 - 30

 

2 சமய சுதந்திர உரிமை - ) சரத்து 19 - 22

 

3 சுதந்திர உரிமை - ) சரத்து 23 - 24

 

4 கலாச்சாரம் மற்றும் கல்வி உரிமை - ) சரத்து 25 - 28

 

) 1-, 2-, 3-, 4-

 

*) 1-, 2-, 3-, 4-

 

) 1-, 2-, 3-, 4-

 

) 1-, 2-, 3-, 4-

 

36. நரம்பு செல்கள் சுமார் ------ நீளமுடையவை.

A. 10 um

B. 1000 um

C. 20 um

*D. 100 um

 

37 சந்தையில் பணப்புழக்கத்தைக் குறைத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஆர்பிஐ (RBI) பின்வரும் எந்தெந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?

 

1. ரொக்க இருப்பு விகிதத்தை (CRR) அதிகரித்தல்.

 

2. வங்கி விகிதம் (Bank Rate) மற்றும் ரெப்போ விகிதத்தை (Repo Rate) குறைத்தல்.

 

3. திறந்த சந்தை செயல்பாடுகள் (OMO) மூலம் அரசுப் பத்திரங்களை விற்பனை செய்தல்.

 

4. சட்டப்பூர்வ நீர்மை விகிதத்தை (SLR) குறைத்தல்.

 

) 1, 2 மற்றும் 3 மட்டும்

 

*) 1 மற்றும் 3 மட்டும்

 

) 2 and 4 மட்டும்

 

) 1, 3 மற்றும் 4 மட்டும்

 

 

38 இந்திய அரசியலமைப்பின் எந்தச் சரத்து "அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா" (Heart and Soul of the Constitution) என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்டது?

 

) சரத்து 14

 

) சரத்து 19

 

) சரத்து 21

 

*) சரத்து 32

 

39 மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC - Digital Rupee) மற்றும் ஆர்பிஐ-யின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

 

1. டிஜிட்டல் ரூபாய் (e₹) என்பது ஆர்பிஐ-யால் வெளியிடப்படும் ஒரு இறையாண்மை கொண்ட கரன்சி (Sovereign Currency) ஆகும், இது காகிதப் பணத்திற்கு நிகரானது.

 

2. கிரிப்டோகரன்சிகளைப் போல டிஜிட்டல் ரூபாயின் மதிப்பும் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கும்.

 

3. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) மற்றும் கூட்டுறவு வங்கிகளைக் கண்காணிக்க 'தக்ஷ்' (DAKSH) என்ற மேம்பட்ட கண்காணிப்பு மேலாண்மை அமைப்பை ஆர்பிஐ தொடங்கியுள்ளது.

 

எவை சரியான கூற்றுகள்?

 

) 1 மற்றும் 2 மட்டும்

 

) 2 மற்றும் 3 மட்டும்

 

*) 1 மற்றும் 3 மட்டும்

 

) அனைத்தும் சரி

 

 

40, இறந்தவர்களை புதைக்க பயன்படுத்தப்பட்ட பெரிய மன் ஜாடிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன.?

*A முதுமக்கள் தாழிகள்.

B நடுகல்.

C கல்திட்டை.

D கல் படுக்கை.

 

41 பாமினி பேரரசின் தலைநகரம் குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றப்பட்ட ஆண்டு எது?

) 1347

) 1349

) 1421

*) 1429

 

42 கூற்றுகளை ஆய்வு செய்க.

 

1. உச்ச நீதிமன்றம் சரத்து 32-ன் கீழும், உயர் நீதிமன்றங்கள் சரத்து 226-ன் கீழும் நீதிப்பேராணைகளை (Writs) பிறப்பிக்க முடியும்.

 

2. நீதிப்பேராணைகளைப் பொறுத்தமட்டில், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் உயர் நீதிமன்றத்தை விடப் பரந்தது.

 

*) 1 மட்டும் சரி

 

) 2 மட்டும் சரி

 

) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் சரி

 

) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் தவறு

 

43 ஆர்பிஐ-யின் 'முன்னுரிமைத் துறை கடன்' (PSL) விதிகளின் கீழ், வணிக வங்கிகள் தங்களின் மொத்த நிகரக் கடனில் (ANBC) 40%-ஐ குறிப்பிட்ட சில துறைகளுக்கு வழங்க வேண்டும். பின்வருவனவற்றுள் எவை அந்த முன்னுரிமைத் துறைகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன?

 

1. விவசாயம் (Agriculture)

 

2. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME)

 

3. ஏற்றுமுறைக் கடன் (Export Credit)

 

4. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy)

 

5. சமூக உள்கட்டமைப்பு (Social Infrastructure)

 

சரியான விடையைத் தேர்ந்தெடு:

 

) 1, 2 மற்றும் 4 மட்டும்

 

) 1, 2, 3 மற்றும் 5 மட்டும்

 

) 1, 3, 4 மற்றும் 5 மட்டும்

 

*) மேற்கூறிய அனைத்தும் (1, 2, 3, 4, 5)

 

44. சோடா பானத்தில் கரைக்கப்பட்டுள்ள வாயு-------

 A. H2

*B.CO2

C. Cl 2

D.O2

 

45, கீழ்கண்டவற்றை சரியாக பொருத்துக.?

1 கீழடி  சத்யமூர்த்தி,அலெஷ்சாண்டர் ரீ.

2 கொடுமணல்  அமர்நாத் ராமகிருஷ்னா.

3 ஆதிச்ச நல்லூர் கே ராஜன்.

4 அரிக்கமேடு  விமலா பெட்லி, சர் மார்டிமர் வீலர்.

 

பதில்கள்.

A 2,4,1,3.

B 2,3,4,1.

*C 2,3,1,4.

D 2,1,4,3.

 

46 இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாற்றோடு தொடர்புடைய பின்வரும் நிகழ்வுகளைக் காலவரிசைப்படி முறைப்படுத்துக:

 

1. ஆர்பிஐ தலைமையகம் கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு நிரந்தரமாக மாற்றப்படுதல்.

 

2. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் (RBI Act) இயற்றப்படுதல்.

 

3. வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (Banking Regulation Act) அமலாக்கம்.

 

4. பர்மா (மியான்மர்) நாட்டின் மத்திய வங்கியாக ஆர்பிஐ செயல்படுவதை நிறுத்துதல்.

 

*) 2 - 1 - 4 - 3

 

) 1 - 2 - 3 - 4

 

) 2 - 4 - 1 - 3

 

) 4 - 2 - 1 - 3

 

 

 

47 இராணுவச் சட்டம் (Martial Law) அமலில் உள்ள பகுதிகளில் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பு சரத்து எது?

 

) சரத்து 33

 

*) சரத்து 34

 

) சரத்து 35

 

) சரத்து 36

 

 

48 பொருத்துக (அரசியலமைப்பு சட்டத்திருத்தங்கள் மற்றும் உரிமைகள்):

 

1 86-வது திருத்தம், 2002 - ) பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) 10% இடஒதுக்கீடு

 (சரத்து 15(6), 16(6))

 

2 93-வது திருத்தம், 2005 - ) கூட்டுறவு சங்கங்களை அமைக்கும் உரிமை (சரத்து 19(1)(c))

 

3 97-வது திருத்தம், 2011 - ) தொடக்கக் கல்வி பெறும் உரிமை (சரத்து 21A)

 

4 103-வது திருத்தம், 2019 - ) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான உயர் கல்வி நிறுவன இடஒதுக்கீடு (சரத்து 15(5))

 

) 1-, 2-, 3-, 4-

*

) 1-, 2-, 3-, 4-

 

) 1-, 2-, 3-, 4-

 

) 1-, 2-, 3-, 4-

 

49 கூற்று (A): இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்காலத்தில் வணிக வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை (Lending Rates) நேரடியாக நிர்ணயம் செய்வதில்லை.

 

காரணம் (R): இந்தியப் வங்கித் துறையில் நிதிச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, சந்தைப் போட்டிக்கு ஏற்ப வட்டி விகிதங்களைத் தீர்மானிக்கும் சுதந்திரம் வங்கிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது (Deregulation of Interest Rates). இருப்பினும், வட்டி கணக்கிடும் முறைகளுக்கான வழிகாட்டுதல்களை (உதாரணமாக: MCLR, EBLR) ஆர்பிஐ மட்டுமே வெளியிடுகிறது.

 

*) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம் ஆகும்.

 

) (A) மற்றும் (R) இரண்டும் சரி, ஆனால் (R) என்பது (A)-விற்கான சரியான விளக்கம் அல்ல.

 

) (A) சரி, ஆனால் (R) தவறு.

 

) (A) தவறு, ஆனால் (R) சரி.

 

 

50 மூன்றாயிரம் (3,000) கையெழுத்துப் பிரதிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற பெரிய நூலகத்தைக் கொண்டிருந்த கல்வி நிலையம் (மதரசா) எங்கு அமைந்துள்ளது?

) குல்பர்கா

) தவ்லதாபாத்

*) பீடார்

) காண்டகார்

 

51. கதிரியக்கத்தின் தொன்மையான அலகு ------

*A. கியூரி

B. பெக்கோரல்

C. ரான்ட்ஜன்

D. அனைத்தும்

 

52 ஆர்பிஐ மற்றும் இந்திய அரசுடன் தொடர்புடைய முதன்மை நிதி நிறுவனங்களையும் அவை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுகளையும் பொருத்துக:

 

பட்டியல் I (நிறுவனம்) - பட்டியல் II (தொடங்கப்பட்ட ஆண்டு)

 

A) நபார்டு வங்கி (NABARD) - 1) 1988 (ஜூலை)

 

B) தேசிய வீட்டுவசதி வங்கி (NHB) - 2) 1995 (பிப்ரவரி)

 

C) பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் (BRBNMPL) - 3) 1964 (ஜூலை)

 

D) இந்திய தொழில் மேம்பாட்டு வங்கி (IDBI) - 4) 1982 (ஜூலை)

 

*) A-4, B-1, C-2, D-3

 

) A-4, B-2, C-1, D-3

 

) A-1, B-4, C-2, D-3

 

) A-3, B-1, C-2, D-4

 

 

53 பொருத்துக?

 

1 ஆட்கொணர்வு நீதிப்பேராணை (Habeas Corpus) - ) தகுதி முறை வினவுதல்

 

2 தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை (Quo-Warranto) - ) கட்டளையிடும் நீதிப்பேராணை

 

3 செயலுறுத்தும் நீதிப்பேராணை (Mandamus) - ) சட்டத்திற்குப் புறம்பாகக் கைது செய்வதிலிருந்து பாதுகாத்தல்

 

) 1-, 2-, 3-

 

*) 1-, 2-, 3-

 

) 1-, 2-, 3-

 

) 1-, 2-, 3-

 

54, கீழ்கானும் கூற்றுகளோடு தொடர்புடைய தொல்லியல் தளம் எது.?

1, இந்த தளம் தாமிரபரனி ஆற்றங்கரை நாகரீகம் சார்ந்தது.

2, இங்கு கிடைக்கப்பெற்ற முதுமக்கள் தாழிகளில் நெல்மனிகள் கிடைக்கப்பெற்றது குறிப்பிடதக்கது.

3, இங்கு கிடைக்கப்பெற்ற அகல்வாய்வு பொருட்கள் கடந்த 2025 டிசம்பரில் துவங்கப்பட்ட அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

4,இந்த தளம் தூத்துக்கூடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தை சேர்ந்தது.

பதில்கள்.

A ஆதிச்ச நல்லூர்.

*B சிவகலை.

C கொற்கை.

D எட்டயபுரம்.

 

55 பின்வரும் உச்ச நீதிமன்ற வழக்குகளை அவை தீர்ப்பளிக்கப்பட்ட ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக:

 

1 கோலக்நாத் வழக்கு (Golaknath case)

 

2 .கே. கோபாலன் வழக்கு (A.K. Gopalan case)

 

3 மேனகா காந்தி வழக்கு (Maneka Gandhi case)

 

4 கேசவானந்த பாரதி வழக்கு (Kesavananda Bharati case)

 

) 1 - 2 - 3 - 4

 

*) 2 - 1 - 4 - 3

 

) 2 - 4 - 1 - 3

 

) 1 - 4 - 2 - 3

 

56 தொடக்கக் கல்வி பெறும் உரிமையை (Right to Education) அடிப்படை உரிமையாக மாற்றிய அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது?

 

) 42-வது திருத்தச் சட்டம்

 

) 73-வது திருத்தச் சட்டம்

 

*) 86-வது திருத்தச் சட்டம்

 

) 91-வது திருத்தச் சட்டம்

 

57 பாமினி அரசின் எட்டாவது சுல்தானும், மொழியியல் அறிஞராகவும் கவிஞராகவும் திகழ்ந்தவர் யார்?

) முதலாம் முகமது

) அலாவுதீன் அசன் ஷா

*) சுல்தான் பிரோஸ்

) முகமது கவான்

 

58 பின்வரும் கூற்றுகளை ஆராய்க.

 

1. அடிப்படை உரிமைகளைத் திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை என்று கோலக்நாத் வழக்கில் (1967) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

2. கேசவானந்த பாரதி வழக்கில் (1973), நாடாளுமன்றம் அடிப்படை உரிமைகளைத் திருத்தலாம், ஆனால் அரசியலமைப்பின் "அடிப்படை கட்டமைப்பை" (Basic Structure) மாற்றக் கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

 

) 1 மட்டும் சரி

 

) 2 மட்டும் சரி

 

*) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் சரி

 

) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் தவறு

 

59. புதிய அதிர் வெண்களைக் கொண்ட நிறமாலை வரிகள்------ எனப்படுகின்றன.

A. நியூட்டன் வரிகள்

B. ராலே வரிகள்

C. பிரிட்சன் வரிகள்

*D. ராமன் வரிகள்

 

60 பின்வரும் எந்த உச்ச நீதிமன்ற வழக்கில் "தனிமனித ரகசியக் காப்புரிமை" (Right to Privacy) என்பது சரத்து 21-ன் கீழ் ஒரு அடிப்படை உரிமை என்று ஒருமனதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது?

 

) இந்திரா சஹானி வழக்கு (Indra Sawhney case)

 

) மினெர்வா மில்ஸ் வழக்கு (Minerva Mills case)

 

*) கே.எஸ். புட்டசுவாமி வழக்கு (K.S. Puttaswamy case)

 

) எல். சந்திரகுமார் வழக்கு (L. Chandra Kumar case)

1.             ரூ.8,000/- தொகைக்கு ஆண்டுவட்டி 15%த்தில் 3 வருடங்களில் சேர்ந்த கூட்டுவட்டி எவ்வளவு?

 

                (A)           ரூ.4,051/-

                (B)           ரூ.4,167/-

                (C)          ரூ.4,283/-

*              (D)          ரூ.4,325/-

                               

2.             எந்த ஆண்டு கூட்டு வட்டி வீதத்தில் ரூ.1,200/- 02 வருவடங்களில் ரூ.1,348.32/- ஆக மாறும்.

                (A)           7.5%

                (B)           7%

                (C)          6.5%

*              (D)          6%

                               

 

3.             ஒரு 3குறிப்பிட்ட தொகைக்கு 5% ஆண்டு வட்டியில் 3 வருடங்களுக்கு கிடைக்கும் கூட்டுவட்டி மற்றும் தனிவட்டி ஆகியவற்றிற்கு இடையேயுள்ள வித்தியாசம் ரூ.122/-. முதலீடு செய்யப்பட்ட தொகை எவ்வளவு?

                (A)           ரூ.10,000/-

                (B)           ரூ.12,000/-

*              (C)          ரூ.16,000/-

                (D)          ரூ.20,000/-

                               

 

4.             ரூ.5,000/-த்தில் ஒரு வருடத்திற்கு ஆண்டிற்கு கணக்கிடப்படும் பொழுது மற்றும் அரையாண்டிற்கு கணக்கிடப்படும் பொழுது கிடைக்கும் கூட்டுவட்டிகளுக்கிடே உள்ள வித்தியாசம் எவ்வளவு?

*              (A)           ரூ.2/-

                (B)           ரூ.3/-

                (C)          ரூ.4/-

                (D)          ரூ.5/-

                               

 

5.             கூட்டுவட்டியில் முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகஐ 15 வருவடங்களில் 02 மடங்கு ஆகிறது எனில் எத்தனை வருடங்களில் அது 08 மடங்கு ஆகும்?

*              (A)           45 வருடங்கள்

                (B)           48 வருடங்கள்

                (C)          54 வருடங்கள்

                (D)          60 வருடங்கள்

                               

 

6.             பெயரளவிற்கு ஆண்டுவட்டி 6% ஆக உள்ளதற்கு அரையாண்டு வட்டி முறையில் பயனுள்ள வட்டி விகிதம் என்ன?

                (A)           6.06%

                (B)           6.07%

                (C)          6.08%

*              (D)          6.09%

                               

 

7.             ரூ.1,200/-க்கு ஆண்டு வட்டி 10%த்தில் அரையாண்டு வட்டி முறைப்படி கிடைக்கும் தனிவட்டி மற்றும் கூட்டுவட்டி ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசம் என்ன?

                (A)           ரூ.2.50/-

*              (B)           ரூ.3/-

                (C)          ரூ.3.75/-

                (D)          ரூ.4/-

                               

 

8.             ரூ.30,000/- தொகைக்கு 7% ஆண்டுவட்டியில் கிடைக்கும் கூட்டுவட்டி தொகை ரூ.4,347/- எனில் கால அளவு என்ன?

*              (A)           2 வருடங்கள்

                (B)           2 ½ வருடங்கள்

                (C)          3 வருடங்கள்

                (D)          4 வருடங்கள்

                               

 

9.             ரூ.26,500/-க்கு 2 வருடங்களில் கிடைக்கும் கூட்டுவட்டி ரூ.9,775.85/- ஆகும். ஆண்டு வட்டி விகிதம் என்ன?

 

                (A)           12%

                (B)           15%

                (C)          17%

*              (D)          எதுவுமில்லை

                               

 

10.           ரூ.2,000/- கூட்டுவட்டியில் 02 வருடங்களில் ரூ.2226.05/- என மாறுகிறது. வட்டிவிகிதம் என்ன?

 

                (A)           5%

                (B)           5.25%

*              (C)          5.5%

                (D)          6%

                               

 

11.           ரூ.10,000/- தொகையானது அரையாண்டு வட்டி முறையில் கணக்கிடும் பொழுது 02 வருடங்களில் ரூ.14,641/- ஆக மாறுகிறது. எனில் ஆண்டு கூட்டுவட்டி விகிதம் என்ன?

 

                (A)           10%

                (B)           12%

                (C)          16%

*              (D)          20%

                               

 

12.           6 ¼ % ஆண்டு கூட்டுவட்டியில் ஆண்டிற்கு கூட்டுவட்டியாக 03 வருடங்களில் ரூ.4,913/- ஆக மாறும் குறிப்பிட்ட தொகை என்ன?

 

                (A)           ரூ.3,096/-

                (B)           ரூ.4,076/-

                (C)          ரூ.4,085/-

*              (D)          ரூ.4,096/-

                               

 

13.           4% ஆண்டு கூட்டுவட்டி வீதத்தில் 02 வருடங்களில் ரூ.169/- ஆக மாறும் தொகையின் இன்றைய மதிப்பு என்ன?

 

                (A)           ரூ.150.50/-

                (B)           ரூ.154.75/-

*              (C)          ரூ.156.25/-

                (D)          ரூ.158/-

                               

 

 

14.           ரு குறிப்பிட்ட தொகைக்கு 6% ஆண்டு கூட்டுவட்டி வீதத்தில் 3 வருடங்களில் சேர்ந்த கூட்டுவட்டி எவ்வளவு?

 

                (A)           ரூ.10,500/-

*              (B)           ரூ.12,480/-

                (C)          ரூ.13,620/-

                (D)          ரூ.14,800/-

                               

 

15.           ரூ.800/- ஆண்டுவட்டி 10%த்தில் அரையாண்டு வட்டி கூட்டுவட்டியாக கணக்கிடப்படும் பொழுது எத்தனை வருடங்களில் ரூ.926.10/- ஆக மாறும்?

 

                (A)           1 1/3 வருடங்கள்

*              (B)           1 ½ வருடங்கள்

                (C)          2 1/3 வருடங்கள்

                (D)          2 ½ வருடங்கள்

                               

 

16.           ஒரு குறிப்பிட்ட தொகை 06 வருடங்களில் தனிவட்டியுடன் 60% அதிகரிக்கிறது. அதே வட்டி விகிதத்தில் ரூ.12,000/-க்கு 03 வருடங்களுக்கு கிடைக்கும் கூட்டுவட்டி எவ்வளவு?

 

                (A)           ரூ.2,160/-

                (B)           ரூ.3,120/-

*              (C)          ரூ.3,972/-

                (D)          ரூ.6,240/-

                               

 

17.           ரூ.25,500/-க்கு 3 வருடங்களில் கிடைத்த கூட்டுவட்டி ரூ.8,440.50/-.அதே தொகைக்கு அதஏ வட்டி விகிதத்தில் அதே கால அளவிற்கு கிடைக்கும் தனிவட்டி எவ்வளவு?

 

                (A)           ரூ.4,650/-

                (B)           ரூ.5,650/-

                (C)          ரூ.6,650/-

*              (D)          ரூ.7,650/-

                               

 

18.           ரூ.26,000/- தொகைக்கு 2 வருட முடிவில் கிடைக்கும் கூட்டுவட்டி மற்றும் தனிவட்டி ஆகியவற்றிற்கு இடையேயான வித்தியாசம் ரூ.2,994.134/- எனில் ஆண்டுவட்டி விகிதம் என்ன?

 

                (A)           17%

*              (B)           19%

                (C)          22%

                (D)          20%

                               

 

19.           20% கூட்டுவட்டியில் முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகை எத்தனை முழுமையான வருடங்களில் இருமடங்கை விட கூடுதலாக இருக்கும்?

 

                (A)           3

*              (B)           4

                (C)          5

                (D)          6

                               

 

20.           ஒரு தந்தை 17 வயதுடைய மற்றும் 18 வயதுடைய 2 மகன்களுக்கு தனது ரூ.16,400/- தொகையை உயில் எழுதி வைத்தார். அவர்கள் முறையே 20 வயதை அடையும் போது 5% கூட்டுவட்டியில் அவர்கள் இருவருக்கும் சமமான தொகை கிடைக்கவேண்டும் எனில் இளைய மகனின் தற்போதைய பங்கு என்ன?

 

*              (A)           ரூ.8,000/-

                (B)           ரூ.8,200/-

                (C)          ரூ.8,400/-

                (D)          ரூ.8,800/-

                               

 

21.           கூட்டுவட்டியில் முதலீடு செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட தொகை 2 வருடங்களில் ரூ.672/- மற்றும் 3 வருடங்களில் ரூ.714/- என மஆறுகிறது. ஆண்டுவட்டி விகிதம் என்ன?

 

                (A)           5.5%

                (B)           6.0%

*              (C)          6.25%

                (D)          6.75%

                               

 

22.           கூட்டுவட்டியில் முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகை 2 வருடங்களில் ரூ.4,624/- மற்றும் 3 வருடங்களில்  ரூ.4,913/- என மாறுகிறது. அந்த தொகை என்ன?

*              (A)           ரூ.4,096/-

                (B)           ரூ.4,260/-

                (C)          ரூ.4,335/-

                (D)          ரூ.4,360/-

                               

 

23.           ஒரு குறிப்பிட்ட தொகை கடன் வாங்கப்பட்டு 2 தவணைகளாக ஒவ்வொன்றும் 5% கூட்டுவட்டியில் ரூ.882/- செலுத்தப்பட்டது எனில் வாங்கப்பட்ட கடன் தொகை எவ்வளவு?

 

                (A)           ரூ.1,620/-

*              (B)           ரூ.1,640/-

                (C)          ரூ.1,680/-

                (D)          ரூ.1,700/-

                               

 

24.           எந்த தொகைக்கு 5% ஆண்டு வட்டி வீதத்தில் 2 வருடங்களுக்கு கிடைக்கும் தனிவட்டி மற்றும் கூட்டுவட்டி ஆகியவற்றிற்கு இடையிலான வித்தியாசம் ரூ.63/-க்கு சமமாக இருக்கும்?

 

                (A)           ரூ.24,600/-

                (B)           ரூ.24,800/-

*              (C)          ரூ.25,200/-

                (D)          ரூ.25,500/-

                               

 

25.           ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 10% ஆண்டுவட்டியில் 2 வருடங்களுக்கு கிடைக்கும் கூட்டுவட்டி ரூ.525/- ஆகும். அதே தொகைக்கு 2 மடங்கு கால அளவிற்கு அரையாண்டு வட்டி விகிதத்தில் கிடைக்கும் தனிவட்டி எவ்வளவு?

 

                (A)           ரூ.1,000/-

*              (B)           ரூ.500/-

                (C)          ரூ.200/-

                (D)          ரூ.800/-